Pages

Subscribe:

Ads 468x60px

Monday, 5 January 2015

இரத்தத்தை சுத்தம் செய்யும் கோவைக்காய்!

கோவையைப் பற்றி தெரியாதவர்கள் இருக்க முடியாது. வேலிகள், தோட்டங்கள், காடுகளில் இந்த கொடி படர்ந்து காணப்படும். இதன் பழங்கள் இனிப்பு, புளிப்பு, கசப்பு தன்மை கொண்டது. கோவையின் நிறத்தையும், வடிவத்தையும் கொண்டு மூவிரல் கோவை, ஐவிரல் கோவை, நாமக்கோவை, கருங்கோவை என பலவகையாகப் பிரிக்கின்றனர். இதன் இலை, காய், வற்றல், தண்டு, கிழங்கு அனைத்தும் மருத்துவப் பயன் கொண்டவை.

இரத்தம் சுத்தமடைய:

காற்று, நீர், இவற்றின் மாசடைந்த தன்மையாலும் இன்றைய அவசர உணவு (பாஸ்ட்புட்)களாலும் உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைப்பதில்லை. இதனால் இரத்தத்தில் இரும்புச் சத்து குறைபாடு ஏற்படுகிறது. மேலும் பித்த அதிகரிப்பு காரணமாக இரத்தம் அசுத்தமடைகிறது. இதனால் சிறுநீரக கோளாறு ஏற்படுகிறது. இரத்த சோகை மற்றும் இரத்தம் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் உருவாகிறது. இவர்கள் கோவை இலையை நிழலில் உலர்த்தி பொடி செய்து வைத்துக்கொண்டு தினமும் 1 ஸ்பூன் அளவு தேனில் கலந்தோ அல்லது கஷாயமாகக் காய்ச்சியோ அருந்தி வந்தால் இரத்தம் சுத்தமடைவதுடன் உடலும் புத்துணர்வு பெறும்.

கண் நோய் குணமாக:

கண்கள் ஐம்புலன்களில் முதன்மையானது. கண்களால்தான் புறத்தோற்றங்களை காணவும் ரசிக்கவும் முடியும். உடலில் எந்தவகையான பாதிப்பு ஏற்பட்டாலும் கண்கள் முதலில் பாதிக்கப்படும். இன்றைய கம்ப்யூட்டர் யுகத்தில் கண்களுக்குத்தான் அதிக வேலை பளு. இதனால் கண் நரம்புகள் பாதிக்கப்படுகின்றன. இதற்கு கோவை இலையை நிழலில் உலர்த்தி பொடியாக்கி, கஷாயம் செய்து தினமும் காலையில் அருந்தி வந்தால் கண் சம்பந்தப்பட்ட நோய்கள் வராமல் தடுக்கும். மேலும் கண் நரம்புகள் பலப்படும்.

தோல் கிருமிகள் நீங்க:

தோலில் ஏற்படும் சொறி, சிரங்கு இவற்றைக் குணப்படுத்தவும், தோலில் ஏற்படும் அலர்ஜியைத் தடுக்கவும் கோவை இலை பயன்படுகிறது. கோவை இலை, மஞ்சள் தூள், சிறியா நங்கை, வேப்பிலை இவைகளை சம அளவு எடுத்து ஒன்றாக சேர்த்து அரைத்து சிறிது நீர் கலந்து மண்சட்டியில் விட்டு நன்றாக காய்ச்சி ஆறியபின் உடலெங்கும் பூசி ஊறவைத்து பின் குளித்து வந்தால் சொறி சிரங்கு குணமாகும்.

உடல் சூடு : தற்போது கோடைக் காலம் முடிந்து தென்மேற்கு பருவமழை பெய்துள்ளது. இதனால் சுற்றுப்புறத்தில் ஏற்படும் மாற்றங்களால் உடலின் தட்ப வெப்ப நிலையும் மாறுபடுகிறது. இதனால் உடலுக்கு பல பாதிப்புகள் உருவாகிறது. இதற்கு கோவையிலை கசாயம் செய்து அருந்தி வந்தால் உடல் வெப்பம் சீராக இருக்கும். கண்கள் குளிர்ச்சிபெறும் .

வியர்க்குருவை தடுக்க

சிலருக்கு வியர்வை வெளியேறாமல் வியர்க்குருகளாக நீர்கோர்த்துக்கொள்ளும். இவை சில சமயங்களில் வேனல் கட்டிகளாக மாறவும் வாய்ப்புள்ளது. இவர்கள் கோவை இலையை அரைத்து உடலெங்கும் பூசி குளித்து வந்தால் வியர்குரு வராமல் தடுக்கலாம்.கோவை இலையின் சாறுடன் வெண்ணெய் சேர்த்து பூசி வந்தால் சொறி, சிரங்கு, நாள்பட்ட புண் போன்றவை குணமாகும்

தாது புஷ்டியாக

இன்றைய மன அழுத்த பிரச்சனையால் சிலர் தாதுவை இழந்துவிடுகின்றனர். இதனால் இவர்கள் மண வாழ்க்கைக்கு செல்ல பயங்கொள்கின்றனர். மேலும் சிலரோ இதை மறைத்து திருமணம் செய்து பின்னாளில் மணவாழ்க்கை கசந்து விவாகரத்து கோரி நிற்கின்றனர். இப்பிரச்சனை தீர கோவையிலையை நிழலில் உலர்த்தி பொடி செய்து தேன் கலந்து ஒரு மண்டலம் உண்டுவந்தால் இழந்த தாதுவை மீண்டும் பெறலாம். இவர்கள் மருத்துவரின் ஆலோசனை பெறுவது மிகவும் அவசியமாகும்.

கோவையின் பயனை உணர்ந்து அதனைப் பயன்படுத்தி வந்தால் ஆரோக்கியமான உடலைப் பெறலாம்

காதல் எப்போது , எங்கே , எந்த வயதில் பூக்கிறது ?

மனிதனாய் பிறந்த அனைவருக்குமே பருவ வயதில் காதல் பூப்பது உண்டு. பெரும்பாலானவர்களுக்கு கடைப் பதின்ம வயதிலும், இருபதுகளின் ஆரம்பத்திலும் காதல் பூப்பது உண்டு. சிலருக்கு எதிர்பாலினத்தின் மீதான ஈர்ப்பையே காதல் என்று நினைத்துவிட்டு, அனைவரிடமும் காதல் சொல்லி அடி வாங்குவதும் உண்டு. குறிப்பாக 13(teen age) வயதில் பருவ வயதை அடைந்ததும் ஆணுக்கும், பெண்ணுக்கும் எதிர்பாலினத்தின் மீதான ஒரு ஈர்ப்பு வந்துவிடும். ஆனால் சமூக, மன நலங்களால் அவர்கள் காதலில் ஈடுபடுவதில்லை.

பதின்ம வயது : பதின்ம வயதில் ஏற்படும் ஈர்ப்பு சிலருக்கு காதலாய் மாறும் ஆனால் அப்படியான முதல் காதல் அனைவருக்கும் வெற்றியாய் அமையாது. பதின்ம வயதில் ஏற்படும் காதல் வெற்றியளிக்காதமைக்கு பல்வேறு காரணங்கள் உண்டு. சொல்லப் போனால் அது காதல் என்று சொல்வதை விடவும் அது ஓர் ஈர்ப்பு ( INFACTUATION ) எனத் தான் கூறவேண்டும்.

உடலில் ஏற்படும் மாற்றங்கள் குழந்தை என்னும் நிலையில் இருந்து பெரியவர் என்ற நிலைக்கு ஒருவரைத் தயார்ப்படுத்தும் காலமே 13 -19 வரையிலான பருவ காலம். இக்காலத்தில் உடலில் ஏற்பட்ட மாற்றங்கள் மனதை பல்வேறு வகையில் குழப்பி விடும். படிப்பில் கவனம் சிதறும், பெற்றோர் மீதும், நண்பர் மீதும் எரிச்சல் வரும். தமக்குப் பிடித்த தோழன்/தோழியோடு பழக வேண்டும் என்ற ஆவல் தூண்டப்படும். ஆனால் இந்தக் காலத்தில் அவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். காரணம் இந்த பதின்ம வயதினைப் பக்குவமாக மனமும், உடலும் சிதையாமல் கடந்துவிட்டால் அதன் பின்னான காலம் நன்மையாக அமைந்துவிடும். பெரும்பாலானவர்களுக்கு இந்த பதின்ம வயதில் தான் படிப்புச் சிதறும் .

இப்படியாகத் தான் ஒவ்வொருவரின் வாழ்விலும் அந்த பதின்ம வயதில் ஏற்படும் சிறு பிசகும், வாழ்வையே மாற்றி விடுவதுண்டு. காதல் செய்வதோ, உலக விசயங்களை அறிந்துக் கொள்வதோ தவறு என்று சொல்லவில்லை. ஆனால் பதின்ம வயதில் எதற்கு முக்கியத்துவம் கொடுப்பது என பலர் குழம்பி விடுவார்கள். சிலர் உடலையும், மனதையும் கெடுத்து விடுவார்கள். இது பிற்காலங்களில் பெரிய ஆறாவடுவாய் அவர்களின் மனதில் இருந்துவிடுவது உண்டு.


காதல் செய்யும் பருவம் : அப்போது காதல் செய்ய எது சரியான பருவம் எனக் கேட்கின்றீர்களா? காதல் செய்ய இது தான் சரியான பருவம் என்றில்லை. ஆனால் காதல் என்றால் என்ன ? திருமணம் என்றால் என்ன ? வாழ்க்கையினை அடுத்தக் கட்டத்துக்கு நகர்த்துவது எப்படி என அறிந்துக் கொள்ளும் போது தான் அதனால் பாதிப்புக்கள் வராது.

காதல் செய்வது எப்படி : குறிப்பாக பதின்ம வயதினைக் கடந்துவிட்டாலே ஓரளவுக்கு முதிர்ச்சி வந்துவிடும். காதல் யாருடன் எப்போது ஏற்படும் என்று சொல்ல முடியாது. ஆனால் இவர் தான் நமக்கு சரியானவரா என ஒன்றுக்கு இரண்டு முறை யோசித்துவிடுவது நல்லது. காதல் என்பது நீண்டகால COMMITMENT என்பதால் ஒருவர் மற்றொருவரை நன்கு அறிந்துக் கொள்ளவும், புரிந்துக் கொள்ளவும் அவகாசம் எடுத்துக் கொள்ளுங்கள். ஒருவருக்கு ஒருவர் அறிமுகமாகி, நட்பாகி, காதலில் விழுந்தப் பின்னர் காதலர்கள் முக்கியமான பல முடிவுகளை எடுக்க வேண்டும்.

திட்டமிடல் : காதலிலும் குறுகிய காலத் திட்டங்கள், நீண்டக் காலத் திட்டங்கள் வகுத்துக் கொள்வது மிகவும் நல்லது. குறிப்பாக இருவது வயதுப் ஆணும், பெண்ணும் நண்பர்களாகி, இருப்பத்தொரு வயதில் காதலர்களாகி விட்டால். அடுத்து என்ன செய்வது காதலர் என்ற நிலையில் இருந்து குடும்பத்தார் என்ற நிலைக்கு எப்படி வெற்றிகரமாக வாழ்வை மாற்றுவது என்ற திட்டமிடல் அவசியம்.  கல்வியை முடிப்பது, வேலைத் தேடுவது, திருமணத்துக்கான பணம் சேமிப்பது, பெற்றோரிடம் சம்மதம் வாங்குவது, சமூகத்தில் நல்ல முறையில் வாழ்வை தொடங்குவது என படிப்படியான திட்டங்களை வகுத்துக் கொள்வது மிகவும் அவசியம்.

காதலில் எது முக்கியம் : காதலில் மிகவும் முக்கியமானது உண்மை. இருவரும் எதனையும் மறைத்தல் கூடாது. குறிப்பாக தம்மைப் பற்றிய வெளிப்படை உணர்வு மிகவும் அவசியம்.

இரண்டாவது பேசுதல், காதலர்கள் ஆனப் பின் காதல் வசனங்கள் மட்டும் பேசினால் போதாது, அதையும் தாண்டி வெளிப்படையான பேச்சு இருத்தல் வேண்டும். பிரச்சனைகள் எழும் போது பேசித் தீர்த்தல் அவசியம். காதலில் ஈகோவோ, பொறாமையோ கூடவே கூடாது. அப்படி உங்களது காதலர் மீது பொறாமை வந்துவிட்டால் அதனை அவரிடம் கூறிவிடுதல் மிகவும் அவசியம்.

மூன்றாவது மதித்தல், காதலர்கள் ஒருவரை ஒருவர் மதிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். அதனையும் தாண்டி காதலரின் பெற்றோர், குடும்பம் ( அவர்களை உங்களுக்குப் பிடிக்காவிட்டாலும் ), நம்பிக்கைகள், உணவுப் பழக்கங்கள், மத நம்பிக்கைகள் அனைத்தையும் மாற்ற வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் மதிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.

காதலில் பார்க்கக் கூடாதவை : ஒருவரை உங்களுக்குப் பிடித்து விட்டது என்றால் அவரிடம் காதல் சொல்லுகின்றீர்கள். அவர்களுக்கும் உங்களைப் பிடித்து இருக்கின்றது என்றால். அன்று முதல் நீங்கள் காதலர் ஆகி விடுகின்றீர்கள். உடனேயே உங்களது மனத் தேவைகளையும், உடல் தேவைகளையும் நிறைவேற்றிக் கொள்ள முயற்சிக்காதீர்கள். அது உண்மையான காதலாக அமையாது. காதலர் ஆகும் வரை அவர்களை உயர்த்தி வைத்திருப்பீர்கள், ஆனால் காதலர் ஆனவுடம் எதோ அவர்கள் உங்களது அடிமைகளைப் போல நடத்தாதீர்கள். 

Friday, 2 January 2015

வீட்டு வைத்திய குறிப்புகள்!

சுக்கு, மிளகு, திப்பிலி, இஞ்சி, புளி, துளசி, பேரிக்காய், கேரட், நன்னாரி, சோற்றுக்கற்றாழை, சோம்பு, சுரைக்காய், பூசணிக்காய், விளாம்பழம், அமுக்கிராகிழங்கு, கரிசலாங்கண்ணி கீரை மற்றும் கீழாநல்லி இவையனைத்தும் எளிமையாக கிடைக்கும் அல்லது ஏற்கனவே வீட்டில் பயன்படுத்தும் பொருட்களாகும். இவையனைத்தும் மனிதனுக்கு ஆரோக்கியத்தைக் கொடுக்கும் இயற்கையான மருத்துவ குணங்கள் கொண்டவை.

1.சுக்கு,மிளகு,திப்பிலி
இந்த மூன்றையும் இடித்து வைத்துக் கொண்டால் காய்ச்சல், இருமல், ஜலதோஷம் முதலியவற்றின் போது இவற்றைக் கஷாயமாகப் போட்டு அருந்தினால் உடனே குணம் கிடைக்கும்.மற்ற நாட்களில் சுக்கு காபி அல்லது மல்...லி காபி தினமும் ஒரு வேளை அருந்தி வரவேண்டும்.இதனால் கொலஸ்ட்ரால் பிரச்சனை தினமும் கட்டுப்படுத்தப்படும்.

2.இஞ்சி
தினமும் உணவில் இஞ்சி சேர்த்தால் உடல் வலியோ செரிமானக் கோளாறோ ஏற்படாது.வயதானவர்கள் பசியில்லை என்று சொல்ல மாட்டார்கள். குழந்தைகளும் நன்கு சாப்பிடுவார்கள்.

3.புளி
சாம்பாரிலும் இரசத்திலும் சேரும் புளியில் வைட்டமின் பி மற்றும் சி,டார்டாரிக் அமிலம்,கால்சியம் முதலியன உள்ளன. இந்த டார்டாரிக் அமிலம், அதிக மாவுப் பொருட்களால் உடல் நலம் கெடாமல் பார்த்துக் கொள்கிறது. எனவே,காய்ச்சல், ஜலதோஷம் முதலியவை தாக்கினால் மிளகு, பூண்டு,புளி சேர்த்த இரசம் தவறாமல் ஒரு டம்ளராவது அருந்துங்கள்.சாம்பார் தினமும் இடம் பெறட்டும்.

4.துளசி
துளசி இலைக்கு மன இறுக்கம், நரம்புக் கோளாறு, ஞாபகச் சக்தி இன்மை,ஆஸ்துமா,இருமல் மற்றும் பிற தொண்டை நோய்களை உடனுக்குடன் குணமாக்கும் சக்தி உண்டு. துளசி இலைச் சாறில் தேன், இஞ்சி முதலியன கலந்து ஒரு தேக்கரண்டி அருந்தலாம். சளி,இருமல் உள்ள குழந்தைகளுக்கு தினமும் மூன்று வேளை மூன்று தேக்கரண்டி இந்த துளசிக் கஷாயம் கொடுத்தால் போதும்.ஆங்கில மருத்துவத்தில் தரப்படும் ஆன்டிபயாட்டிக்குகள் நல்லதல்ல.

5.பேரிக்காய், காரட்
இவற்றில் புற்று நோயை குணமாக்கும் போரான் என்ற உப்பு இருக்கிறது.மூட்டுகளில் வலி இருந்தால் கொஞ்ச நாளைக்காவது மூலிகை நன்கு சேர்த்து வரவும்.

6.நன்னாரி
உலர்ந்த நன்னாரி வேரை இடித்து வைத்துக் கொள்ளவும்.தினமும் 30 கிராம் அளவு வேரை தேனீராகவோ அல்லது சர்பத்தாகவோ தயாரித்து அருந்தி வந்தால் உடலுக்குச் சத்து கிடைக்கும்.இரத்தம் சுத்தமாகும்.எல்லா உறுப்புகளும் சீரகச் செயல்படும்.காய்ச்சலின் போது நன்னாரி டீ அருந்தினால் உடனே உடல் வியர்த்து காய்ச்சல் பறந்து விடும்.

7.சோற்றுக் கற்றாழை
சோற்றுக் கற்றாழை இலையின் சாறு மந்தமான சிந்தனை சக்தி,மலட்டுத் தன்மை,கல்லீரல் கோளாறுகள் மற்றும் குழந்தைகளின் குடலில் உள்ள பூச்சிகளுக்கு நல்ல மருந்தாகும்.

8.சோம்பு
உணவில் சேரும் சோம்பு கண் கோளாறுகளைத் தடுக்கிறது.சோம்புக் கஷாயம் மாதவிலக்குக் கோளாறுகளை ஆஸ்துமாவுக்கு போடும் ஊசி போல உடனே மட்டுப்படுத்துகிறது.

9.சுரைக்காய்,பூசணிக்காய்
இவை சிறுநீரகக் கோளாறுகளை குணமாக்குகிறது.நீரிழிவு நோய்களும்,கொழுத்த சரீரம் உள்ளவர்களும் தினமும் இவற்றைச் சாப்பிட்டால் உடல் குளிர்ச்சியாக இருக்கும்.

10.விளாம்பழம்
வயிற்றுப் பொருமல்,தொந்தி முதலியவற்றை விளாம்பழம் எளிதில் குணப்படுத்துகிறது.

11.அமுக்கிரா கிழங்கு
இதய நோயாளிகளும்,சோர்வானவர்களும் இரண்டு கிராம் அமுக்கிரா கிழங்குத் தூளைப் பாலில் கலந்து சாப்பிடவும்.புதுமணத் தம்பதிகள் நான்கு கிராம் பவுடரை பாலில் கலந்து அருந்தவும்.

12.கரிசலாங்கண்ணி கீரை,கீழாநெல்லி
கல்லீரல் கோளாறுகள் கரிசலாங்கண்ணிக் கீரைச் சாறால் எளிதில் குணமாகும்.குடிப்பழக்கமும்,மஞ்சள் காமாலையுமிருந்தால் கரிசலாங்கண்ணிக் கீரையுடன் கீழாநெல்லியையும் சேர்த்து அரைத்து ஒரு நாட்டு நெல்லிக்காய் அளவு எடுத்து மோரில் கலந்து குடித்து வரவும். கரிசலாங்கண்ணிக் கீரைப் பொடி தோல் நோய்களை படிப்படியாகக் குணப்படுத்தும்.

சர்க்கரை நோயாளிகளுக்கு அருகம்புல் சாறும்,வாத நோயாளிகளுக்கு சிற்றாமுட்டி வேர்த் தைலமும் கெட்டிச் சளிக்கு ஆடா தொடைச் சாறை தேனுடன் சேர்த்து சாப்பிடுவதும் கைகண்ட மூலிகை மருந்துகளாகும்.

Thursday, 4 December 2014

ஆணுக்கு தந்தையாக போகிறோம் என்ற சந்தோஷத்திற்கு பின் உள்ள பயங்கள்!

ஒரு ஆணுக்கு தந்தையாக போகிறோம் என்றால் அதை விட சந்தோஷம் வேறு எதுவாக இருக்க போகிறது? அவனுடைய குழந்தையை கையை பிடித்து கொண்டு, இந்த உலகத்தை சுற்றி வருவது என்றால் அதில் உள்ள இன்பம் வேறு எதில் உள்ளது? பகல் என்றால் இரவு ஒன்று இருப்பதை போல, இந்த சந்தோஷத்திற்கு பின்னால் பல பயங்களும் ஒளிந்திருக்கிறது. ஆனால் அவைகளை பொதுவாக ஆண்கள் வெளிக்காட்டிக் கொள்வதில்லை.

தந்தையாக போகிற ஒவ்வொரு ஆணுக்கும் தனக்கு தகப்பன் என்று புதிதாக வர போகிற ஸ்தானம் மற்றும் அதிலுள்ள பொறுப்புகளை எண்ணும் போது, ஒரு பயம் இருக்கத் தான் செய்யும். இந்த புதிய மாற்றத்துடன் அவர்கள் ஒன்றி விட முதலில் கஷ்டப்படுவது இயல்பாக ஏற்படுவது தான். உண்மையை சொல்ல வேண்டுமானால், கருவை சுமந்து ஒரு குழந்தையை பெற்றெடுக்கும் தாய் தான் இந்த கதாநாயகனாக விளங்குகிறாள். இருப்பினும் தந்தையாக போகிறவர்கள் தகப்பன் என்ற ஸ்தானத்தில் பயணிக்கும் போது, வாழ்க்கை முழுவதும் அவர்களுக்கு பல பொறுப்புகள் காத்துக் கொண்டு இருக்கிறது.

பயத்தை எல்லாம் கடந்து வருவது தான் தந்தையாக போகிறவர்களின் கடமையாகும். இருப்பினும் தான் அப்பா ஆக போகிறோம் என்ற நினைப்பை ஏற்றுக் கொள்ளவே பலருக்கு பயம் வந்துவிடும். அவர்களின் மனதில் குழப்பும், துயரமும் உலா வந்தாலும் கூட, அவர்கள் அதனை வெளியில் மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்வதில்லை.

புதிதாக தந்தையாக போகிறவர்களுக்கு, தங்கள் குழந்தையை சரியான முறையில் கையில் தூக்குவோமா என்ற பயம் அவர்களை சூழும். அதனுடன் சேர்த்து குழந்தைக்கு சரியாக டையப்பர் மாற்றுவது, அதனை பாதுகாப்பது, வீட்டை குழந்தைக்காக பாதுகாப்பாக மாற்றுவது போன்றவைகளும் பயத்திற்கான சில உதாரணங்கள். இவ்வகை பயன்கள் எல்லாம் இயல்பாக வருவது தான். ஆனால் அவைகளையெல்லாம் மிகைப்படுத்த தேவையில்லை.

அலுவலக வேலை மற்றும் சொந்த வாழ்க்கையை சமமாக சமாளிப்பது என்பது ஒரு தந்தையும் சந்திக்கும் முக்கிய சவாலாகும். உங்கள் குடும்பத்திற்கென நீங்கள் ஒதுக்கும் பொன்னான நேரத்திற்கு ஈடு இணை வேறு கிடையாது. தந்தையாக போகும் ஆண்களுக்கு, தங்கள் வீட்டில் குடும்பத்துடன் செலவிட நேரம் கிடைக்குமா என்பதில் பயம் ஏற்படும். மேலும் தங்களுக்கு ஏற்பட்டுள்ள கவன சிதறலால் தங்களால் வேலையில் ஒழுங்காக கவனம் செலுத்த முடியுமா என்ற பயமும் அவர்களை தொற்றிக் கொள்ளும். மேலும் வேலைப்பளு காரணமாக தங்கள் குழந்தையின் வாழ்க்கையில் நடக்கும் விசேஷமான தருணங்களில் கலந்து கொள்ள முடியாது போன்ற எண்ணங்களால் இவ்வகை கவன சிதறல் உண்டாகும்.

குழந்தை வந்தாலே தந்தையின் வாழ்க்கையில் பல மாற்றங்கள் ஏற்படும். அதனை உங்கள் மனைவி கர்ப்பமாக இருக்கும் காலம் முதலே நீங்கள் கவனிக்க தொடங்கலாம். குழந்தை பிறந்த நேரத்தில், அதற்கென அதிக நேரம் மற்றும் கவனம் செலுத்த வேண்டியிருக்கும். அதனால் உங்கள் மனைவி உங்களிடம் அன்யோநியமாக இல்லாமல் போகலாம். அதற்கு காரணம் அவர்களுக்கு ஏற்படும் களைப்பும் உளைச்சலும். ஆனால் இது நிரந்தரம் அல்ல. குழந்தை வளர வளர இது மெதுவாக மாறும். அதற்கு உங்களிடம் பொறுமை இருக்க வேண்டும்.

பெற்றோராக மாறிய பின் பொறுப்புகள் கூடுவதால், அதற்கென செலவிடும் நேரமும் அதிகமாகும். அதனால் தங்களின் பொது வாழ்க்கை பாதிக்கப்படும் என்ற பயமும் ஆண்களிடம் இருக்கும். தன் நண்பர்களுடன் வெளியில் செல்வது அல்லது பார்ட்டிக்கு செல்வது போன்றவைகள் எல்லாம் தடைபட்டு விடுமோ என்ற பயமும் இருக்கும். இதனால் தங்களின் அனைத்து நண்பர்களையும், அந்த வாழ்க்கையையும் தொலைத்து விடுவோமோ என்ற பயமும் சேர்ந்து கொள்ளும்.

தங்கள் குடும்பத்தில் பார்த்த நிகழ்வுகள் சில ஆண்களுக்கு பயத்தை உருவாக்கும். அதாவது காதல் மழையில் நனைந்து, தன்னுடனேயே இருக்கும் தன் ஆசை மனைவி அடியோடு மாறிவிட்டால்? ஆம், தந்தையாக போகிறவர்களுக்கு வரும் மற்றொரு பயம் - தன் மனைவி தன்னை விட தன் குழந்தையின் மீது தான் அன்பை செலுத்துவாளா? என்ற எண்ணத்தால், அவர்கள் அனுபவித்து வந்த அன்யோநியமான உறவு பாதிக்கப்படும். இப்படி அன்பு இடம் மாறும் போது, இது நியாயமான பயமாகத் தான் விளங்கும்.

தன் மனைவியின் பிரசவத்தின் போது தன்னால் அவளுக்கு துணையாக இருக்க முடியாது என்ற பயம் பல ஆண்களிடம் இருக்கும். பிரசவ வலியில் அவர்கள் துடிப்பது, கை கால்களை முறுக்குவது, ஆங்காங்கே காணப்படும் இரத்தங்களும் நீர்களும் ஆண்களுக்கும் குமட்டலை ஏற்படுத்தி தலை சுற்றச் செய்யும். அதனால் தான் பல ஆண்கள் பிரசவ நேரத்தில் கண்டிப்பாக மனைவிகளுக்கு துணையாக இருப்பதில்லை.

புது வாழ்க்கை தொடங்கும் போது, முடியும் ஒன்றை எண்ணி நாம் ஒன்றுமே செய்ய முடியாது. தந்தையாக போகிறவர்களுக்கு புதிதாக இன்னொரு உயிர் வரப்போவதால், தங்கள் இளமை பறி போய்விட்டது என்ற பயம் உண்டாகும். தந்தை என்றால் தன் குழந்தை மற்றும் குடும்ப தேவைக்காக பாடுபட்டு தன்னுடைய சுகங்கள் மற்றும் தேவைகளை எல்லாம் மூட்டை கட்டி விட வேண்டும் என்ற பயமும் அவர்களை தொற்றிக் கொள்ளும்.

பிரசவத்தின் போது தங்கள் மனைவி அல்லது குழந்தையை இழந்து விடுவோமா என்ற பயம் பொதுவாக ஆண்களுக்கு வருவது தான். ஒரு வேலை மனைவி இறந்துவிட்டால், குழந்தையை தனியாக வளர்க்க வேண்டும் என்ற பயம் சூழும். குழந்தையை பெற்றெடுக்க தாய் வலியால் துடிப்பதை பார்க்கும் போது, குழந்தை பிறப்பு என்பது நம்மை உறைய வைக்கும் ஒரு அனுபவமாக விளங்கும். ஆனால் இவ்வகை பயங்கள் எல்லாம் பகுத்தறிவுக்கு ஒவ்வாத பயங்களாகும். அவைகளை முதலில் அகற்றுங்கள்.
தன் குழந்தைக்கு தான் ஒரு நல்ல தந்தையாக இருக்க முடியுமா என்பது ஒவ்வொரு ஆணின் ஆழ்மனதில் நீடிக்கும் பயமாகும். தன் குழந்தையை பண ரீதியாக எந்த பிரச்சனையுமின்றி வளர்க்க முடியுமா என்ற பயமும் இருக்கும்.

தன் குடும்பத்தையும், குழந்தையின் கல்வியையும் பண ரீதியாக சமாளிக்க வேண்டுமே என்ற பயமும் பல ஆண்களிடம் இருக்கும். குழந்தை பெற்ற பின், தன் மனைவி வேலையை விட்டு நின்று விட்டதால், தன் ஒருவனின் சம்பளத்தை வைத்து குடும்ப தேவைகளை சமாளிக்க முடியுமா என்ற பயமும் உண்டாகும். இது நியாயமான பயமே. பல பேர் குடும்பத்தில் குழந்தை பிறந்தவுடன் இரண்டு பேருக்கு பயன்படுத்தப்பட்ட இருவரின் சம்பளம், இப்போது மூன்று பேருக்கு ஒரு ஆள் சம்பளமாக மாறி விடுவது வாடிக்கையாக நடந்து கொண்டு தான் இருக்கிறது.

Tuesday, 25 November 2014

டயட்டில் இல்லாமல் உடல் எடையை குறைக்க சூப்பரான 25 வழிகள்..!


இன்றைய காலகட்டத்தில் உடல் பருமன் என்பது பல பேர் சந்திக்கும் பிரச்சனை. அதனை கட்டுப்படுத்த பல கடுமையான டயட்டுக்களில் பலர் ஈடுபடுகின்றனர். ஏனெனில் கடுமையான டயட்டுக்களை பின்பற்றினால், உடல் எடையானது வேகமாக குறையும் என்ற எண்ணம் தான் காரணம்.

அவ்வாறு கடுமையான டயட்டை மேற்கொள்ளும் போது, பசியுடன் பல உணவுகளை தியாகம் செய்ய வேண்டியிருக்கும். ஆனால் அதனால் என்ன பயன்? காலப்போக்கில் மெதுவாக உடல் எடை மறுபடியும் கூடி விடும். ஆகவே உடல் எடையை மெதுவாக குறைக்க முயல வேண்டும்.

மேலும் வல்லுனர்களும் கடுமையான டயட் முறையை கையாளாமல், எளிய முறைகளின் மூலம் உடல் எடையை குறைக்க முயலுமாறு கூறுகின்றனர். அதற்கு செய்ய வேண்டியதெல்லாம் வாழ்க்கை முறையில் சில மாற்றங்களை செய்வது தான்.

சரி, இப்போது உடல் எடையை குறைக்க கடுமையான டயட்டை பின்பற்றுவதை விட, கீழ்கூறிய எளிய வலியில்லா வழிமுறைகளை பின்பற்றுங்கள்.



  • தினமும் காலை உணவை உண்ணுங்கள்:-
காலை உணவை தவிர்த்தால் கலோரிகளை எரிக்கலாம் என்று பலர் தவறாக நினைக்கின்றனர். ஆனால் அவ்வாறு தவிர்க்கும் போது ஏற்படும் பசியானது, மற்ற வேளைகளில் அதிகமாக உண்ணத் தூண்டும். காலை உணவை தவிர்ப்பவர்களை விட அதனை உண்ணுபவர்களுக்கே பி.எம்.ஐ குறைவாக இருக்கும் என்று ஆய்வுகள் கூறுகிறது. மேலும் பள்ளியிலோ அல்லது அலுவலகத்திலோ அவர்களால் தான் நன்றாக வேலை செய்ய முடியும். ஆகவே ஒரு கிண்ணம் நிறைய ஓட்ஸை நிறைத்து, அதில் பழங்கள் மற்றும் குறைவான கொழுப்பினை கொண்ட பால் பொருட்களை சேர்த்து காலையில் உண்டால் ஆரோக்கியமான நாள் தொடங்கும்.
  • உணவை நன்றாக மென்று உண்ணுங்கள்:-
சாப்பிடுவதற்கு 20 நிமிடம் என்று ஒரு நேரத்தை ஒதுக்கி மெதுவாக உண்ணுங்கள். இது டயட் மூலம் இல்லாமல் உடல் எடையை குறைக்க முதன்மையான வழியாகும். ஒவ்வொரு வாய் உணவையும் நிதானமாக மென்று உண்ணுங்கள்.
  • அதிகமாக தூங்கி எடையை குறையுங்கள்:-
தினமும் இரவு ஒரு மணிநேரம் கூடுதலாக தூங்கினால், ஒரு வருடத்தில் 7 கிலோ வரை உடல் எடை குறையும் என்று மிஷிகன் பல்கலைகழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஒருவர் கூறியுள்ளார். இவரின் ஆராய்ச்சி படி, தூங்கும் போது உடல் எந்த வேளையில் ஈடுபடாமல் இருப்பதால், சுலபமாக 6 சதவீதம் வரை கலோரிகளை எரிக்கலாம்.
  • அதிக அளவில் காய்கறிகளை உண்ணுங்கள்:-
ஒவ்வொரு நாள் இரவும் ஒரே ஒரு காய்கறியை மட்டும் உண்ணுவதற்கு பதில் மூன்று காய்கறிகளை கலந்து உண்ணுங்கள். அதிக வகை இருந்தால் அதிகமாக உண்ணத் தூண்டும். அதனால் அதிகமான பழங்களையும், காய்கறிகளையும் உண்டு உடல் எடையை குறைக்கலாம்.
  • சூப் உள்ளே வரும் போது, உடல் எடை வெளியேறும்:-
ஒவ்வொரு உணவிற்கு முன்பும் சூப் குடியுங்கள். இது பசியை ஆற்றி குறைவாக உண்ண வைக்கும். கெட்டியான சூப்பை தவிர்க்கவும். ஏனெனில் அதில் அதிக கொழுப்பும், கலோரிகளும் அடங்கியிருக்கும். 


  • அளவு சிறியதாக உள்ள பழைய ஆடைகளின் மீது பார்வையை பதியுங்கள்:-
 உங்களுக்கு பிடித்த சிறிய அளவை கொண்ட பழைய ஆடைகளை கண் பார்வையில் படும் படி மாட்டி வைத்து, அதனை தினமும் பாருங்கள். இவ்வாறு சிறிய அளவுள்ள ஆடையை மனதில் வைத்து பாடுபட்டால், அதை அணியும் அளவிற்கு எடையை குறைக்கலாம்.


  • பிட்சா உண்டாலும் ஆரோக்கியம் கெடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்:-
பிட்சா சாப்பிடும் போது மாமிசத்திற்கு பதில் காய்கறிகளை தேர்வு செய்யுங்கள். இதனாலும் கூட 100 கலோரிகளை எரிக்க முடியும்.
  • சர்க்கரை பயன்பாட்டை குறைக்கவும்:-
சோடா போன்ற சர்க்கரை கலந்த பானங்களை பருகுவதற்கு பதிலாக, தண்ணீர் அல்லது கலோரிகளற்ற பழச்சாறுகளை பருகுங்கள். இதனால் ஒரு 10 டீஸ்பூன் அளவிலான சர்க்கரையை தவிர்க்கலாம்.
  • நீளமான மெல்லிய டம்ளரை பயன்படுத்துங்கள்:-
குட்டையான அகலமான டம்ளரை பயன்படுத்துவதற்கு பதிலாக, நீளமான மெல்லிய டம்ளரை பயன்படுத்துங்கள். இது டயட் இருக்காமல், உங்கள் கலோரிகளை குறைக்க துணை புரியும். இதனை பின்பற்றினால் ஜூஸ், சோடா, ஒயின் அல்லது மற்ற பானங்கள் பருகும் அளவை 25%-30% வரை குறைக்கலாம்.

  • மதுபானம் குடிப்பதை குறைக்கவும்:
மதுபானத்தில் கார்போஹைட்ரேட் மற்றும் புரதத்தை விட, கலோரிகள் தான் அதிகமாக உள்ளது. அது ஒருவரது சுய கட்டுப்பாட்டை இழக்க வைப்பதால் சிப்ஸ், நட்ஸ் மற்றும் இதர நொறுக்குத் தீனியை அதிக அளவில் உட்கொள்ள வைக்கும்.
  • க்ரீன் டீ பருகுங்கள்:-
தினமும் 1-2 டம்ளர் க்ரீன் டீ பருகுவதால் கூட உடல் எடை குறையும்.
  • யோகாவை தேர்ந்தெடுங்கள்:-
யோகா செய்யும் பெண்கள், மற்றவர்களை விட குறைந்த எடையுடன் இருப்பார்கள் என்று ஒரு ஆய்வு கூறுகிறது. உடல் எடை குறைவிற்கும் இதற்கும் என்ன சம்பந்தம் என்று புரியவில்லையா? சீரான முறையில் யோகா செய்பவர்களுக்கு சாப்பிடுவதில் ஒரு மன கட்டுப்பாடு ஏற்படும். உதாரணத்திற்கு, அதிக உணவு இருக்கும் ஒரு உணவகத்திற்கு சென்றாலும் கூட, அளவாக தான் உண்ணுவார்கள். ஏனெனில் யோகாவால் கிடைக்கும் அமைதி, உணவு உண்ணுவதில் கட்டுப்பாட்டை ஏற்படுத்தும்.
  • வீட்டில் உண்ணுங்கள்:-
வாரம் ஐந்து முறையாவது வீட்டில் சமைத்து உண்ணுங்கள். நல்லபடியாக உடல் எடை குறைப்பவர்களின் இரகசியத்தில் இதுவும் ஒன்று என்று ஒரு ஆய்வு கூறுகிறது. இதை பற்றி யோசிப்பதை விட சமைப்பதே சுலபம்.

  • உண்ணும் போது சிறிய இடைவேளை தேவை:-
சிலர் இயற்கையாகவே ஒரு வாய் உணவிற்கும் அடுத்த வாய் உணவிற்கும் சிறிய இடைவேளை விடாமல் சாப்பிடுவார்கள். இந்த இடைவேளையில் பொறுமையாக இருங்கள், வேகமாக அடுத்த வாய் உணவை திணிக்காதீர்கள். பேசி கொண்டே பொறுமையாக தட்டை காலி செய்யுங்கள். இது வயிற்றை அடைக்காமல் பசியை போக்கும். பலர் இதை தவறவிடுவார்கள்.
  • வீரியமிக்க புதினா சூயிங் கம்மை மெல்லுங்கள்:-
நொறுக்குத் தீனி உண்ண தூண்டும் போது, சர்க்கரை இல்லாத வீரியம் அதிகமுள்ள சூயிங் கம்மை மெல்லுங்கள். வேலை முடிந்த நேரம், பார்ட்டிக்கு செல்லும் நேரம், தொலைகாட்சி பார்க்கும் நேரம் அல்லது இணையதளத்தில் உலாவும் நேரம் போன்றவைகள் எல்லாம் கணக்கில்லாமல் நொறுக்குத் தீனியை உண்ணத் தூண்டும் நேரமாகும். அதிலும் பிடித்த சுவையுள்ள சூயிங் கம்மை உண்ணுவதால் மற்ற நொறுக்குத் தீனிகளை மறப்பீர்கள்.
  • உணவு தட்டின் அளவை குறைக்கவும்:-
உணவு தட்டை 12 இன்ச்-க்கு பதிலாக 10 இன்ச்சாக மாற்றுங்கள். தானாகவே குறைத்து உண்ண ஆரம்பித்து விடுவீர்கள். தட்டின் அளவு கூட கூட உண்ணும் உணவின் அளவும் அதிகரிக்கும் என்று கார்னெல் ப்ரையன் வான்சிக் கூறியுள்ளார்.
  • உண்ணும் அளவை சற்று குறைக்கவும்:-
வேறு ஒன்றுமே செய்ய தோன்றவில்லையா? பேசாமல் நீங்கள் உண்ணும் அளவை 10%-20% வரை குறையுங்கள், உடல் எடையும் குறையும். வீட்டிலும் சரி, உணவகத்திலும் சரி நம் தேவைக்கு அதிகமாகவே பரிமாறப்படுகிறது. ஆகவே உண்ணும் உணவின் அளவை கட்டுப்பாட்டில் வைக்க அளந்து உண்ணுங்கள்.
  • உணவை அதிகமாக சமைக்காதீர்கள்:-
உணவை நீண்ட நேரம் சமைத்தால், அதிலுள்ள ஊட்டச்சத்து அனைத்தும் வெளியேறிவிடும். போதுமான ஊட்டச்சத்து இல்லாத போது, உண்ட திருப்தி உங்களுக்கு ஏற்படாது. அதனால் மீண்டும் உண்ணத் தூண்டும். ஆகவே முடிந்த வரை பச்சை காய்கறிகள் மற்றும் சாலட்களை உண்ணுங்கள். அவித்த வேக வைத்த காய்கறிகள் மற்றும் மாமிசங்களை உட்கொள்ளுங்கள். குறிப்பாக மைக்ரோ ஓவனில் சமைப்பதை தவிர்க்கவும்.
  • உணவிற்கு முன் பழங்கள்:-
உணவை உண்ணுவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பு பழங்களை உண்ணுங்கள். இதனால் பழங்கள் வேகமாக செரிமானம் ஆகும். வெறும் வயிற்றில் பழங்களை உண்டால், உடலின் நச்சுத்தன்மை நீங்கி, அதிக ஆற்றல் கிடைத்து உடல் எடை குறையும்.

  • தக்காளி சாஸை பயன்படுத்துங்கள்:-
கொழுப்புச்சத்து உள்ள மற்ற சாஸ்களை விட, தக்காளி சாஸில் கலோரிகளின் அளவு குறைவாக உள்ளது. இருப்பினும் அதனை அளவாக பயன்படுத்துங்கள்.
  • மாமிசத்தை குறைக்கவும்:
அதிக அளவில் சைவ உணவை உட்கொண்டால், அது உடல் எடை குறைய உதவி புரியும். அசைவ உணவை உண்ணுபவர்களை விட, சைவ உணவை உண்ணுபவர்கள் தான் வேகமாக ஒல்லியாவார்கள். இதற்கு பல காரணங்கள் இருந்தாலும், பயறு வகைகள் முக்கிய பங்கு வகிக்கிறது. அதற்கு காரணம் அதில் அடங்கியுள்ள நார்ச்சத்து.
  • 100 கலோரிகளை எரிக்கவும்:-
தினமும் 100 கலோரிகளை எரித்தால், எந்தவித டயட் முறையை பின்பற்றாமல் ஒரு வருடத்தில் 5 கிலோ வரை குறைக்கலாம். இந்த நடவடிக்கைகளில் ஏதாவது ஒன்றை பின்பற்றுங்கள்: 20 நிமிடங்களுக்கு 1 மைல் தூர நடை, 20 நிமிடங்களுக்கு தோட்டத்தில் களை எடுத்தல் அல்லது செடிகள் நடுதல், 20 நிமிடங்களுக்கு புல் தரையை ஒழுங்குபடுத்துதல், 20 நிமிடங்களுக்கு வீட்டை சுத்தப்படுத்துதல் அல்லது 10 நிமிடங்களுக்கு ஓடுதல்.
  • இரவு 8 மணிக்கு மேல் உண்ணாதீர்கள்:-
இரவு உணவை 8 மணிக்கு முன்பே உண்ணுங்கள். அதனால் உணவு நேரத்திற்கு முன்பு நொறுக்குத் தீனியை நொறுக்கமாட்டீர்கள். இதனை பின்பற்ற கஷ்டமாக இருந்தால், இரவு உணவை முடித்ததும் மூலிகை தேநீர் பருகுங்கள் அல்லது பற்களை துலக்குங்கள். இது கண்டதை உண்ண தூண்டாது.
  • உணவு ஏடு தயார் செய்துக் கொள்ளுங்கள்:-
தினமும் என்ன சாப்பிடுகிறீர்கள் என்பதை நேர்மையாக எழுத ஆரம்பியுங்கள். இது தினமும் எவ்வளவு உண்ணுகிறீர்கள் என்பதை தெளிவாக எடுத்துரைக்கும். நீங்கள் செய்ய வேண்டிய முக்கியமான காரியங்களில் இதுவும் ஒன்று. இதை பலர் செய்வதற்கு அலுத்து கொள்வதும் உண்டு. அதற்கு காரணம் இதனை அவர்கள் ஒரு கடினமான வேலையாக பார்ப்பதால் தான். ஆனால் இதற்கு சில நிமிடங்களே ஆகும்.
  • கொண்டாட்டம்:-

சோடா குடிக்கும் பழக்கத்தை விட்டு விட்டீர்களா? அதிகமாக உண்ணும் பழக்கத்தை கைவிட்டு விட்டீர்களா? உங்களை நீங்களே பாராட்டி கொள்ளுங்கள். இதனால் உடல் எடையை குறைக்கும் பணியில் வெற்றிப் பெற போவது உறுதி.

எண்ணெய் வழியும் முகம் உங்கள் அழகை கெடுக்கின்றதா..?


எண்ணெய்ப் பசை சருமம் கொண்டவரா நீங்கள்? வெயில் உங்கள் எண்ணெய்ப் பசையை மேலும் அதிகரிக்கச் செய்து உங்கள் முக அழகை கெடுக்கிறதா? எண்ணெய் பசை நீங்கி அழகாக காட்சியளிக்க சில குறிப்புகள்.

* வெள்ளரிக்காயை தினம் காலையில் முகத்தில் தேய்த்து வர முகத்தில் அதிகமாகக் எண்ணெய் வழிவதை தவிர்க்கலாம். வெள்ளரிச் சாறுடன் பாற் பவுடர் கலந்து தடவினாலும் எண்ணெய் வழியாமல் முகம் பிரகாசமாக காணப்படும்.

* தக்காளி பழச்சாறை முகத்தில் தடவி காய்ந்த பின் கழுவினால் எண்ணெய் வழிவது கட்டுப்படும். தக்காளியுடன், வெள்ளரிப்பழம் அல்லது ஓட்ஸ் சேர்த்து அரைத்து முகத்தில் பூசி 20 நிமிடங்கள் கழித்தும் கழுவலாம்.

*பால் மற்றும் முட்டையின் வெள்ளைக்கருவுடன் கரட் துருவலை கலந்து முகத்தில் தடவினால் அதிகமாக எண்ணெய் வழிவது குறையும்.

* எண்ணெய்ப் பசை சருமத்தினர் அடிக்கடி முகம் கழுவ வேண்டும். சோப்பிற்கு பதில் கடலை மாவை பயன்படுத்தலாம். இதனால், எண்ணெய் வழிவது குறைவதோடு முகம் பளபளப்பாக காட்சியளிக்கும்.

* எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள் மோரை முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால் எண்ணெய் வழிவது குறையும்.

* வெள்ளரிக்காய் சாறு, எலுமிச்சம் பழச்சாறு, சந்தன தூள், பாதாம் பவுடர், தயிர், உருளைகிழங்கு சாறு ஆகியவற்றை சம அளவில் எடுத்து அவற்றை முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு வாரத்தில் இரண்டு நாட்கள் செய்து வந்தால் எண்ணெய் வழிவது குறையும்.

* சோளமாவுடன் தயிர் மற்றும் எலுமிச்சைச் சாறு கலந்து கத்தில் பூசி சிறிது நேரம் கழித்து கழுவினால் முகத்தின் எண்ணெய்ப்பசை நீங்கும்.

* எண்ணெய்ப் பசை சருமத்தினர் வெயிலில் சென்று விட்டு வீட்டிற்கு வந்ததும் சிறிது தயிர், கடலைமாவு மற்றும் எலுமிச்சைச் சாறு கலந்து முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து கழுவினால் அதிகப்படியாக எண்ணெய் வழிவது குறைந்து முகம் பளபளக்கும்.

*எலுமிச்சைச் சாறு, முட்டையின் வெள்ளைக்கரு, திராட்சைச் சாறு ஆகியவற்றை சம அளவு எடுத்துக் கொண்டு அவற்றை நன்றாக கலக்கி முகத்தில் பூச வேண்டும். சிறிது நேரம் கழித்து முகத்தை தண்ணீரால் கழுவ வேண்டும்.

* பப்பாளிக் கூழ், முல்தானி மட்டி, வேப்பிலைப் பொடி ஆகியவற்றை நன்றாக பசை போல் குழைத்து முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவ வேண்டும். இவ்வாறு வாரம் இரண்டு முறை செய்தால் முகத்தில் வழியும் அதிகப்படியான எண்ணெய் தன்மை குறையும். 

Sunday, 2 March 2014

மால்வேர் பாதித்த கம்ப்யூட்டரை கிளீன் செய்ய வேண்டுமா...?


இந்த டிஜிட்டல் உலகம் தரும் அனைத்து கேடு விளைவிக்கும் புரோகிராம்களிடம் இருந்தும், உங்கள் கம்ப்யூட்டரை மிகக் கஷ்டப்பட்டு, பாதுகாக்கிறீர்கள்.

உங்கள் ஆண்ட்டி வைரஸ் புரோகிராமினை அப்டேட் செய்கிறீர்கள். சந்தேகப் படும்படியான இணைய தளங்கள் பக்கமே செல்லாமல் இருக்கிறீர்கள். அதே போல, சந்தேகத்திற்கிடமான மின்னஞ்சல் லிங்க்களில் கிளிக் செய்வதில்லை.

ஜாவா, ப்ளாஷ் மற்றும் அடோப் ரீடர் புரோகிராம்களை அவ்வப்போது அப்டேட் செய்து வைக்கிறீர்கள். அல்லது இவை இல்லாமலேயே, உங்கள் கம்ப்யூட்டரை இயக்கி, உங்கள் பணியை முடிக்கிறீர்கள்.

இப்படி மிகக் கவனமாகக் கம்ப்யூட்டரில் செயல்பட்டாலும், மிகத் தந்திரமான ட்ரோஜன் ஹார்ஸ் வைரஸ் ஒன்று, ஏதோ ஓர் இடத்தில் உள்ள பிழையான இடம் மூலம், உங்கள் கம்ப்யூட்டரில் நுழைந்து, தன்னை அடையாளம் காட்டுகிறது.

சில சில்மிஷ மாற்றங்களை உங்கள் கம்ப்யூட்டரில் ஏற்படுத்துகிறது. வைரஸால் பாதிக்கப்பட்ட ஒரு கம்ப்யூட்டரை, பயம் கலந்த அப்பாவி உரிமையாளராக ஆகிவிட்டீர்கள். இங்கு என்ன செய்யலாம்? அதனையே இங்கு பார்க்கப் போகிறோம்.

பொதுவாக, உங்கள் கம்ப்யூட்டரை ஸ்கேன் செய்து, அதில் உள்ள மால்வேர் புரோகிராமினை நீக்க வேண்டும். பிரச்னையை அறிந்து செயல்படத் தேவையான, படிப்படியான வழிமுறையைக் காணலாம்.


1. என்ன வைரஸ் என்று சோதனை செய்திடுக:

சம்பந்தப்பட்ட பெர்சனல் கம்ப்யூட்டர், நிஜமாகவே பாதிக்கப்பட்டுள்ளதா? ஏனென்றால், ஒரு சிலர், சவுண்ட் கார்ட் சரியாக வேலை செய்திடவில்லை என்றால், உடனே கம்ப்யூட்டரில் வைரஸ் வந்துவிட்டது என்ற முடிவிற்கு வந்துவிடுவார்கள்.

எனவே, பிரச்னை, நாம் வந்துவிட்டதாக நினைக்கும் வைரஸினாலா, அல்லது ஹார்ட்வேர் மற்றும் சாப்ட்வேர் அல்லது பயன்படுத்துபவரின் தவறான அணுகுமுறையா எனக் கண்டறிய வேண்டும்.

உங்கள் பெர்சனல் கம்ப்யூட்டர், வழக்கத்திற்கு மாறாக, மிக மிக மெதுவாக இயங்குகிறதா? அல்லது, நீங்கள் செய்யச் சொல்லாத செயல்பாடுகளைத் தானாகவே மேற்கொள்கிறதா? அப்படியானால், வைரஸ் வந்துவிட்டது என்று எண்ணுவதற்குச் சரியான முகாந்திரம் உள்ளது.

அவ்வாறு முடிவெடுப்பதற்கு முன்னர், Windows Task Manager ஐ இயக்கவும்.இதற்கு விண்டோஸ் டாஸ்க் பாரில், ரைட் கிளிக் செய்து, கிடைக்கும் பாப் அப் மெனுவில், Task Manager என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு Processes என்ற டேப்பினைத் திறக்கவும்.

இப்போது கிடைக்கும் விண்டோவில், சந்தேகப்படும் படியான, விநோத பெயரில் ஏதேனும் ஒரு புரோகிராம் இயங்கிக் கொண்டுள்ளதா எனக் கவனிக்கவும். வைரஸ்கள் எல்லாம், விநோதமான பெயரிலேயே வரும் என நாம் அனுமானிக்கவும் முடியாது.


2. மால்வேர் தான் என் உறுதி செய்திடும் வழிகள்: 

மிக மோசமான மால்வேர் புரோகிராம்கள், நாம் அதனை நீக்க எடுக்கும் வழிகளை மிகச் சாதுர்யமாகத் தடுக்கும். இவற்றை நீக்க நாம் msconfig அல்லது regedit ஆகிய வழிகளில் முயற்சிகளை எடுத்தால், அவற்றை இயக்கவிடாமல், மால்வேர் தடுக்கும்.

அதே போல, கம்ப்யூட்டரில் உள்ள ஆண்ட்டி வைரஸ் புரோகிராம், லோட் ஆகிச் செயல்படாமல் தடுக்கப்பட்டால், மால்வேர் புரோகிராம் ஏதோ ஒன்று உள்ளே தங்கி வேலையைக் காட்டுகிறது என்று உறுதியாக எடுத்துக் கொள்ளலாம்.

சில வேளைகளில், இந்த வைரஸ் புரோகிராமின் செயல்பாடுகள் மிக வெளிப்படையாகவே இருக்கும். நீங்கள் இதுவரை அவ்வளவாகப் பயன்படுத்தாத புரோகிராம் ஒன்று, திடீரென இயங்கத் தொடங்கி, நமக்கு எச்சரிக்கைகளை அளித்து, குறிப்பிட்ட ஒரு செயலாக்க (executable) பைல் ஒன்றை இயக்குமாறு தெரிவித்தால், நிச்சயம் அது ஒரு வைரஸின் வேலையாகத்தான் இருக்கும்.

உங்கள் கம்ப்யூட்டர் முடக்கப்படப் போகிறது எனத் தொடங்கி, குறிப்பிட்ட தளத்தில், பிரச்னையைத் தீர்ப்பதற்கான உடனடி தீர்வு புரோகிராம் இருப்பதாகச் சொல்லி, உங்களை தடுமாற வைத்து, வழி நடத்தி, இடையே, உங்களின் கிரெடிட் கார்ட் அல்லது வங்கி கணக்கு எண்களை கேட்டால், உடனே சுதாரித்துக் கொண்டு, கம்ப்யூட்டர் செயல்பாட்டினையே ஒதுக்கி வைத்து, வைரஸ் நீக்கும் முயற்சிகளைத் தொடங்குங்கள். இப்படி பயமுறுத்திச் சாதிக்கும் பல மால்வேர் புரோகிராம்கள், இணையம் எங்கும் நிறைந்துள்ளது.


3. இணையத்தில் தீர்வினைத் தேடவும்: 

வைரஸ் புரோகிராம் உங்களுக்கு அளித்திடும் எச்சரிக்கை செய்தியிலிருந்து சில சொற்களைக் காப்பி செய்து, வேறு ஒரு கம்ப்யூட்டரில், உங்களுக்கு பழக்கமான தேடல் சாதனம் மூலம் தேடலை மேற்கொள்ளவும்.

இதே வைரஸால் இதற்கு முன் பாதிக்கப்பட்டவர்கள், தங்கள் அனுபவத்தினையும், தாங்கள் பயன்படுத்திய தீர்வுகளையும் இணையத்தில் பதிந்து வைத்திருந்தால், அவை உங்களுக்குக் கிடைக்கும். இதில் கவனமாக இருந்து, சரியான தீர்வுகளை மட்டும் பயன்படுத்திப் பார்க்கலாம். பயன்படுத்திய பின்னர், உங்கள் கம்ப்யூட்டர் முழுவதையும், ஸ்கேன் செய்து மாற்றங்களை உணரவும்.


4. பழைய வைரஸ் ஸ்கேனரால் பயனில்லை: 

நீங்கள் பயன்படுத்தும் ஆண்ட்டி வைரஸ் புரோகிராமினை, கம்ப்யூட்டரில் வந்துள்ள வைரஸ் மடக்கிப் போட்டிருந்தால், நீங்கள் என்ன முயன்றும் தீர்வு கிடைக்காது. எனவே புதிய இன்னொரு ஆண்ட்டி வைரஸ் புரோகிராமினை, யு.எஸ்.பி. ட்ரைவில் அல்லது சிடியில் வைத்து இயக்கிப் பார்க்கலாம். இயக்கிப் பார்க்கும் முன், உங்கள் கம்ப்யூட்டரை சேப் மோடில் இயக்கி, இந்த முயற்சியை மேற்கொள்ள வேண்டும்.


6. சிறிய அளவிலான ஸ்கேனர் பயன்படுத்துக: 

சேப் மோட் இயக்கத்தில், கம்ப்யூட்டரில் அதன் அடிப்படை இயக்கத்திற்குத் தேவையான புரோகிராம்கள் மட்டுமே இயக்கப்படும். ஸ்டார்ட் அப் புரோகிராமில் உள்ள அனைத்து புரோகிராம்களும் இயக்கப்பட மாட்டாது. முக்கியமானவை மட்டுமே இயங்கும். குறிப்பாக, வைரஸ் புரோகிராம் இயக்கத்திற்கு வராது.

இந்த நிலையில் பயன்படுத்தப்படும் புதிய ஸ்கேனர் புரோகிராம் சிறிய அளவில் லோட் ஆகி இயங்கும் வகையில் இருந்தால் நல்லது. சேப் மோடில் கம்ப்யூட்டரை இயக்கத்திற்குக் கொண்டுவர, கம்ப்யூட்டரை இயக்க ஸ்விட்ச் போட்டவுடன், எப்8 கீயை அழுத்த வேண்டும்.

அப்போது, கம்ப்யூட்டரில் சேப் மோட் நிலைக்கான பூட் ஆப்ஷன்ஸ் (boot options) மெனு கிடைத்தவுடன், அதில் இணைய இணைப்பிற்கு வழி தரும் Safe Mode with Networking என்னும் ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும். ஏனென்றால், வைரஸ் நீக்க இணையத்திலிருந்தும் சில வழிகளைப் பெற வேண்டியதிருக்கும்.

சேப் மோடில் கம்ப்யூட்டர் இயங்கி நிலைக்கு வந்தவுடன், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரைத் திறக்கவும். (சேப் மோட் நிலையில், மற்ற பிரவுசர்களைப் பயன்படுத்தினால், சில பிரச்னைகளைச் சந்திக்க வேண்டியதிருக்கும்.

 பின்னர், பிட் டிபண்டர்
 (Bitdefender http://www.bitdefender.com/scanner/online/free.html) போன்ற,நம்பகத் தன்மை பெற்ற ஆன்லைன் வைரஸ் ஸ்கேனரை இயக்கவும்.

மிகச் சிறப்பான முறையில் தீர்வு கிடைக்க இசெட் ஆன்லைன் ஸ்கேனரைப் (http://www.eset.com/us/onlinescanner) பயன்படுத்தலாம். இணையத்தில் கிடைக்கும் ஆன்லைன் ஸ்கேனரில் இது மிகச் சிறப்பாகச் செயல்படுகிறது. அண்மைக் காலங்களில் வெளியாகும் மால்வேர் புரோகிராம்களுக்கேற்ப அடிக்கடி அப்டேட் செய்யப்படும் ஸ்கேனர் இது.

ஸ்கேன் தொடங்கும் முன்னர், பிரவுசரில் Advanced settings சென்று, அதிகபட்ச பாதுகாப்பு நிலைகளில் ஸ்கேனிங் இயக்கம் நடைபெற செட்டிங்ஸ் அமைக்கவும். file archives and browser data போன்றவற்றையும் ஸ்கேன் செய்திடும் வகையில் அமைக்கவும்.

இந்த வகையில் ட்ரெண்ட் மைக்ரோ நிறுவனத்தின் ஹவுஸ்கால் (http://housecall.trendmicro.com/us/)என்ற புரோகிராமினையும் இயக்கலாம். இது இணையத்திலிருந்தே செயல்படும் புரோகிராம் அல்ல. இதனை இன்னொரு கம்ப்யூட்டர் வழியாகத் தரவிறக்கம் செய்து, ப்ளாஷ் ட்ரைவில் வைத்து இயக்கிப் பயன்படுத்தலாம்.

இதில் Scan Now பட்டனை அழுத்தும் முன், Settings மற்றும் Full system scan பட்டன்களை அழுத்தி அந்த செயல்பாடுகளைத் தேர்ந்தெடுக்கவும். இந்த செயல்பாடுகள் அனைத்திலும், மெதுவாகச் செயல்படும் ஸ்கேன் முறையையே தேர்ந்தெடுக்கவும். ஸ்கேன் தொடங்கிய பின்னர், கம்ப்யூட்டரிலிருந்து விலகி, அதனை வேடிக்கை பார்க்கவும். ஏதேனும் ஒரு கதையை வாசிக்கவும். ஸ்கேன் நிச்சயம் அதிக நேரம் எடுக்கும்.


7. இன்னொரு ஸ்கேனிங்: 

முதல் ஸ்கேனிங் முடிந்து முடிவுகள் வந்த பின்னர், ஸ்கேன் முடிவுகள் அறிவிப்பை காப்பி செய்து, பதிவு செய்து கொண்டு, இன்னொரு நல்ல ஸ்கேனரைத் தேர்ந்தெடுத்து, மீண்டும் ஸ்கேன் செய்திடவும். பல மணி நேரம் ஆனாலும் பரவாயில்லை.


8. பிரச்னை தீர்ந்த கம்ப்யூட்டரை பாதுகாத்திடுங்கள்: 

கம்ப்யூட்டரில் உள்ள மால்வேர் புரோகிராம்கள் அனைத்தும் நீங்கிய பின்னர், மறுபடியும் வழக்கம் போல விண்டோஸ் சிஸ்டத்தில் மீண்டும் பூட் செய்திடவும். உங்களுடைய பழைய ஆண்ட்டி வைரஸ் புரோகிரா மினைக் கம்ப்யூட்டரிலிருந்து நீக்கவும். அன் இன்ஸ்டால் செய்திடவும்.

அடுத்து, அதே ஆண்ட்டி வைரஸ் புரோகிராமின், அண்மைக் கால மேம்படுத்தப்பட்ட பதிப்பை இன்ஸ்டால் செய்திடலாம். உங்களுக்கு அதில் நம்பிக்கை இல்லை என்றால், வேறு ஒரு நல்ல ஆண்ட்டி வைரஸ் புரோகிராமினைப் பதிவு செய்திடலாம்.

எதனைப் பதிவு செய்தாலும், தொடர்ந்து அதனை அப்டேட் செய்து கொண்டே இருக்க வேண்டும். பிரச்னைகள் எங்குதான் இல்லை. திடமான மனதுடன், தெளிவாகச் சிந்தித்து செயல்பட்டால், அனைத்திற்கும் தீர்வு உண்டு.

மகப்பேறு விடுமுறை முடிந்து வேலைக்கு செல்லும் பெண்களின் நிலைகள்..!


ஒரு குழந்தையை பெற்றெடுக்க ஒரு தாய் எவ்வளவு பாடுபடுகிறாள் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.  குழந்தையை நல்ல படியாக வளர்க்க தன் உயிரை கொடுத்து சிரத்தை எடுக்கிறாள். மகப்பேறு விடுப்பு முடிந்து வேலைக்கு திரும்பும் பாலூட்டும் தாய்களுக்கு ஒரு நடுக்கம் இருந்தே தீரும். ஏனென்றால் பலவற்றை சமாளிக்க வேண்டும்.

ஆனால் கவனமாக திட்டமிட்டால், இந்த மாற்றங்கள் சீராக இருக்கும். குழந்தை பெற்றப் பின் அலுவலகம் செல்வது பாலூட்டும் தாய்களுக்கு ஒரு சவாலான விஷயமே. குழந்தை பெற்றப் பின் சீக்கிரமே வேலைக்கு செல்வதினால் ஏற்படும் சங்கடங்கள் ஏராளம்.

அவைகளில் சில, குழந்தையை பிரிய வேண்டிய கவலை, அவர்களுக்கு தேவைப்படும் வேளையில் அவர்களுடன் இருக்க முடியாமல் போவதால் ஏற்படும் குற்ற உணர்வு போன்றவைகள். மகப்பேறு முடிந்து வேலைக்கு உடனே திரும்பும் போது, பெண்களை திணறடிக்கும் விஷயம் பல உண்டு. ஆனால் அந்த சவால்களை வெற்றிக் கொள்ள உங்களுக்காக சில குறிப்புகளை அளிக்கிறோம்.

• வேலைக்குச் செல்லும் தாய்மார்கள் வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பும் வரை தங்களின் பச்சிளங் குழந்தையின் நினைப்பாகவே இருப்பார்கள். அது அவர்களுக்குள் ஒரு குற்ற உணர்வை கூட ஏற்படுத்தும். இதனால் அவர்கள் ஒரு நல்ல தாய்க்கு உதாரணம் இல்லை என்று சொல்ல முடியாது. குழந்தையை பிரிதலான சவாலை வெற்றிக் கொள்ள பொறுப்புகளை நன்கு அறிந்து, அதை சரிவர வழி நடத்திச் செல்லுங்கள்.

• வீட்டில் தாய்ப்பால் கொடுப்பதையும், அலுவலகம் சென்ற பின் மார்பிலிருந்து பாலை எக்கி எடுக்கவும் ஒரு பெண் படாத பாடுபடுகிறாள். ஆனால் இதை சரிவர செய்ய பழகி விட்டால், இந்த சவாலையும் எளிதில் வெற்றி கொள்ள முடியும்.

அதிலும் அலுவலகம் வந்த பின்னரும் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க விரும்பினால், அலுவலக மேலாளரிடம் சின்ன இடைவேளைக்கு அனுமதி வாங்கிக் கொண்டு பாலை எக்கி எடுக்கவும். சில அலுவலகம் இதற்காக சுத்தமான ஒரு தனிப்பட்ட அறையை ஏற்பாடு செய்து கொடுக்கிறது. சில அலுவலகம் பெண்களின் பரிந்துரையின் பேரில், இதற்காக தற்காலிகமாக அறைகளை ஏற்பாடு செய்து கொடுக்கும்.

• பெண்களின் அட்டவணையானது கண்டிப்பாக குழந்தை பெற்றப் பின், குழந்தைக்கு ஏற்றாற்போல் மாறிவிடும். வேலைக்குச் செல்லும் முன் போதிய கால அவகாசம் இருப்பதால், அதை பயன்படுத்திக் கொண்டு குழந்தையின் அட்டவணையை மெதுவாக, அலுவலக தேவைக்கு ஏற்றாற்போல் மாற்றிக் கொள்ள வேண்டும்.

• குழந்தை பிறப்பதற்கு முன்னரே ஒரு நல்ல உள்ளூர் குழந்தைப் பாதுகாவலரை ஏற்பாடு செய்துக் கொள்ளவும் அல்லது குழந்தையை பாதுகாக்க வேறு ஒரு நல்ல வழியை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். வேண்டுமெனில் வீட்டு பெரியவர்களை, வீட்டிற்க்கு வரச் சொல்லி குழந்தையை பார்த்துக் கொள்ளச் சொல்லலாம்.

ஏனென்றால் அவர்கள் குழந்தையை தங்கள் குழந்தையை போலவே பாசம் காட்டி பார்த்துக் கொள்வர். குழந்தையை பார்த்துக் கொள்ள சரியான ஆட்கள் கிடைக்காவிட்டால், நம்பகத்தன்மையுள்ள ஒரு குழந்தை பாதுகாவலரை நியமித்து கொள்ளலாம்.

• அலுவலக மேலாளரிடம் முன் கூட்டியே தாய்மைப் பணியின் அட்டவணையை தெரிவித்து வளையுந்தன்மையுடைய வேலை நேரத்தை கேட்டு வாங்கிக் கொள்ளவும். அதிலும் குழந்தை வளரும் வரை வீட்டிலிருந்து வேலை பார்க்கும் வாய்ப்பை கேட்டு வாங்கி பயன்படுத்திக் கொள்ளுங்கள். இதனால் குழந்தையையும் கவனித்து, வேலையையும் நிம்மதியாக பார்க்கலாம். 

ஹார்ட்வேர் பிரச்னைகளும் தீர்வுகளும்..! - உங்களுக்காக...


கம்ப்யூட்டர் முடங்கிப் போனால், உடனே நாம் அது எதனால் ஏற்பட்டிருக்கும் என எண்ணாமல், ஏதாவது செய்து, அதனை மீண்டும் இயக்க மாட்டோமா என்று தான் முயற்சிப்போம்.

இந்த முயற்சி கன்னா பின்னா என, எதனையும் மேற்கொள்ளத் தூண்டும். முடங்கிப் போவதற்குப் பல காரணங்கள் இருந்தாலும், ஹார்ட்வேர் பிரச்னைகள் சிலவும் இருக்கலாம். எனவே, இங்கு ஹார்ட்வேரில் எங்கு, என்ன காரணங்களுக்காக பிரச்னைகள் ஏற்படலாம் என சில தரப்பட்டுள்ளன.

1. சரியான மின்சாரம் இல்லாமல் மதர் போர்டு திடீரென முடங்குகிறது:

எஸ்.எம். பி.எஸ். செக் செய்திடவும். அல்லது ராம் மெமரி சரியாக வேலை செய்கிறதா என்பதைச் சோதனை செய்திடவும். உங்கள் சாப்ட்வேர் காப்பி செய்யப்பட்டது என்றால், அதிலிருந்தும் பிரச்சினை ஏற்படலாம். சி.பி.யு. மேல் உள்ள சிறிய விசிறி சரியாகச் செயல்படவில்லை என்றாலும் இந்த எர்ரர் காட்டப்படும்.

2. மானிட்டரின் ஸ்கிரீன் காட்சி ஆடுகிறது:

டிஸ்பிளே கார்டு சரியாகப் பொருத்தப் பட்டுள்ளதைச் சோதிக்கவும். ஏதேனும் வைரஸ் புரோகிராம் உள்ளே புகுந்தும் இந்த வேலையைச் செய்திடலாம். அல்லது வீடியோ மெமரியில் பிரச்சினை இருக்கலாம்.

3. திரைக் காட்சி அதிர்கிறது:

மானிட்டரைச் சுற்றி ஏதேனும் காந்த அல்லது ரேடியோ அலைகள் உருவாகலாம்.

4. சி.பி.யு. கேபினட்டில் லேசாக ஷாக் அடிக்கிறது:

கம்ப்யூட்டருக்கான மின் இணைப்பின் எர்த் இணைப்பு சரியில்லாமல் இருக்கலாம். எனவே மெயின் பவர் கேபிளைச் சோதிக்கவும்.

5. Non System Disk Error:

சி.டி. டிரைவில் பூட் பண்ண முடியாத வேறு டிஸ்க் இருக்கலாம். அல்லது ஹார்ட் டிஸ்க்கிற்கான சீமாஸ் செட் அப்பில் தவறு இருக்கலாம். ஹார்ட் டிஸ்க்கில் பார்ட்டிஷன் உருவாக்கப்படாமல் இருக்கலாம். ஹார்ட் டிஸ்க் பார்ட்டிஷன் பார்மட் செய்யப்படாமல் இருக்கலாம்.

6. Missing Operating System:

சிஸ்டம் இயக்குவதற்கான பைல்கள் இல்லாமல் இருக்கலாம் - குறிப்பாக Command.com என்னும் பைல். இதனுடன் IO.sys, MS_DOS.sys ஆகிய பைல்களும் ஒரு சிஸ்டம் இயங்க முதல் தேவைகளாகும். இவை சரியாக உள்ளனவா என்று பார்க்கவும்.

7. Missing Command Interpretor:

Command.com பைல் கரப்ட் ஆகி இருக்கலாம். அல்லது வைரஸ் பாதித்திருக்கலாம். அல்லது அழிக்கப்பட்டிருக்கலாம்.

8. IO Error:

சீமாஸ் செட்டிங்ஸில் ஹார்ட் டிஸ்க் எந்த வகை என்று தரப்பட்டிருப்பது சரியாக இல்லை. பார்மட்டிங் செய்வதற்காகப் பயன்படுத்தப்பட்ட ஆப்பரேட்டிங் சிஸ்டம் சரியானதல்ல.

9. Divide Over Flow எர்ரர் மெசேஜ்:

சில டைரக்டரிகள் அல்லது பைல்கள் கிராஷ் ஆகி இருக்கலாம். CHKDSK/F அல்லது SCANDISK பயன்படுத்தி அவற்றைச் சரி செய்திடவும்.

10. கம்ப்யூட்டர் செயல்படுகையில் ஹார்ட் டிஸ்க்கிலிருந்து சத்தம் வருகிறது:

சீரான மின்சாரம் தரப்படவில்லை. கேபிள்கள் சரியாகப் பொருத்தப்படவில்லை. ஹார்ட் டிஸ்க்குகளில் Y கனக்டர் கேபிள் பொருத்தப்பட்டிருந்தால் எடுத்துவிட்டு சரியான கேபிளைப் பொருத்தவும். ஹார்ட் டிஸ்க் பலவீனமாக இருக்க வேண்டும். அல்லது பெரும் அளவில் பேட் செக்டார்கள் ஏற்பட்டிருக்க வேண்டும்.

11. ஹார்ட் டிஸ்க் ப்ராசஸ் செய்கையில் முடங்கி நிற்கிறது:

CHKDSK/F அல்லது SCANDISK பயன்படுத்தி பேட் செக்டார்களைச் சோதø செய்திடவும். நிறைய இருந்தால் மீண்டும் ஹார்ட் டிஸ்க்கினை பார்மட் செய்திடவும்.

12. Hard Disk Not Detected:

பவர் கனெக்டர் களைச் சோதனை செய்திடவும். டேட்டா கேபிள்களைச் சரி பார்க்கவும். ஜம்ப்பர்களைச் சோதனை செய்திடவும்.

13. ஹார்ட் டிஸ்க் பார்ட்டிஷன் காட்டப்படவில்லை:

ஹார்ட் டிஸ்க்கை பார்மட் செய்த ஆப்பரேட்டிங் சிஸ்டம், தற்போதுள்ள மதர்போர்டுடன் இணைந்து போகவில்லை.

14. MMX/DLL FILE MISSING:

இந்த பைல்கள் பவர் திடீரென நின்று போனதால் கரப்ட் ஆகி இருக்கலாம். அல்லது வைரஸ் பாதித்திருக்கலாம். எனவே இந்த பைல்களை வேறு ஒரு கம்ப்யூட்டரிலிருந்து காப்பி செய்து இதற்கு மாற்றவும்.

விண்டோஸ் 7ல் கிராஷை தவிர்க்க...!


இன்று பொதுவாக, விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் குறித்து நாம் சந்திக்கும் பொதுவான குற்றச்சாட்டு, அது அடிக்கடி கிராஷ் ஆகிறது என்பதுதான். விண்டோஸ் 7 சிஸ்டம் தொடர்பாக இந்தக் குற்றச்சாட்டு அதிகம் இல்லை என்றாலும், சிலர் கிராஷ் ஆவதாகச் சொல்லி வருகின்றனர்.

கம்ப்யூட்டரில் பணியாற்றிக் கொண்டிருக்கையில், அது திடீரென கிராஷ் ஆனால், நமக்குப் பல வகைகளில் இழப்பு ஏற்படும். முக்கியமாக நாம் அமைத்த டேட்டா, டெக்ஸ்ட் மீண்டும் நமக்குக் கிடைக்காமல் போய்விடும்.

இதனை உணர்ந்தே, மைக்ரோசாப்ட் நிறுவனம், இமெஜ் கிரியேட்டிங் டூல் என்ற ஒரு டூலினைத் தற்போது விண்டோஸ் 7 சிஸ்டத்துடன் வழங்கி உள்ளது. இதன் மூலம் நாம் விண்டோஸ் 7 சிஸ்டம் கிராஷ் ஆன பின்னர், ஓரளவிற்கு நம் இழப்பினைத் தவிர்க்கலாம்.

விண்டோஸ் 7 நன்றாகவும் சிறப்பாகவும் இயங்கிக் கொண்டிருக்கையில், அதன் இமேஜ் ஒன்றை உருவாக்கி அமைப்பது நல்லது. விண்டோஸ் 7 சிஸ்டம் நன்றாக இன்ஸ்டால் செய்யப்பட்டு, தேவைப்படும் ட்ரைவர் புரோகிராம்களும், அப்ளிகேஷன் சாப்ட்வேர்களும் அமைக்கப்பட்டவுடன், அதன் இமேஜ் ஒன்றை உருவாக்க வேண்டும்.

இமேஜ் உருவாக்கக் கீழ்க்காணும் வழிகளைக் கடைப்பிடிக்கவும்.

 Start பட்டன் கிளிக் செய்து, சிறிய கட்டத்தில் backup and restore என டைப் செய்து என்டர் தட்டவும். இது கண்ட்ரோல் பேனல் உள்ளாக Back and Restore என்ற வசதியைக் கொண்டு வரும்.

இதனைப் பயன்படுத்தி, நாம் சிஸ்டம் ரிப்பேர் டிஸ்க் ஒன்றினை உருவாக்கலாம்; பைல்களுக்கான பேக் அப் காப்பி அமைக்கலாம்;

சிஸ்டம் செட்டிங்ஸ் முழுவதுமான சிஸ்டம் இமேஜ் ஒன்றை உருவாக்கலாம். நம் தேவைக்கேற்ப, விண்டோவின் இடது புறம் Create a system image என்ற இடத்தில் கிளிக் செய்திட வேண்டும்.

இதில் கிளிக் செய்தவுடன், சிஸ்டமானது, தான் உருவாக்க இருக்கும் சிஸ்டம் இமேஜினை சேவ் செய்திட, கம்ப்யூட்டரில் நல்ல ஒரு இடத்தினைத் தேடும் பணியினை மேற்கொள்ளும்.

இது ஹார்ட் ட்ரைவ், ஆப்டிகல் டிரைவ் அல்லது நெட்வொர்க்கில் உள்ள கம்ப்யூட்டர்களில் ஒரு இடமாக இருக்கலாம். இடம் கண்டறிந்த பின்னர், நீங்கள் இவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம்.

கம்ப்யூட்டரின் ஹார்ட் ட்ரைவ்தான் சிறந்த இடமாகும். ஏனென்றால், சிடிக்களில் இதனைப் பதிய இடம் போதாது. நெட்வொர்க் இணைப்பில் உள்ள கம்ப்யூட்டர்களின் ட்ரைவில் பதிய எண்ணினால், இணைப்பில் டேட்டா செல்லும் வேகம் அதிகமாக இருக்க வேண்டும்.

எங்கு பதிந்தாலும், பதியும் இடத்தில், இமேஜ் பைலைப் பதிய இடம் இருந்தால் தான், இமேஜ் உருவாக்கும் பணி தொடங்கப்படும். இல்லை எனில், இடப் பற்றாக்குறை என செய்தி கிடைக்கும்.

பேக் அப் செயல்பாட்டைத் தொடங்க, Start Backup பட்டனில் கிளிக் செய்திட வேண்டும். இமேஜ் உருவாக்கும் பணி முடிய அதிக நேரம் எடுக்கும். பேக் அப் இமேஜ் தயாரிக்கும் பணி முடிந்தவுடன், முடிந்ததாக செய்தி கிடைக்கும்.

பேக் அப் சைஸ் என்ன என்றும் காட்டப்படும். எனவே முதலில் விண்டோஸ் 7, ட்ரைவர்கள் மற்றும் அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்புகள் பதிந்த வுடனேயே இமேஜ் பேக் அப் ஒன்று எடுத்து வைத்துக் கொள்வது நல்லது.

 இந்த இமேஜ் பைலை எங்கும் எடுத்துச் செல்லும் வகையிலான போர்ட்டபிள் ட்ரைவில் சேவ் செய்வதும் நல்லது. இமேஜ் உருவாக்கம் முடிந்ததாக அறிவிப்பு வந்தாலும், இன்னும் ஒரு முக்கிய வேலை மீதமிருக்கும். ரெகவரி எனச் சொல்லப்படும் மீட்சிப் பணியில் அது மிக மிக முக்கியமானது. System Repair டிஸ்க் ஒன்றினை உருவாக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்த 5 வருஷத்துக்கு உங்கள் ஆயுள் கெட்டியா..? - வாங்க தெரிஞ்சிக்கலாம்..!


உயிரினங்களின் வாழ்வில் மரணம் எப்போது வரும்? என்பது இப்போதுவரை மர்மமாக உள்ளது. ஆனால், அதையும் ரத்த பரிசோதனை மூலம் அறிய முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்து இருந்தனர். அதாவது மனிதர்கள் உள்ளிட்ட அனைத்து உயிரினங்களிலும் குரோமசோம்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இவற்றின் முனைகளில் ‘டெலோ மர்ஸ்’ என்ற மூலப்பொருள் உள்ளது.

செல்கள் உடைந்து கொண்டே வருவதால் உடல் உறுப்புகள் வளர்ச்சி பெறுகின்றன. அவ்வாறு செல்கள் உடைந்து உடல் வளர்ச்சி அடையும்போது ‘டெலோ மர்ஸ்’சின் வடிவமும் குறைந்து கொண்டே வருகிறது.இதன் மூலம் ஒரு உயிரினத்தின் வயதையும், அதன் மூலம் அவற்றின் வாழ்நாளையும் கணிக்க முடியும். அந்த அடிப்படையில், செல்ஸ் நாட்டில் உள்ள கவுசின் தீவில் வாழும் 320 பாடும் பறவைகளிடம் இச்சோதனை மேற்கொள்ளப்பட்டு கண்டறியப்பட்டது.

இதையடுத்து இச்சோதனை விலங்குகளிடமும், மனிதர்களிடமும் நடத்தப்பட உள்ளதாக கிழக்கு ஆங்லியா பல்கலைக் கழக பேராசிரியர் டேவிட் ரிச்சர்ட்சன் தெரிவித்து இருந்த நிலையில் அடுத்த 5 ஆண்டுக்குள் மரணம் ஏற்படுமா என்பதை ஆராய்ந்து சொல்லும் நவீன ரத்த பரிசோதனை முறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மற்றொரு பேராசியர் தெரிவித்துள்ளார்..

பின்லாந்தின் யுலு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றுபவர் மைகா அலா கோர்பெலா. இவர் புது வகையான ரத்த பரிசோதனை முறை ஒன்றை கண்டுபிடித்துள்ளார். தன்னுடைய கண்டுபிடிப்பு குறித்து அவர் ”ரத்தத்தில் உள்ள நுண்ணுயிரிகளின் அடிப்படையில் ஒருவர் ஆபத்தில் உள்ளாரா, இல்லையா என்பது குறித்து கண்டறிய முடியும்.

அந்த வகையில், பின்லாந்தில் 17,000 பேரின் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது.சிகிச்சை எடுத்துக் கொள்ளாத நிலையில் இருக்கும் சிறுநீரக நோயாளிகள், இருதய நோயாளிகள் ஆகியோரின் ரத்த மாதிரிகளில், அவர்களின் உடல்நிலை எந்த அளவுக்கு மோசமாக இருக்கிறது என்பதை இந்த ரத்தப் பரிசோதனை காட்டிக் கொடுத்துவிடும்.

இதேபோல் பிற நோயால் தாக்கப் பட்டவர்களின் உடல்நிலையையும் இதன் மூலம் அறியலாம். நன்றாக இருப்பவர்களின் ரத்தத்துக்கும், நோயாளிகளின் ரத்தத்துக்கும் பெரிய அளவில் வித்தியாசங்கள் உள்ளன. இதை கண்டறியும் நவீன சோதனைக்கு, நியூக்ளியர் மேக்னடிக் ரிசோனன்ஸ் (என்எம்ஆர்) ஸ்பெக்ட்ராஸ்கோபி என்று அழைக்கப்படுகிறது. இதன் மூலம் அடுத்த 5 ஆண்டுக்குள் ஒருவருக்கு இறப்பு ஏற்படுமா என்பதையும் கணிக்க முடியும்:. என்று மைகா தெரிவித்துள்ளார்

Saturday, 1 March 2014

அலர்ஜியாகுதே அழகு!



அழகுசாதனங்களும் கிட்டத்தட்ட உயிர் காக்கும் மருந்துகள் மாதிரிதான். மருந்துகளை வாங்கும்போது, அவற்றின் தயாரிப்புத் தேதி, காலாவதி தேதி,  பேக்கிங் என எல்லாம் சரி பார்த்து வாங்குகிறோமில்லையா..? ஒருவருக்கு சரியாக வருகிற மருந்துகள், இன்னொருவருக்கு பிரச்னையைக்  கொடுப்பதில்லையா? அது போலத்தான் அழகு சாதனங்களும்... அலர்ஜி வராமலிருக்க, அழகு சாதனங்களை வாங்கும் போதும், உபயோகிக்கும் போதும்  சில முக்கிய விஷயங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும். அவற்றைப் பற்றி விளக்குகிறார் கிரீன் ட்ரென்ட்ஸ் மல்லிகா.


அழகுசாதனங்களில் சேர்க்கப்படுகிற ரசாயனங்கள், நிறமிகள் போன்றவற்றின் காரணமாகவே பெரும்பாலும் ஒவ்வாமை உண்டாகிறது. இது சாதாரண  பவுடரில் தொடங்கி, ஃபவுண்டேஷன், லிப்ஸ்டிக், ரூஜ், ஐ லைனர், ஐ ஷேடோ, ஹேர் கலர்ஸ் என எல்லாவற்றிலும் வரலாம். ஒருவருக்கு  ஒத்துக்கொள்ளாத அழகு சாதனம், இன்னொருவருக்குக் கச்சிதமாகப் பொருந்திப் போகலாம். எனவே, ஒவ்வாமை என்பது நபருக்கு நபர் வேறுபடும்.


ஹேர் டை - ஹேர் கலர் அலர்ஜி


அழகுசாதனங்களில் அதிகமான அலர்ஜியை உண்டாக்கக்கூடியவை ஹேர் டை மற்றும் ஹேர் கலர்கள். காரணம், அவற்றில் உள்ள ஸ்ட்ராங்கான  கெமிக்கல் கலவை. பிபிடி, பிஏடிஏ, அமோனியா மற்றும் ஹைட்ரஜன் பெராக்ஸைடு ஆகியவை எல்லோருக்கும் ஏற்றுக் கொள்வதில்லை. இவற்றில்  பிபிடி என்பது டார்க் கலர் டைகளிலும், பிஏடிஏ என்பது லைட் கலர்களிலும் பிரதானமாக இருக்கும்.


அதனால், டை உபயோகிப்பதற்கு முன், ‘பேட்ச் டெஸ்ட்’ என்பது மிக முக்கியம். டையில் சிறிதளவை எடுத்து, காதின் பின்புறம் சிறிது தடவி, 24 மணி  நேரம் காத்திருக்க வேண்டும். கண்கள் சிவப்பது, அரிப்பு, எரிச்சல், கண்களில் தண்ணீர் வடிதல்,     வீங்குதல், மயக்கம் மாதிரியான ஏதேனும் பிரச்னை  தெரிந்தால், அந்த டை அலர்ஜியை உண்டாக்கும் என அர்த்தம். அதை உபயோகிக்கக் கூடாது. இப்போது அமோனியா இல்லாத ஹேர் கலர்கள்  கிடைக்கின்றன. ஆனால், இவை தற்காலிக மானவை. நிரந்தர ஹேர் கலர்கள், முடியின் உள்ளே ஊடுருவி, முடிக்கு நிறத்தைக் கொடுக்கும் என்றால்,  இந்தத் தற்காலிக கலர்கள், முடியின் மேல் பகுதியில் மட்டும் படிந்து நிறத்தைக் கொடுக்கும்.


அமோனியா இல்லாததாலேயே அது எல்லோருக்கும் ஒப்புக் கொள்ளும் என்று சொல்வதற்கில்லை. அதுவுமே சிலருக்கு அலர்ஜியை உண்டாக்கலாம்.  டை அலர்ஜி உள்ளவர்கள், ‘ஹென்னா’ போன்ற இயற்கை கலர்களுக்கு மாறுவதே பாதுகாப்பானது. டை ஒப்புக் கொண்டாலுமே, அதை புருவங்களில்  போடுவதைத் தவிர்ப்பது நல்லது. கண்களுக்குப் பக்கத்தில் உள்ள பகுதி என்பதால், அதன் விளைவாக பார்வை பாதிப்பு வரக்கூடும். ஜாக்கிரதை!

பிளீச் அலர்ஜி

டைக்கு அடுத்தபடியாக அலர்ஜியை உண்டாக்கும் அழகுப்பொருள் பிளீச். ஃபேஷியலுக்கு முன் செய்யப்படுகிற ஒரு சிகிச்சையே பிளீச். இதைச்  செய்வதன் மூலம், சருமத்தில் உள்ள மெல்லிய ரோமங்கள் சரும நிறத்துக்கே மாறும். அதனால் சருமம் நிறம் கூடிய தோற்றத்தைப் பெறும். இந்த  பிளீச்சுமே கெமிக்கல் கலவையால் செய்யப்படுவது என்பதால் எல்லோருக்கும் பொருந்தாது. டைக்கு செய்யப்படுவது மாதிரியே பிளீச் செய்வதற்கு  முன்பும் கைகளில் அதைத் தடவி, பேட்ச் டெஸ்ட் செய்து பார்த்து, அரை மணி நேரம் காத்திருந்து, அலர்ஜி இல்லாவிட்டால் மட்டுமே உபயோகிக்க  வேண்டும்.


பிளீச், ஃபேஷியல் என எல்லாமே அவரவர் வீட்டி லேயே செய்துகொள்ள வசதியாக கடைகளில் கிடைக்கின்றன. அந்த பாக்கெட்டுகளின் மேல் எப்படிக்  கலப்பது, எப்படி உபயோகிப்பது என்கிற குறிப்புகள் இருக்கும். அந்தக் குறிப்புகள் எல்லா வகையான சருமத்துக்கும் பொதுவானவை. ஆனால், பிளீச்  என்பது ஒவ்வொரு வகை சருமத்தின் தன்மையைப் பார்த்து, அதற்கேற்ற அளவில் கலக்கப்பட்டு செய்யப்பட வேண்டியது. கலவை சற்று கூடினாலும்  சருமம் பாதிக்கப்படலாம். பெரும்பாலும் இந்த மாதிரி சிகிச்சைகளை பார்லர்களில் செய்து கொள்வதே பாதுகாப்பானது.


வாக்சிங் அலர்ஜி


வாக்சிங் செய்ததும் சிலருக்கு சருமத்தில் சிறிய தடிப்புகள், கொப்புளங்கள் வரலாம். சருமம் சிவந்து போகலாம். அது பெரும்பாலும் சில மணி  நேரங்களில் தானாக சரியாகிவிடும் என்பதால் கவலை வேண்டாம். அலர்ஜி உண்டானால் அந்த இடத்தில் கற்றாழை ஜெல் தடவுவது, ஐஸ் கட்டிகள்  வைத்துத் தேய்ப்பதன் மூலம் சரி செய்யலாம். ‘அப்படியெல்லாம் இல்லை... எப்போதுமே வாக்சிங் செய்தால் ஒத்துக் கொள்வதே இல்லை... ஆனால்,  கை, கால்களில் ரோமங்களுடன் இருக்கவும் முடியாது’ என்கிறவர்கள், சிகிச்சைக்கு முன் மருத்துவரைக் கலந்தாலோசித்து, அலர்ஜியை தவிர்க்கும்  மாத்திரையை எடுத்துக் கொள்ளலாம். பார்லர்களில் வாக்சிங் செய்கிற போது, சுத்தமான டவல் உபயோகித்ததும் தூக்கி எறிகிற டிஸ்போசபிள் வாக்ஸ்  ஷீட் உபயோகிக்கிறார்களா என்பதை சரி பார்க்கவும்.


இன்னும் சில அலர்ஜிகள்


ஒருவர் உபயோகித்த அழகு சாதனங்களை இன்னொருவர் பகிர்ந்து கொள்ள வேண்டாம். அலர்ஜியும் தொற்றுநோய்களும் இதனால் அதிகமாகப் பரவும்.


பெரிய கடைகள், ஷாப்பிங் மால்களில் அழகுசாதனங்கள் வாங்கச் சென்றால், ஒவ்வொரு நிறுவனமும் தமது பிராண்டை உபயோகித்துப் பார்க்கச்  சொல்லி, சாம்பிள் வைத்துக் கொண்டு அழைப்பார்கள். டெஸ்ட் செய்வதற்காக அவர்கள் கொடுக்கும் அந்தக் குறிப்பிட்ட அழகுசாதனம் ஏற்கனவே பலர்  உபயோகித்ததாக இருக்கும். அதை அடுத்தடுத்த நபர்கள் டெஸ்ட் செய்து பார்ப்பதன் மூலம் தொற்று சீக்கிரம் பரவும்.


சில வகை அழகுசாதனங்கள் காலாவதி ஆன பிறகு, நிறம், திடத்தன்மை மற்றும் மணத்தில் மாறும். உதாரணத்துக்கு லிப்ஸ்டிக் பழையதாகிப்  போனால், அதன் மேல் நீர்த்திவலைகள் மாதிரி தென்படும். லிக்விட் ஃபவுண்டேஷன் நீர்த்துப் போய் நிற்கும். சில வகை அழகு சாதனங்களோ எந்த  மாற்றத்தையும் காட்டாது. அது கெட்டுப் போனதைக் கண்டுபிடிக்க முடியாது. தயாரிப்புத் தேதியையும் இத்தனை காலத்துக்குள் உபயோகிக்க வேண்டும்  என்கிற தேதியையும் கவனித்து வாங்கி, உபயோகிப்பது மட்டுமே பாதுகாப்பானது. கூடிய வரை எந்த அழகுசாதனத்தையுமே ஒரு வருடத்துக்கு மேல்  வைத்திருந்து உபயோகிக்க வேண்டாம்!

கர்ப்பகால வலிகள்!

தலைவலியா, முதுகுவலியா மருத்துவரைக் கேட்டால் தாமாகவே வலி நிவாரணியை விழுங்கி விட்டு வலியில் இருந்து விடுபடுகிற பெண்கள்  எக்கச்சக்கம். மற்ற நாட்களில் எப்படியோ... கர்ப்ப காலத்தில் உண்டாகிற எந்த வலியும் இப்படி அலட்சியமாக கையாளப்  படக்கூடியதல்ல. அப்படி சுய  மருத்துவம் செய்து கொள்கிற போது அது தாய், சேய் இருவரின் உயிர்களுக்குமே ஆபத்தாக  முடியலாம் என்கிறார் வலி நிவாரண சிகிச்சை நிபுணர்  டாக்டர் குமார்

கர்ப்ப காலத்துலயும், தாய்பால் கொடுக்கிற காலத்துலயும் பெண்கள் வலியால அதிகம் அவதிப்படறாங்க. வயிற்று வலி, இடுப்பு வலி,  முதுகு வலி  மற்றும் தலைவலி இந்த நான்கும் கர்ப்ப காலத்துல சகஜமா இருக்கு. கர்ப்பம் தரிக்குறதுக்கு முன்னாடி இந்த மாதிரி  வலிகள் இருந்து அதுக்கு  எடுத்துகிட்ட மருந்துகளையே கர்ப்பமான பிறகும் எடுத்துக்கிறவங்க இருங்காங்க. இது ரொம்ப ஆபத்தானது. குறிப்பாக கர்ப்பத்தோட முதல் 10  வாரங்கள்ல மருத்துவர் அறிவுரை இல்லாமல் எந்த மருந்தையும் எடுத்துக்ககூடாது.

அதேபோல 34 வாரங்களுக்குப்பிறகு  எடுத்துக்கிற மருந்துகளாள கருவுல உள்ள குழந்தையோட நுரையீரல் பாதிக்கப்படலாம். முதல்ல வயிற்றுவலி,  கருச்சிதைவு, கருமுட்டை வெடித்தல்,  சதை வலி, கருப்பை தசைநார் விரிவடைதல், வயிற்றுத்தசைல ரத்தம்  கட்டுதல்னு, கர்ப்ப கால  வயிற்றுவலிக்குப் பல காரணங்கள் இருக்கலாம். அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் மூலமா காரணத்தை கண்டு பிடிச்சி, தாமதிக்காம தாமதிக்காம சிகிச்சையை  ஆரம்பிக்கணும். அடுத்து இடுப்பு வலி.

கர்ப்ப காலத்துல உண்டாகிற ஹார்மோன்  மாறுதல்களால, இடுப்பு எலும்பு இணைப்புகள்ல வலி வரும். முதுகு தண்டுவடம் பிதுங்கினா உண்டாகிற  முதுகு வலி மாதிரியே இ ருக்கும் இது. பிரத்யோகமான பிசியோதெரபி மற்றும் மருந்தில்லா சிகிச்சைகள் ஜாயின்ட்டுகள்ல போடக்கூடிய ஊசிகள்  மூலமா  இதைச் சரியாக்கலாம். மூணாவதா முதுகுவலி. 50 சதவீத கர்ப்பிணிபெண்களுக்கு முதுகு வலி இருக்கு. அதுல 10 சதவீதத்தினருக்கு மேல்  முதுலயும், 40  சதவீதத்தினருக்கு அடி முதுகுலயும் வலி.  நிறையபெண்களுக்கு உட்காரும் இடத்தில் வலியும் அதிகமா இருக்கு.

குறைப்பிரசவம்,  பனிக்குடம் சீக்கீரம் உடைதல், சிறுநீர் பிரச்சனையெல்லாம் இடுப்பு வலியாதான் உணரப்படும். எப்படி உட்காரணும், கீழே விழுந்த  பொருளை எப்படி தூக்கணும்னு அடிப்படை பயிற்சிகளைக் கத்துக்கொடுத்து, ஏரோபிக்ஸ்னு  பயிற்சி மற்றுத் டென்ஸ் சிகிச்சை மூலமா இவங்களுக்கு  நிவாரம் தரலாம். எலாஸ்டிக் இல்லாத பெல்ட்டுகளையும் தேவைப்பட்டா  பரிந்துரைப்போம்.

கடைசியா தலைவலி. கர்ப்ப காலத்துல உண்டாகிற தலைவலி, தானா சரியாயிடும். தலைவலிக்கான மருந்துகள் ரொம்ப  வீரியமானவைங்கிறதால,  எக்காரணம் கொண்டும் டாக்டரை கேட்காம தலைவலிக்கு மருந்து எடுக்கக்கூடாது. சரியான நேரத்துல சரியான டாக்டரை அணுகி சரியான  சிகிச்சையை எடுத்துக்கிட்டா, வலிகள்லேர்ந்து விடுபடலாம். 

கால் வலியை விரட்டும் நெல்லி ரசம்!

குதிகால், பாதம், கெண்டைக்கால், மூட்டு, தொடை ஆகிய இடங்களில் ஏற்படும் வலியைப் போக்கும் திறமை பெற்றது வெற்றிலை நெல்லி ரசம்.

தேவையான பொருட்கள்:முழு நெல்லிக்காய் 10, வெற்றிலை 20, கொத்தமல்லி இலை, கறிவேப்பிலை தலா ஒரு கைப்பிடி, காய்ந்த மிளகாய் 4,  பூண்டு 6 பல், வால் மிளகு, சீரகம் தலா ஒரு டீஸ்பூன், மஞ்சள் தூள் அரை டீஸ்பூன், நல்லெண்ணெய் 2 டீஸ்பூன், உப்பு தேவைக்கேற்ப.

செய்முறை: நெல்லிக்காயை விதை நீக்கி சாறு எடுக்கவும். கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை, வெற்றிலை மூன்றையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். வெறும் சட்டியில் காய்ந்த மிளகாயை கிள்ளி போட்டு,  பொடியாக நறுக்கிய பூண்டு, ஒன்றிரண்டாகத் தட்டிய வால்மிளகு, சீரகம் ஆகியவற்றை போட்டு இளம் சிவப்பாக வறுக்கவும். பின்னர், பொடியாக  நறுக்கிய கறிவேப்பிலை, வெற்றிலை, கொத்தமல்லி இலையை அதில் போட்டு, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.

நன்றாக வதங்கியதும் விழுதாக அரைத்துக்கொள்ளவும். ஒரு சட்டியில் சிறிது எண்ணெய் ஊற்றி, அரைத்து வைத்துள்ள விழுதைப் போட்டு வதக்கவும்.  அதில் நெல்லிக்காய் சாறு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும். அடுப்பை மிதமாக எரியவிடவும். கொதிக்கும் பக்குவம்  வந்ததும், தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்கவிடாமல் கீழே இறக்கவும்.

இந்த நெல்லி ரசத்தை குடிப்பதன் மூலம் குதிகால் வலியை எளிதில் குறைப்பதோடு, உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கும் இதயநோயாளிகளுக்கும்  ஏற்ற உணவாக அமைகிறது. எலும்பு புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கும் ஆற்றல் இதற்கு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

குழந்தை பெற்றுக் கொள்வதற்கு முன் கவனிக்க வேண்டிய விஷயங்கள்!

‘‘சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும். அதைப் போல ஆரோக்கியம் இருந்தால்தான், ஆரோக்கியமான சந்ததியை உருவாக்க முடியும்.  திருமணத்துக்குப் பிறகு குழந்தைக்காக இயற்கையாகவோ, செயற்கையாகவோ முயற்சிகளை மேற்கொள்கிற பெண்கள், அதற்கு முன் சில  விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். அது குழந்தைப் பிறப்பில் சிக்கல்களையும், தாமதத்தையும் தவிர்க்கும்’’ என்கிறார்  மகப்பேறு மருத்துவர் மாலா ராஜ். குழந்தை பெற்றுக் கொள்ளும் ஆசையில் இருக்கும் பெண்களுக்கு அவர் சொல்லும் சில அறிவுரைகள் இங்கே...

‘‘முதலில் கவனிக்க வேண்டிய விஷயம் உங்கள் உடல் எடை. பி.எம்.ஐ எனப்படுகிற பாடி மாஸ் இன்டக்ஸை கணக்கிடுங்கள். அது 25க்கு மேல்  இருந்தால் ஓவர் வெயிட். 30க்கும் மேல் போனால் உடல் பருமன். உங்கள் பி.எம்.ஐ 25ஐத் தொட்டாலே நீங்கள் எச்சரிக்கையடைய  வேண்டும்.  உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி, வாழ்க்கை முறை மாற்றம் என சிலபல விஷயங்களால் சரியான எடைக்குத் திரும்ப வேண்டும்.அடுத்து உங்கள் மாதவிலக்கு சுழற்சி சரியாக இருக்கிறதா எனப் பாருங்கள். பிசிஓடி எனப்படுகிற சினைப்பை நீர்க்கட்டி பிரச்னை இருந்தால்  மாதவிலக்கு சுழற்சியும் முறையற்றுப் போகும்.

கருமுட்டை உற்பத்தியும் பாதிக்கும். அப்படியே உற்பத்தியானாலும் முட்டைகளின் தரம் மோசமாக இருக்கும். எனவே, மருத்துவரை சந்தித்து,  மாதவிலக்கு சுழற்சியை முறைப்படுத்த மாத்திரைகள் எடுத்துக் கொள்வதன் மூலம், முட்டைகளின் தரத்தையும் மேம்படுத்தலாம். கருத்தரிப்பதற்கு 6  மாதங்களுக்கு முன்பிருந்தே ஃபோலிக் அமிலம் உள்ள மாத்திரைகளை எடுத்துக் கொள்ள வேண்டியதும் அவசியம். அதே போல 6 மாதங்களுக்கு  முன்பே ருபெல்லா மற்றும் கர்ப்ப வாய் புற்று நோய்க்கு எதிரான தடுப்பூசிகள் போடப்பட வேண்டும்.

திருமணமாகி கருத்தரிக்காதவர்கள், மாதவிலக்கின் 2வது நாளில் எஃப்.எஸ்.ஹெச், எல்.ஹெச் மற்றும் ஏ.எம்.ஹெச் ஆகிய ஹார்மோன்களுக்கான  பரிசோதனை களை மேற்கொள்ள வேண்டும். அதிலும் குறிப்பாக ஏ.எம்.ஹெச் சோதனையின் மூலம் சினைப்பையில் முட்டைகளின் இருப்பு  எப்படியிருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ள முடியும். முட்டைகளின் எண்ணிக்கை குறைவாக இருந்தால் குழந்தையின்மைக்கான வேறு  சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். இந்த ஏ.எம்.ஹெச் குறைவாக இருந்தால் கருமுட்டை வெளிவராது.

அதுவே அதிகமானால் பிசிஓடி பிரச்னைக்கு வழி வகுக்கலாம். எனவே, அதைத் தெரிந்து கொண்டு சரியான சிகிச்சையை மேற்கொள்ள  வேண்டியிருக்கும். பிசிஓடி இருப்பது உறுதியானால் அதற்கு ஞிபிணிகிஷி என்கிற மாத்திரைகளை எடுத்துக் கொள்வதன் மூலம் கருமுட்டைகளின்  தரத்தை மேம்படுத்த முடியும். கருத்தரிக்க நினைக்கிற பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய இன்னொரு முக்கியமான விஷயம் தைராய்டு. இந்தப்  பிரச்னை இருந்தால் குழந்தையின் அறிவுத்திறன் பாதிக்கும்.

சீக்கிரமே கருச்சிதைவு உண்டாகலாம். எனவே ,கருத்தரிக்கும் முன்பே தைராய்டு பிரச்னை இருக்கிறதா எனத் தெரிந்து கொண்டு, அதைக்  கட்டுப்பாட்டில் வைக்க மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும். சர்க்கரை மற்றும் ரத்த அழுத்த அளவுகளும் கருத்தரிக்கும் முன்பே கட்டுப்பாட்டுக்கு  வர வேண்டும். இந்த இரண்டும் கட்டுப்பாட்டை மீறிப் போகும் போது குழந்தையின் வளர்ச்சி பாதிக்கும்...’’ என்கிறார் மகப்பேறு மருத்துவர் மாலா ராஜ். 

வறண்ட சருமத்திற்கான பராமரிப்பு!

வறண்ட சருமத்திற்கு அடிக்கடி எண்ணெய் மசாஜ் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெயுடன் சிறிது  எலுமிச்சைச் சாறு கலந்து தடவி வந்தால் வறட்சி நீங்குவதோடு இறந்த செல்களையும் நீங்கி முகம் பொலிவடையும். ஆலிவ் எண்ணெய்யுடன்  முட்டையை கலந்து பூசி 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகம் கழுவி வந்தால் சுருக்கங்கள் மறையும்.

பாலேட்டில் நன்றாக அடித்த முட்டை 1, தேன் 1 ஸ்பூன் கலந்து முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவினால் தோல் வறட்சி  நீங்கி சருமம் மென்மையாக மாறும்.

 2 தேக்கரண்டி அரைத்த தேங்காய், 1 தேக்கரண்டி தேன் இரண்டையும் கலந்து முகத்தில் நன்றாக பூசி 10 நிமிடம் கழித்து கழுவி வர எண்ணெய்ப்  பசை சமநிலைப்படுத்துவதோடு, சருமம் மிருதுவாகவும், பளபளப்பாகவும் இருக்கும். பாலேட்டில் சில துளிகள் எலுமிச்சைப் பழச்சாற்றை கலந்து  முகத்தில் பூசி 15 நிமிடம் கழித்து கழு�வினால் வறட்சி நீங்கி முகம் பளபளப்பாகும்.

சூடாக்கிய செய்த ஆலிவ் எண்ணெய் (அ) தேங்காய் எண்ணெய்யில் வைட்டமின் ஈ மாத்திரை 2, வைட்டமின் ஏ மாத்திரை 1, வைட்டமின் டி  மாத்திரை 1 ஆகியவற்றை சேர்த்து முகத்தில் தேய்த்து பின்னர் 15 நிமிடங்கள் கழித்து டவலால் வெந்நீர் கொண்டு ஒத்தடம் கொடுக்க வேண்டும்.  பின்னர் பஞ்சை கொண்டு துடைக்க வேண்டும். இந்த பேக் உலர்ந்த சருமத்தின் வறட்சியை நீக்குவதோடு சருமத்திற்கு நல்ல ஊட்டத்தைக் கொடுத்து  பளபளப்பாக வைத்துக் கொள்ளும்.

தலையின் வறட்டு தன்மையை போக்கி ஜொலி ஜொலிக்க வைக்கிறது. ஆரஞ்சு தோல் உலர்ந்த ஆரஞ்சு தோல், வெட்டிவேர், சம்பங்கி விதை, பூலான்  கிழங்கு, கடலைபருப்பு, பயத்தம்பருப்பு, கசகசா இவை ஒவ்வொன்றும் 100 கிராம் எடுத்து மெஷினில் கொடுத்து அரைத்து கொள்ளுங்கள். இந்த பவுடரை வாரம் ஒரு முறை தலைக்கு தேய்த்து குளியுங்கள் இப்படி செய்து வந்தால் முடி பளபளப்பாகவும் வாசனையாகவும் இருக்கும்.  இதையே உடம்புக்கு தேய்த்து குளிக்கும் வாசனை பவுடராகவும் பயன்படுத்தலாம்.

கண்கள் பளிச்சிட

கண்கள் பளிச் ஆக ஆரஞ்சு பழச்சாரை ப்ரீஸரில் வைத்து ஐஸ் கட்டியாக்குங்கள். இதை வெள்ளை துணியில் கட்டி கண்ணுக்கு மேல் ஒத்தி எடுங்கள்.  ஒரு நாள் விட்டு ஒரு நாள் இப்படி செய்து வர கண்கள் பளிச் ஆகிவிடும். தூக்கமின்மையால் கண்களில் ஏற்படும் சோர்வை நீக்கி பிரகாசமாக்கவும்  ஆரஞ்சு பயன்படுகிறது.

Friday, 28 February 2014

கண்டிப்பாக உங்கள் கைபேசிக்கு தேவையான பாதுகாப்பு வழிமுறைகள்!

கண்டிப்பாக உங்கள் கைபேசிக்கு தேவையான பாதுகாப்பு வழிமுறைகள்

உங்கள் சிம் அட்டை மற்றும் கைபேசியை கடவுச்சொல்லை வைத்து பூட்டவும்.

உங்கள் கைபேசியில் உள்ள தானாக பூட்டிக்கொள்ளும் வசதியை செயல் படுத்தவும்.

உங்கள் கை பேசியில் உள்ள தகவல்களை குறியாக்கம் (encrypt) செய்யவும்

நம்பகமான ஒரு மென்பொருள் வழங்கும் நிறுவனத்தின் பாதுகாப்பு மென்பொருளை கைபேசியில் உபயோகிக்கவும்.

நம்பகமான வலைத்தளங்களின் மொபைல் பயன்பாடுகளை மட்டுமே தரவிறக்கம் செய்யவும்.

உங்கள் தனிப்பட்ட தகவல்களை இணைய தளங்கள் மற்றும் மென்பொருள் வழங்கு நிறுவனங்கள் அணுக அல்லது பெற முயலும் பொழுது போது கவனமாக இருங்கள்

கோரப்படாத அல்லது எதிர்பாராத இணைப்புகளை கிளிக் வேண்டாம்

உங்கள் கைபேசி பில்லில் அசாதாரண தரவு கட்டணம் அல்லது பிரீமியம் அழைப்புகள் கட்டணம் ஆகியவற்றை சரிபார்க்கவும்

உங்கள் கை பேசியின் இயக்க முறைமைகளின் புதுப்பிப்புகளை (opeating system updates) அவ்வப்போது தரவிறக்கம் செய்து கொள்ளவும்.

Wi-fi மற்றும் ப்ளூடூத் வசதிகளை தேவையான பொழுது மட்டுமே புத்திசாலிதனமாக பயன்படுத்தவும்.

உங்கள் கைபேசியை மறுசுழற்சி (recycle) செய்ய முடிவு செய்தால், முதலில் உங்கள் தனிப்பட்ட தகவல்களை துடைத்து (wipe out) விடவும்.

உங்கள் சேவை வழங்குனரின் மொபைல் கண்காணிப்பு வசதியை பெறவும். இதன் மூலம் உங்கள் கைபேசி காணாமல் போகும் பொழுது அதன் செயல்பாடுகளை முடக்கி கைபேசியை செயலிழக்க செய்ய முடியும். .

கீ-போர்டில் ஒளிந்திருக்கும் கிருமிகள்!!!!!...

கீ-போர்டில் ஒளிந்திருக்கும் கிருமிகள்!!!!!...

நாம் எப்போதெல்லாம் கை கழுவுகிறோம்? சாப்பிடுவதற்கு முன்னும் பின்னும், கழிவறையைப் பயன்படுத்திய பிறகு, குப்பைகளைச் சுத்தம் செய்த பிறகு எனத் தேர்ந்தெடுத்த சில வேலைகளைச் செய்யும்போது மட்டும் சுத்தமாக இருக்க வேண்டுமென எதிர்பார்த்து இப்படிச் செய்கிறோம்.

அதேநேரம் கம்ப்யூட்டரையோ செல்போனையோ பயன்படுத்திய பிறகு நாம் கைகளைக் கழுவுகிறோமா? அதற்கும் சுத்தத்துக்கும் என்ன சம்பந்தம் என்று நினைக்கலாம். ஆனால், கழிப்பறையைவிட ஆறு மடங்கு அதிகமான கிருமிகள் நாம் தினசரிப் பயன்படுத்தும் கம்ப்யூட்டரிலும் செல்போனிலும் இருப்பதாக ஆராய்ச்சிகள் சொல்கின்றன.

அழுக்குப் படிய வாய்ப்பே இல்லாத, அப்படியே அழுக்கடைந்தாலும் அடிக்கடி சுத்தப்படுத்துவதாக நாம் நினைக்கிற எலெக்ட்ரானிக் பொருட்களில்தான் கிருமிகள் அதிகமாக இருக்கின்றன. கம்ப்யூட்டர் கீ-போர்டில் பாக்டீரியா இருப்பதே தெரியாமல், நாமும் அதன் மீது விரல்களை நடனமாட விடுவோம். பிறகு அதே கையுடன் செல்போனை எடுத்துப் பேசுவோம். கண்ணைக் கசக்குவோம். சில சமயம் கம்ப்யூட்டரில்தானே வேலை பார்க்கிறோம் என்ற அசட்டையாகக் கை கழுவாமல் சாப்பிட்டும் விடுவோம். கீ போர்டில் இருந்த கிருமிகள் அப்போது நம் உடலுக்குள் புகுந்து, தங்கள் வேலையைக் காட்டத் தொடங்கிவிடும்.

கிருமிகளின் பட்டியல்

லண்டனில் ஒரு அலுவலகத்தில் இருந்த கீ போர்டுகளைப் பரிசோதனைக்கு உட்படுத்தினார்கள். அதில் ஒரு கம்ப்யூட்டரில் அனுமதிக்கப்பட்ட பாக்டீரியா அளவைவிட 150 மடங்கு அதிகமான கிருமிகள் இருந்திருக்கின்றன. பெரும்பாலான கீ போர்டுகள் பயன்பாட்டுக்குத் தகுதி இல்லாத அளவில் கிருமிகளின் கூடாரமாக இருந்திருக்கின்றன.

அவற்றில் கழிவறைக் கதவின் கைப்பிடியிலும் கழிவறை பேஸினிலும் காணப்படக்கூடிய ஈகோலி, கோலிபார்ம்ஸ், ஸ்டெஃபைலோகாக்கஸ் ஆரஸ், எண்டிரோ பாக்டீரியா போன்ற கிருமிகள் இருப்பதைப் பார்த்து ஆராய்ச்சியாளர்களே அதிர்ச்சியடைந்துவிட்டார்கள். இப்படிக் கிருமிகள் நிறைந்திருக்கும் கீ போர்டைத் தொடர்ந்து பயன்படுத்திவந்தால் வயிற்று வலி, தொடர்ச்சியான வயிற்றுப்போக்கு போன்றவை ஏற்படலாம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.

சுத்தத்துக்குப் பேர் போனவர்கள் என்று நாம் நினைக்கும் வெளிநாடுகளில் இந்த நிலைமை என்றால், நம் அலுவலகத்திலோ, வீடுகளிலோ பயன்படுத்தும் கம்ப்யூட்டர்களைப் பற்றிக் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்.

சுத்தம் உங்கள் கையில்

தனிநபர்கள் சுத்தமாக இருக்கும் பழக்கத்தைப் பொறுத்தே கம்ப்யூட்டரில் கிருமிகள் சேர்வதற்குள்ள வாய்ப்பும் அமைகிறது. பலர் கழிப்பறையைப் பயன்படுத்திய பிறகு கைகளைச் சரியாகச் சுத்தம் செய்வதே இல்லை. இன்னும் சிலர் கம்ப்யூட்டரின் முன்னால் அமர்ந்துகொண்டு கைக்குட்டையால் முகத்தை மூடாமல் இருமுவதும் தும்முவதும் சகஜம்.

இதுபோன்ற பழக்கங்களாலும் கீ போர்டில் கிருமிகள் பல்கிப் பெருகும். அலுவலகத்தில் யாருக்காவது சளியோ, இரப்பை குடல்அழற்சியோ இருந்தால், அவர் பயன்படுத்திய கீ போர்டையோ மவுஸையோ நாமும் பயன்படுத்தினால் போதும். அவருடைய நோய்கள் நமக்கும் மிக எளிதாகத் தொற்றிவிடும்.

நேரத்தை மிச்சப்படுத்துகிறோம் என்று சொல்லிக்கொண்டு ஒரே நேரத்தில் இரண்டு வேலைகளைச் செய்வதுதான், நமக்குக் கைவந்த கலையாயிற்றே. அதனால் கம்ப்யூட்டரில் வேலை செய்துகொண்டே எதையாவது கொறிப்பது அல்லது குடிப்பது என்பதைப் பலரும் வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

அப்படிச் சாப்பிடும் உணவுப்பொருள் தெரியாமல் கம்ப்யூட்டர் கீ போர்டில் விழுந்துவிடும். அப்படி விழுகிற உணவுத் துணுக்கை ஆதாரமாகக் கொண்டு பாக்டீரியாக்கள் பல்கிப் பெருகிவிடும்.

சுய சுத்தத்தை விடுங்கள். நம்மில் எத்தனை பேர் கம்ப்யூட்டரையும் மவுஸையும் அடிக்கடி சுத்தம் செய்கிறோம்? கீ போர்டில் தூசுப்படலம் பரவினாலும் சுத்தம் செய்யாமல், அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என்ற மனநிலைதான் பலருக்கும் இருக்கிறது. அப்படி இல்லையென்றால் இது அலுவலக கம்ப்யூட்டர்தானே, அவர்கள் சுத்தம் செய்துகொள்வார்கள் என்ற நினைப்பு, சுத்தத்தைத் துரத்தி விடுகிறது.

சில அலுவலகங்களில் இடம் மாறியோ, வேலை நேரம் மாறியோ ஷிப்ட்களில் வேலை செய்வார்கள். அப்போது ஒரே கம்ப்யூட்டரைப் பலர் பயன்படுத்த நேரிடும். இதுபோன்ற சூழ்நிலையில் சுத்தம் செய்வது எவ்வளவு தூரம் கேள்விக்குறியோ, அவ்வளவு தூரம் கிருமிகள் பரவுவதும் நிச்சயம்.

என்ன செய்யலாம்?

குறிப்பிட்ட கால இடைவெளியில் கீ போர்டு, மவுஸ், செல்போன் ஆகியவற்றைச் சுத்தப்படுத்த வேண்டும். கீ போர்டைத் தலைகீழாகக் கவிழ்த்து மெதுவாகத் தட்டுவதன் மூலம் அதனுள்ளே சிக்கியிருக்கும் உணவுத் துணுக்குகளையோ, சிறிய குப்பையையோ அகற்றலாம். மெல்லிய துணியின் மூலம் இவற்றைத் துடைத்தெடுக்கலாம்.

இவை அனைத்தையும்விட ரொம்ப முக்கியம் சுயச் சுத்தம். எங்கெல்லாம் கிருமித் தொற்றுக்கு வாய்ப்பு இருக்கிறதோ, அங்கெல் லாம் சென்றுவந்த பிறகு கைகளைச் சுத்தம் செய்வது நல்லது. அதுவும் வெறும் தண்ணீரிலோ அல்லது சுத்திகரிப்பான் மூலமாகவோ சும்மா கழுவுவதால், பாக்டீரியாக்கள் முழுமையாக அழிவதில்லை. சுத்திகரிப்பானைப் பயன்படுத்திக் குறைந்தபட்சம் 30 விநாடிகள் தேய்த்துக் கழுவ வேண்டும்.

அதேபோலச் சாப்பாடோ, கொறிப்போ எதையும் தூசி பறக்கும், மனிதர்கள் அதிகம் நடமாடும் பகுதிகளிலோ சாப்பிடுவதைத் தவிருங்கள். இப்படிச் சுத்தத்தைப் பராமரிக்கத் தவறினால் பின்னால், அவதிப்படப் போவது வேறு யாருமல்ல, நாம்தான்.

படித்ததில் பிடித்தது !

படித்ததில் பிடித்தது 

துள்ளித்திரிந்ததொரு காலம் பள்ளிப்பயின்ற தொரு காலம்...!!!

• தனி படுக்கையில் அல்ல அம்மா அப்பாக்கூட படுத்து உறங்கியவர்கள் நாம் தான்

• எந்த வித உணவுப் பொருட்களும் நமக்கு அலர்ஜியாக இருந்ததில்லை.

• கிச்சன் அலமாரிகளில் சைல்டு புருஃப் லாக் போட்டு இருந்ததில்லை.

• புத்தகங்களை சுமக்கும்பொதிமாடுகளாகஇருந்ததில்லை.

• சைக்கிள் ஒட்டும் போது ஹெல்மேட் மாட்டி ஒட்டி விளையாண்டது இல்லை.

• பள்ளியில் இருந்து வீட்டிற்கு வந்தது முதல் இருட்டும் வரை ஒரே விளையாட்டுதான் ரூமிற்குள் அடைந்து உலகத்தை பார்ப்பதில்லை.

• நாங்கள் விளையாடியது நிஜ நண்பர்களிடம் தான் நெட் நண்பர்களிடம் இல்லை.

• தாகம் எடுத்தால் தெரு குழாய்க்களில் தண்ணிர் குடிப்போம் ஆனால் பாட்டில் வாட்டர் தேடியதில்லை.

• ஒரே ஜூஸை வாங்கி நாலு நண்பர்களும் மாறி மாறி குடித்தாலும் நோய்கள் எங்களை வந்தடைந்ததில்லை.

• அதிக அளவு இனிப்பு பண்டங்களையும் தட்டு நிறைய சாதம் சாப்பிட்டுவந்த போதிலும் ஒவர் குண்டாக இருந்ததில்லை.

• காலில் ஏதும் அணியாமல் இருந்து நாள் முழுவதும் சுற்றி வந்தாலும் காலுக்கு ஏதும் நேர்ந்ததில்லை.

• சிறு விளக்கு வெளிச்சத்தில் படித்து வந்தாலும் கண்ணாடி அணிந்ததில்லை.

• உடல் வலிமை பெறஊட்டசத்து பானங்கள்அருந்தியதில்லை .மிஞ்சிய சாதத்தில் ஊற்றி வைத்த நீரைச் சாப்பிட்டே உடல் வலிமை பெற்றவர்கள்.

• எங்களுக்கு வேண்டிய வீளையாட்டு பொருட்களை நாங்களே உருவாக்கி விளையாடி மகிழ்வோம்

• எங்கள் பெற்றோர்கள் பண வசதி மிக்க லட்சாதிபதிகள் அல்ல ஆனாலும் அவர்கள் பணம் பணம் என்று அதன் பின்னால் ஒடுபவர்கள் அல்லர். அவர்கள் தேடுவதும் கொடுப்பதும் அன்பை மட்டுமே பொருட்களை அல்ல

• அவர்கள் தொடர்பு கொள்ளும் அருகாமையில்தான் நாங்கள் இருந்து வந்தோம் அவர்கள் எங்களை தொடர்பு கொள்ள ஏலேய்ய்ய் என்ற ஒரு வார்த்தை போதுமானதாக இருந்தது அதனால் தொடர்பு கொள்ள செல்போனை தேட அவசியமில்லை.

• உடல் நலம் சரியில்லை என்றால் டாக்டர் வீடு தேடி வருவார் டாக்டரை தேடி ஒடியதில்லை
.
• எங்களது உணர்வுகளை போலியான உதட்டசைப்பினால் செல்போன் மூலம் பறிமாறவில்லை

உள்ளத்தில் இருந்து வரும் உண்மைகளை எழுத்தில் கொட்டி கடிதமாக எழுதி தெரிவித்து வந்தோம். அதனால் சொன்ன சொல்லில் இருந்து என்றும் மாறியதில்லை.

• எங்களிடம் செல்போன் டிவிடி, ப்ளை ஸ்டேஷன், எக்ஸ்பாக்ஸ், வீடியோ கேம் பெர்சனல் கம்பியூட்டர், நெட், சாட் போன்றவகள் இல்லை ஆனால் நிறைய நிஜமான நண்பர்கள் இருந்தனர்

• வேண்டும் பொழுது நினைத்த நண்பர்கள் வீட்டிற்கு சென்று உணவுண்டு உரையாடி மகிழந்து வந்தோம். அவர்கள் வீட்டிற்கு போவதற்கு போனில் அனுமதி பெற தேவையில்லை.

• எங்கள் காலங்களில் திறமை மிக்க தலைவர்கள் இருந்தனர். அவர்கள் சமுகத்திற்காக தங்கள் செல்வங்களை செலவிட்டனர் இந்த காலம் போல சமுக செல்வங்களை கொள்ளை அடித்தவர்கள் அல்லர்.

• உறவுகள் அருகில் இருந்தது உள்ளம் நன்றாக இருந்ததால் உடல் நலம் காக்க இன்சூரன்ஸ் எடுத்தத்தில்லை

• நாங்கள் எடுத்த புகைபடங்கள் கருப்பு வெள்ளையாக இருந்தாலும் அதில் உள்ளவர்களிடம் வண்ணமயமான நல்ல எண்ணங்கள் இருப்பதை உணரலாம். ஆனால் இப்போது எடுக்கப்படும் படங்கள் கலராக இருக்கலாம் ஆனால் அதில் உள்ளவ்ர்களின் எண்ணங்கள் கருப்பாகவே இருக்கின்றன

Thursday, 27 February 2014

விஷ‌த்தை மு‌றி‌க்கு‌ம் ‌பிரம‌த்த‌ண்டு!

பிரமத்தண்டு இலைச் சாறு 30 மில்லியளவு குடிக்கக் கொடுத்து கடிவாயில் அரைத்துக் கட்ட, பேதியாகி பாம்பு விஷம் இறங்கும்.


பிரமத்தண்டு இலைச் சாறை தேள் கொட்டிய இடத்தில் தடவ கடுப்பு நீங்கும்.


பிரமத் தண்டு இலைச் சாறை பத்து மில்லியளவு எடுத்து காலையில் வெறும் வயிற்றில் ஒரு மாதம் தொடர்ந்து சாப்பிட்டுவர சொறி, சிரங்கு, மேக ரணங்கள், குட்டம் குணமாகும்.


பிரமத் தண்டு இலையை அரைத்துக் கட்டிவரக் கரப்பான், பேய்ச் சொறி, சிரங்கு, உள்ளங்கால், கை, பாதங்களில் வரும் புண்கள் குணமாகும்.


‌பிர‌ம த‌ண்டு பூக்களை 20 எடுத்து நீரில் ஊற வைத்து குளித்து வர 50 நாட்களில் கண் நோய் குணமாகும்.