மனிதனாய் பிறந்த அனைவருக்குமே பருவ வயதில் காதல் பூப்பது உண்டு. பெரும்பாலானவர்களுக்கு கடைப் பதின்ம வயதிலும், இருபதுகளின் ஆரம்பத்திலும் காதல் பூப்பது உண்டு. சிலருக்கு எதிர்பாலினத்தின் மீதான ஈர்ப்பையே காதல் என்று நினைத்துவிட்டு, அனைவரிடமும் காதல் சொல்லி அடி வாங்குவதும் உண்டு. குறிப்பாக 13(teen age) வயதில் பருவ வயதை அடைந்ததும் ஆணுக்கும், பெண்ணுக்கும் எதிர்பாலினத்தின் மீதான ஒரு ஈர்ப்பு வந்துவிடும். ஆனால் சமூக, மன நலங்களால் அவர்கள் காதலில் ஈடுபடுவதில்லை.
பதின்ம வயது : பதின்ம வயதில் ஏற்படும் ஈர்ப்பு சிலருக்கு காதலாய் மாறும் ஆனால் அப்படியான முதல் காதல் அனைவருக்கும் வெற்றியாய் அமையாது. பதின்ம வயதில் ஏற்படும் காதல் வெற்றியளிக்காதமைக்கு பல்வேறு காரணங்கள் உண்டு. சொல்லப் போனால் அது காதல் என்று சொல்வதை விடவும் அது ஓர் ஈர்ப்பு ( INFACTUATION ) எனத் தான் கூறவேண்டும்.
உடலில் ஏற்படும் மாற்றங்கள் குழந்தை என்னும் நிலையில் இருந்து பெரியவர் என்ற நிலைக்கு ஒருவரைத் தயார்ப்படுத்தும் காலமே 13 -19 வரையிலான பருவ காலம். இக்காலத்தில் உடலில் ஏற்பட்ட மாற்றங்கள் மனதை பல்வேறு வகையில் குழப்பி விடும். படிப்பில் கவனம் சிதறும், பெற்றோர் மீதும், நண்பர் மீதும் எரிச்சல் வரும். தமக்குப் பிடித்த தோழன்/தோழியோடு பழக வேண்டும் என்ற ஆவல் தூண்டப்படும். ஆனால் இந்தக் காலத்தில் அவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். காரணம் இந்த பதின்ம வயதினைப் பக்குவமாக மனமும், உடலும் சிதையாமல் கடந்துவிட்டால் அதன் பின்னான காலம் நன்மையாக அமைந்துவிடும். பெரும்பாலானவர்களுக்கு இந்த பதின்ம வயதில் தான் படிப்புச் சிதறும் .
இப்படியாகத் தான் ஒவ்வொருவரின் வாழ்விலும் அந்த பதின்ம வயதில் ஏற்படும் சிறு பிசகும், வாழ்வையே மாற்றி விடுவதுண்டு. காதல் செய்வதோ, உலக விசயங்களை அறிந்துக் கொள்வதோ தவறு என்று சொல்லவில்லை. ஆனால் பதின்ம வயதில் எதற்கு முக்கியத்துவம் கொடுப்பது என பலர் குழம்பி விடுவார்கள். சிலர் உடலையும், மனதையும் கெடுத்து விடுவார்கள். இது பிற்காலங்களில் பெரிய ஆறாவடுவாய் அவர்களின் மனதில் இருந்துவிடுவது உண்டு.
காதல் செய்யும் பருவம் : அப்போது காதல் செய்ய எது சரியான பருவம் எனக் கேட்கின்றீர்களா? காதல் செய்ய இது தான் சரியான பருவம் என்றில்லை. ஆனால் காதல் என்றால் என்ன ? திருமணம் என்றால் என்ன ? வாழ்க்கையினை அடுத்தக் கட்டத்துக்கு நகர்த்துவது எப்படி என அறிந்துக் கொள்ளும் போது தான் அதனால் பாதிப்புக்கள் வராது.
காதல் செய்வது எப்படி : குறிப்பாக பதின்ம வயதினைக் கடந்துவிட்டாலே ஓரளவுக்கு முதிர்ச்சி வந்துவிடும். காதல் யாருடன் எப்போது ஏற்படும் என்று சொல்ல முடியாது. ஆனால் இவர் தான் நமக்கு சரியானவரா என ஒன்றுக்கு இரண்டு முறை யோசித்துவிடுவது நல்லது. காதல் என்பது நீண்டகால COMMITMENT என்பதால் ஒருவர் மற்றொருவரை நன்கு அறிந்துக் கொள்ளவும், புரிந்துக் கொள்ளவும் அவகாசம் எடுத்துக் கொள்ளுங்கள். ஒருவருக்கு ஒருவர் அறிமுகமாகி, நட்பாகி, காதலில் விழுந்தப் பின்னர் காதலர்கள் முக்கியமான பல முடிவுகளை எடுக்க வேண்டும்.
திட்டமிடல் : காதலிலும் குறுகிய காலத் திட்டங்கள், நீண்டக் காலத் திட்டங்கள் வகுத்துக் கொள்வது மிகவும் நல்லது. குறிப்பாக இருவது வயதுப் ஆணும், பெண்ணும் நண்பர்களாகி, இருப்பத்தொரு வயதில் காதலர்களாகி விட்டால். அடுத்து என்ன செய்வது காதலர் என்ற நிலையில் இருந்து குடும்பத்தார் என்ற நிலைக்கு எப்படி வெற்றிகரமாக வாழ்வை மாற்றுவது என்ற திட்டமிடல் அவசியம். கல்வியை முடிப்பது, வேலைத் தேடுவது, திருமணத்துக்கான பணம் சேமிப்பது, பெற்றோரிடம் சம்மதம் வாங்குவது, சமூகத்தில் நல்ல முறையில் வாழ்வை தொடங்குவது என படிப்படியான திட்டங்களை வகுத்துக் கொள்வது மிகவும் அவசியம்.
காதலில் எது முக்கியம் : காதலில் மிகவும் முக்கியமானது உண்மை. இருவரும் எதனையும் மறைத்தல் கூடாது. குறிப்பாக தம்மைப் பற்றிய வெளிப்படை உணர்வு மிகவும் அவசியம்.
இரண்டாவது பேசுதல், காதலர்கள் ஆனப் பின் காதல் வசனங்கள் மட்டும் பேசினால் போதாது, அதையும் தாண்டி வெளிப்படையான பேச்சு இருத்தல் வேண்டும். பிரச்சனைகள் எழும் போது பேசித் தீர்த்தல் அவசியம். காதலில் ஈகோவோ, பொறாமையோ கூடவே கூடாது. அப்படி உங்களது காதலர் மீது பொறாமை வந்துவிட்டால் அதனை அவரிடம் கூறிவிடுதல் மிகவும் அவசியம்.
மூன்றாவது மதித்தல், காதலர்கள் ஒருவரை ஒருவர் மதிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். அதனையும் தாண்டி காதலரின் பெற்றோர், குடும்பம் ( அவர்களை உங்களுக்குப் பிடிக்காவிட்டாலும் ), நம்பிக்கைகள், உணவுப் பழக்கங்கள், மத நம்பிக்கைகள் அனைத்தையும் மாற்ற வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் மதிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.
காதலில் பார்க்கக் கூடாதவை : ஒருவரை உங்களுக்குப் பிடித்து விட்டது என்றால் அவரிடம் காதல் சொல்லுகின்றீர்கள். அவர்களுக்கும் உங்களைப் பிடித்து இருக்கின்றது என்றால். அன்று முதல் நீங்கள் காதலர் ஆகி விடுகின்றீர்கள். உடனேயே உங்களது மனத் தேவைகளையும், உடல் தேவைகளையும் நிறைவேற்றிக் கொள்ள முயற்சிக்காதீர்கள். அது உண்மையான காதலாக அமையாது. காதலர் ஆகும் வரை அவர்களை உயர்த்தி வைத்திருப்பீர்கள், ஆனால் காதலர் ஆனவுடம் எதோ அவர்கள் உங்களது அடிமைகளைப் போல நடத்தாதீர்கள்.

0 comments:
Post a Comment