Pages

Subscribe:

Ads 468x60px

Saturday, 15 February 2014

"மாமனிதர்"" - காமராஜர் ஒரு முறை...?

"மாமனிதர்"" - காமராஜர் ஒரு முறை, தஞ்சை மாவட்டத்தில் இருந்த பழைமையான கோயில் ஒன்றைப் பார்வையிடச் சென்றார்.


சிதிலம் அடைந்திருந்தாலும் புராதனமான அந்தக் கோயிலின் கட்டுமானம் அவரை வியக்க வைத்தது. ஓர் இடத்தில் நின்றவர், "இந்தக் கோயிலைக் கட்டுனது யாரு?'' எனக் கேட்டார். உடன் வந்த அதிகாரிகளுக்கு அதுபற்றி தெரியவில்லை


. பதில் சொல்லத் தெரியாமல் விழித்தனர். அங்கு மேலே இருந்த ஒரு டியூப் லைட்டைச் சுட்டிக் காட்டிய காமராஜர், "இவ்வளவு காலம் நிலைச்சு நிக்கிற இந்தக் கோயிலைக் கட்டியவர் யாருன்னு தெரியலே...


ஆனா, ஒரு மாதம்கூட ஒழுங்கா எரியாத இந்த டியூப் லைட்ல உபயதாரர் யாருன்னு எவ்வளவு பெரிசா எழுதி வெச்சிருக்காங்க ன்னு பாருங்க...'' என்றார்.


 இதுவரை காமராஜர் கட்டிய எதிலும் அவர் சம்மந்தமான எதையும் குறிப்பிட சொன்னதே இல்லை...

"மாமனிதர்""

0 comments:

Post a Comment