Pages

Subscribe:

Ads 468x60px

Friday, 31 January 2014

முதுமையில் தூக்கம்....!

ஒவ்வொரு மனிதனுக்கும்  முதுமை என்பது ஒருநாள் வரக்கூடிய பருவமாகும். இந்த பருவம்தான் மிகுந்த அனுபவங்களை மற்றவர்களுக்கு எடுத்துச்சொல்லும் பருவமாகும்.  நம் முன்னோர்கள் முதுமைப்பருவத்தை மீண்டும் ஒரு குழந்தைப் பருவம் என்றனர்.

பண்பாடு நிறைந்த நம் பாரத தேசத்தில் மக்கள் கூட்டுக் குடும்பங்களாக வாழ்ந்து வந்தனர்.  அனுபவமிக்க முதியோர் சொல்லும் வழி காட்டுதலில் பிள்ளைகளை வழி நடத்தி வந்தனர்.  இதனால் இவர்கள் ஒழுக்க சீலர்களாக வாழ்ந்து குடும்பத்தை ஆலமரமாகத் தழைக்கச் செய்தனர்.
இந்த முதுமைப் பருவத்தில் உடல் பலவகையான பாதிப்புகளை சந்திக்க நேர்வது இயல்பான ஒன்று தான்.  உடலின் சத்துக்கள் குறைதல், எலும்புகளின் வலிமை குன்றல், உறுப்புகளின் செயல்பாடு குறைதல் போன்றவை இக்காலத்தில் ஏற்படும்.  முதியவர்கள் பலர் பல நோய்களில் அவதியுற்றாலும், முக்கால் வாசிப்பேர் தூக்கமின்மையால் அவதியுறுகின்றனர்.  முதுமைப் பருவத்தில் தூக்கமின்மை உடலின் ஆரோக்கியத் திற்குக் கேடாகும்.

முதுமைப் பருவம் என்பது இயற்கை கொடுக்கும் ஓய்வுப் பருவம்.  இளைய தலை முறையினரை  நல்வழிப்படுத்தும் பருவமும் இதுவே.

முதுமையில் அதிக மன உளைச்சல், மனதிற்கு வேதனை தரும் சம்பவங்கள், ஓயாத சிந்தனை இவற்றாலும், அல்லது சர்க்கரை நோய் இரத்த அழுத்த நோய், சிறுநீரக நோய் இவற்றாலும் தூக்கமின்மை ஏற்படுகிறது.

நரம்பு மண்டலத்தில் சரிவர இரத்த ஓட்டமின்மையாலும், இரத்தத்தில் பித்த நீர் அதிகரிப்பதாலும் அதாவது கல்லீரல்  பாதிக்கப் பட்டு அதனால் பித்தப்பை அலர்ஜி உண்டாகி அதிக பித்த நீரைச் சுரக்கிறது. இதனாலும் இரத்தத்தில் பித்த நீர் அதிகரிக்கிறது.

இதனால் தூக்கமின்மை உண்டாகிறது.  பொதுவாக தூக்கமின்மைக்கு பித்தம் அதிகரிப்பு தான் முக்கிய காரணமாகும்.  பித்தத்தை அதிகரிக்கக் கூடிய உணவுப் பொருட்களை உண்பதாலும், அதனால் வயிற்றில் செரியாமை ஏற்பட்டு, வாயு அதிகரித்து, நரம்பு மண்டலத்தை பாதித்து உடலில் நரம்புகள் இறுக்கம் உண்டாகி தசை நார்கள் இறுகிவிடுகின்றன.  இதனால் தூக்கமின்மை உண்டாகிறது.

வயதுக்கு மீறி உடலுக்கு  கடின வேலை கொடுப்பவர்கள், ஓய்வில்லா வேலை இவையாலும் உடல் அசதியுற்று தூக்கமின்மை உண்டாகும்.

அதுபோல் மலச்சிக்கல் இருந்தாலும் தூக்கமின்மை ஏற்படும்.  மலச்சிக்கலால் குடலில் உள்ள குன்ம வாயு சீற்றம் கொண்டு சிரசைத் தாக்கும் .  இதனால் மூளை வறட்சி உண்டாகி நரம்பு மண்டலத்தை உலரச் செய்து, மனதிற்கு ஒருவித தாக்கத்தை உண்டுபண்ணி தூக்க மின்மையை ஏற்படுத்துகிறது.

முதுமையில் உண்டாகும் அதீத பாசம், ஏக்கம், இயலாமை, பொருளாதார தட்டுப்பாடு, குழந்தைகளால் போதிய கவனிப்பின்மை, தனிமை, போதிய தங்கும் வசதியின்மை, அடுத்தவரின் உதவியை எதிர்பார்ப்பது போன்ற காரணங்களாலும் தூக்கமின்மை உண்டாகும்.

சிலருக்கு நோய்களின் தாக்குதலுக்கு மருந்து, மாத்திரை எடுப்பதால் அவை தூக்கமின்மையை உண்டாக்கும்.  இளம் வயதில் அதிக மது, போதை வஸ்து, புகைப்பழக்கம் கொண்டவர்களுக்கு முதுமையில் தூக்கமின்மை ஏற்படும்.

மனதளவில் தான் வயது முதிர்ந்தவர் என்ற எண்ணத்தில் எந்த வித வேலையையும் செய்யாமல், உடலுக்கு அசைவு கொடுக்காமல் ஒரே இடத்தில் அமர்ந்திருப்பவர்களுக்கும் தூக்க மின்மை உண்டாகும்.

தூக்கமின்மையைப் போக்க

பழங்காலத்தில் அனைவருமே கூட்டுக் குடும்பமாக வாழ்ந்தனர்.  அந்த குடும்பத்தில் உள்ள பெரியவர்களின் சொல்படிதான் அந்த குடும்பத்து உறுப்பினர்கள் நடந்துகொள்வார்கள்.  முதியவர்கள்  மாலைநேரத்தில் வீட்டுத் திண்ணையிலோ, கோவில்களிலோ அல்லது எதாவது ஒரு பொது இடத்திலோ அமர்ந்து ஒருவருக்கொருவர் கலந்து பேசி மனக் குறைகளையும் நிறைகளையும் பகிர்ந்து கொள்வார்கள்.  இதனால் அவர்கள் தங்களுக்கு உண்டான மனக்குறைகள் தீர்ந்து நல்ல தூக்கத்தை பெற்றார்கள்.

மனம் அமைதி பெற்றால் உறக்கம் தானாக நம்மைத் தழுவிவிடும்.  நம் முன்னோர்கள் அயராது உழைத்து உடலுக்கும் பயிற்சி  கொடுத்து, மாலையில் மற்றவர்களுடன் கலந்து பேசி, மனதிற்கும் அமைதி கொடுத்து வாழ்ந்ததால் சஞ்சலம், சலனம் இல்லா ஆரோக்கியமான வாழ்வைப்  பெற்றனர்.

ஆனால் தற்போது முதுமையிலும், வேலைப்பளு, மன அமைதியின்மை எப்போதும் போராட்டம், பொறுமையின்மையும் ஆட் கொண்டுவிட்டது.  ஒருவருக்கொருவர் மனத் துயரங்களை பகிர்வது என்பது இல்லாமல் போய்விட்டது. அதோடு உணவு முறை, இரசாயனம் கலந்த உணவு போன்றவற்றால் உடல் சீர்கேடு அடைந்து முதுமையில் தூக்கமின்மை ஏற்படுகிறது.

நல்ல தூக்கத்திற்கு முதுமையில் நடைப்பயிற்சி அவசியம்.  மென்மையான உணவுகளை உட்கொள்ள வேண்டும்.

தூக்க மாத்திரை உண்பவர்கள் எப்போதும் சோர்ந்தே காணப்படுவார்கள்.  இதனால் இவர்களுக்கு நரம்புத் தளர்ச்சி உண்டாகிவிடுகிறது.  நாளடைவில் தூக்கமாத்திரையை 1க்கு 2 என்று அதிகரித்தாலும் தூக்கம் என்பது வெறும் கனவாகிவிடுகிறது.  தூக்கமாத்திரை உட்கொள்ளும் பழக்கத்தை தவிர்க்க வேண்டும்.

நல்ல தூக்கம் பெற

· நல்ல தூக்கம் கிடைக்க வேண்டுமானால், இரவு உணவில் காரத்தைக் குறைத்து சாப்பிட வேண்டும்.

· நார்ச்சத்து மிகுந்த பழங்கள், எளிதில் சீரணமாகும்.  மென்மையான உணவுகள் போன்றவற்றை உண்ண வேண்டும்.

· இரவில் படுக்கைக்குச் செல்லும் முன் சூடான பால் அருந்தினால் நல்ல தூக்கம் கிடைக்கும்.

· படுக்கையறை மிகுந்த காற்றோட்டமானதாக இருக்க வேண்டும்.  மென்மையான இசையைக் கேட்டுக்கொண்டே தூங்கலாம்.

· தியானம் செய்ய வேண்டும்.  இதனால் சிதைந்து கிடக்கும் எண்ணங்கள் ஒருநிலைப்பட்டு மன அமைதியடைந்து, எதையும் தாங்கும் இதயமாக தியானம் உங்களை மாற்றும்.  இந்நிலை அடைந்தால், தூக்கம் தானாகவே உங்களைத் தேடி வரும்.  எனவே தியானம் செய்ய பழகிக்கொள்ள வேண்டும்.

· தாமரை இலையின் மேல் தண்ணீர் போல் பற்றற்று வாழ் என்றார் ராமகிருஷ்ணர்.  அவ்வாறு வாழ்ந்தால் மனம் அமைதியடையும்.  மனம் அமைதி அடைந்தால் நல்ல தூக்கம் தானாகவே வரும்.

· மனம் விட்டு பேசுங்கள், மகிழ்ச்சியான எண்ணங்களை அசைபோடுங்கள், முதுமைப் பருவம் போராட்டமாக இல்லாமல் போற்றுதலாகத் தோன்றும்.

கல்யாணத்தை விடவும் காதல்ல இவ்வளவு சுவாரஸ்யம் இதுக்குதுங்க…

கல்யாணத்தை விடவும் காதல்ல இவ்வளவு சுவாரஸ்யம் இதுக்குதுங்க…

காதல் பொழுதில் விரும்பும் குறும்பு, கல்யாணத்தில் கிடைப்பதில்லை…’ என சொல்லப்படுவதுண்டு.

கல்யாணம் செய்து கொள்வதற்காகத் தான் பெரும்பாலானவர்கள் காதலிக்கிறார்கள் என்ற போதும், காதல் வாழ்க்கையே கல்யாணத்திற்குப் பிறகும் தொடர்வதில்லை. இதோ, காதலுக்கும், கல்யாணத்திற்உம் இடையே உள்ள சுவாரஸ்யமான வித்தியாசங்கள் சில…..

காதல் சண்டை….

காதல் என்பது கைகோர்த்த படி உலகைச் சுற்றி வரும் உலா…திருமணம் என்பது நடுத் தெரு என்று கூட பாராமல் போடும் சண்டை.

பார்சல் சாப்பாடு….

காதல் என்பது பிடித்த உணவகங்களில் சேர்ந்து சாப்பிடுவது மாதிரி… திருமணம் என்பது பார்சல் வாங்கி வந்து சாப்பிடுவது

சோபா….

காதல் என்பது சோபாவில் அமர்ந்து சொகுசாக படம் பார்ப்பது… திருமணம் என்பது கோபித்துக் கொண்டு அந்த இருவரில் ஒருவர் சோபாவில் படுத்துத் தூங்கத்தான் உதவும்…

குழந்தைகள்….

காதல் பொழுதுகளில் குழந்தைகளைப் பற்றி கனவு காண்பார்கள்…. திருமணத்திற்குப் பிறகோ குழந்தைகளிடமிருந்து தங்களுக்கு சிறிது தனிமை கிடைக்காதா என்ற ஏக்கத்தில் தவிப்பார்கள்

பசி….

காதல் பசியைக் குறைக்கும்… திருமணம் உடல் எடையைக் குறைக்கும்… (கவலைகளால்…)

டிவி யுத்தம்….

காதலுக்கு டிவி தேவையில்லை… திருமணத்திற்குப் பிறகோ டிவி ரிமோட்டிற்காக உலகப் போரே நடக்கும்….

இளநீர் தத்துவம்….

காதலில் ஒரு இளநீரில் 2 ஸ்ட்ரா… திருமணத்திற்குப் பிறகோ, ‘நீயே குடிச்சுத் தீர்த்துடலாம்னு ஆசைப்படாத…’

அவ்ளோ தாங்க….

மொத்தத்தில், காதலுக்கு கண்ணில்லை….கல்யாணம் கண்களைத் திறந்து வைக்கும் கருவி….

ஆத்திசூடியை உலகறியச் செய்வோம்...!

ஆத்திசூடியை உலகறியச் செய்வோம்

1. அறம் செய விரும்பு / 1. Learn to love virtue.
2. ஆறுவது சினம் / 2. Control anger.
3. இயல்வது கரவேல் / 3. Don't forget Charity.
4. ஈவது விலக்கேல் / 4. Don't prevent philanthropy.
5. உடையது விளம்பேல் / 5. Don't betray confidence.
6. ஊக்கமது கைவிடேல் / 6. Don't forsake motivation.
7. எண் எழுத்து இகழேல் / 7. Don't despise learning.
8. ஏற்பது இகழ்ச்சி / 8. Don't freeload.
9. ஐயம் இட்டு உண் / 9. Feed the hungry and then feast.
10. ஒப்புரவு ஒழுகு / 10. Emulate the great.
11. ஓதுவது ஒழியேல் / 11. Discern the good and learn.
12. ஒளவியம் பேசேல் / 12. Speak no envy.
13. அகம் சுருக்கேல் / 13. Don't shortchange.
14. கண்டொன்று சொல்லேல் / 14. Don't flip-flop.
15. ஙப் போல் வளை / 15. Bend to befriend.
16. சனி நீராடு / 16. Shower regularly.
17. ஞயம்பட உரை / 17. Sweeten your speech.
18. இடம்பட வீடு எடேல் / 18. Judiciously space your home.
19. இணக்கம் அறிந்து இணங்கு / 19. Befriend the best.
20. தந்தை தாய்ப் பேண் / 20. Protect your parents.
21. நன்றி மறவேல் / 21. Don't forget gratitude.
22. பருவத்தே பயிர் செய் / 22. Husbandry has its season.
23. மண் பறித்து உண்ணேல் / 23. Don't land-grab.
24. இயல்பு அலாதன செய்யேல் / 24. Desist demeaning deeds.
25. அரவம் ஆட்டேல் / 25. Don't play with snakes.
26. இலவம் பஞ்சில் துயில் / 26. Cotton bed better for comfort.
27. வஞ்சகம் பேசேல் / 27. Don't sugar-coat words.
28. அழகு அலாதன செய்யேல் / 28. Detest the disorderly.
29. இளமையில் கல் / 29. Learn when young.
30. அரனை மறவேல் / 30. Cherish charity.
31. அனந்தல் ஆடேல் / 31. Over sleeping is obnoxious.
32. கடிவது மற / 32. Constant anger is corrosive.
33. காப்பது விரதம் / 33. Saving lives superior to fasting.
34. கிழமைப்பட வாழ் / 34. Make wealth beneficial.
35. கீழ்மை அகற்று / 35. Distance from the wicked.
36. குணமது கைவிடேல் / 36. Keep all that are useful.
37. கூடிப் பிரியேல் / 37. Don't forsake friends.
38. கெடுப்பது ஒழி / 38. Abandon animosity.
39. கேள்வி முயல் / 39. Learn from the learned.
40. கைவினை கரவேல் / 40. Don't hide knowledge.
41. கொள்ளை விரும்பேல் / 41. Don't swindle.
42. கோதாட்டு ஒழி / 42. Ban all illegal games.
43. கெளவை அகற்று / 43. Don't vilify.
44. சக்கர நெறி நில் / 44. Honor your Lands Constitution.
45. சான்றோர் இனத்து இரு / 45. Associate with the noble.
46. சித்திரம் பேசேல் / 46. Stop being paradoxical.
47. சீர்மை மறவேல் / 47. Remember to be righteous.
48. சுளிக்கச் சொல்லேல் / 48. Don't hurt others feelings.
49. சூது விரும்பேல் / 49. Don't gamble.
50. செய்வன திருந்தச் செய் / 50. Action with perfection.
51. சேரிடம் அறிந்து சேர் / 51. Seek out good friends.
52. சையெனத் திரியேல் / 52. Avoid being insulted.
53. சொற் சோர்வு படேல் / 53. Don't show fatigue in conversation.
54. சோம்பித் திரியேல் / 54. Don't be a lazybones.
55. தக்கோன் எனத் திரி / 55. Be trustworthy.
56. தானமது விரும்பு / 56. Be kind to the unfortunate.
57. திருமாலுக்கு அடிமை செய் / 57. Serve the protector.
58. தீவினை அகற்று / 58. Don't sin.
59. துன்பத்திற்கு இடம் கொடேல் / 59. Don't attract suffering.
60. தூக்கி வினை செய் / 60. Deliberate every action.
61. தெய்வம் இகழேல் / 61. Don't defame the divine.
62. தேசத்தோடு ஒட்டி வாழ் / 62. Live in unison with your countrymen.
63. தையல் சொல் கேளேல் / 63. Don't listen to the designing.
64. தொன்மை மறவேல் / 64. Don't forget your past glory.
65. தோற்பன தொடரேல் / 65. Don't compete if sure of defeat.
66. நன்மை கடைப்பிடி / 66. Adhere to the beneficial.
67. நாடு ஒப்பன செய் / 67. Do nationally agreeables.
68. நிலையில் பிரியேல் / 68. Don't depart from good standing.
69. நீர் விளையாடேல் / 69. Don't jump into a watery grave.
70. நுண்மை நுகரேல் / 70. Don't over snack.
71. நூல் பல கல் / 71. Read variety of materials.
72. நெற்பயிர் விளைவு செய் / 72. Grow your own staple.
73. நேர்பட ஒழுகு / 73. Exhibit good manners always.
74. நைவினை நணுகேல் / 74. Don't involve in destruction.
75. நொய்ய உரையேல் / 75. Don't dabble in sleaze.
76. நோய்க்கு இடம் கொடேல் / 76. Avoid unhealthy lifestyle.
77. பழிப்பன பகரேல் / 77. Speak no vulgarity.
78. பாம்பொடு பழகேல் / 78. Keep away from the vicious.
79. பிழைபடச் சொல்லேல் / 79. Watch out for self incrimination.
80. பீடு பெற நில் / 80. Follow path of honor.
81. புகழ்ந்தாரைப் போற்றி வாழ் / 81. Protect your benefactor.
82. பூமி திருத்தி உண் / 82. Cultivate the land and feed.
83. பெரியாரைத் துணைக் கொள் / 83. Seek help from the old and wise.
84. பேதைமை அகற்று / 84. Eradicate ignorance.
85. பையலோடு இணங்கேல் / 85. Don't comply with idiots.
86. பொருள்தனைப் போற்றி வாழ் / 86. Protect and enhance your wealth.
87. போர்த் தொழில் புரியேல் / 87. Don't encourage war.
88. மனம் தடுமாறேல் / 88. Don't vacillate.
89. மாற்றானுக்கு இடம் கொடேல் / 89. Don't accommodate your enemy.
90. மிகைபடச் சொல்லேல் / 90. Don't over dramatize.
91. மீதூண் விரும்பேல் / 91. Don't be a glutton.
92. முனைமுகத்து நில்லேல் / 92. Don't join an unjust fight.
93. மூர்க்கரோடு இணங்கேல் / 93. Don't agree with the stubborn.
94. மெல்லி நல்லாள் தோள்சேர் / 94. Stick with your exemplary wife.
95. மேன்மக்கள் சொல் கேள் / 95. Listen to men of quality.
96. மை விழியார் மனை அகல் / 96. Dissociate from the jealous.
97. மொழிவது அற மொழி / 97. Speak with clarity.
98. மோகத்தை முனி / 98. Hate any desire for lust.
99. வல்லமை பேசேல் / 99. Don't self praise.
100. வாது முற்கூறேல் / 100. Don't gossip or spread rumor.
101. வித்தை விரும்பு / 101. Long to learn.
102. வீடு பெற நில் / 102. Work for a peaceful life.
103. உத்தமனாய் இரு / 103. Lead exemplary life.
104. ஊருடன் கூடி வாழ் / 104. Live amicably.
105. வெட்டெனப் பேசேல் / 105. Don't be harsh with words and deeds.
106. வேண்டி வினை செயேல் / 106. Don't premeditate harm.
107. வைகறைத் துயில் எழு / 107. Be an early-riser.
108. ஒன்னாரைத் தேறேல் / 108. Never join your enemy.
109. ஓரம் சொல்லேல் / 109. Be impartial in judgement.

பூனை குறுக்கே போனால் என்ன அர்த்தம்????

பூனை குறுக்கே போனால் என்ன அர்த்தம்???

பூனைகள் எப்போதும் குடியிருப்புகள் நிறைந்த பகுதிகளில்தான் இருக்கும்.

மன்னர்கள் காலத்தில் போருக்கு படை திரட்டிச் செல்லும் வழியில் பூனையை பார்த்தால், இந்த வழியில்
குடியிருப்புகள் இருக்கிறது. அங்கே இருக்கும் ஆண்மகன்கள் அனைவரும்
போர்க்களத்திற்கு சென்றிருப்பார்கள். அங்கே சிறுவர்கள், வயதானவர்கள்,
பெண்கள் மட்டுமே இருப்பார்கள்.

ஆகவே இந்த வழியாக சென்றால் அவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதற்காக, அவர்கள் வந்த திசையை மாற்றி வேறு திசையில் செல்வார்களாம்.

மேலும் அக்காலத்தில் போக்குவரத்துக்கு பெரும்பாலும் குதிரையை பயன்படுத்தினர்.

பூனையைப் பார்த்தால் குடியிருப்புகள் இருக்கும் என உணர்ந்து, யாரும்
அடிபட்டுவிடக் கூடாது என்பதர்க்காக குதிரையில் மெதுவாக செல்வார்களாம்.

அதனால்தான் பூனை குறுக்கே போனால் அந்த வழியாக செல்லக்கூடாது என்றார்கள்.

நம் முன்னோர்கள் சொல்லி வைத்த இதுபோன்ற பல விஷயங்களை காரணம் தெரியாமலேயே இன்று வரை கடைபிடிக்கிறோம்.

பல விஷயங்கள் மூட நம்பிக்கைகளாகவும் திரிக்கப்பட்டுவிட்டது.

பூனை குறுக்கே போனால் அந்த வழியாகப் போகக்கூடாது என்ற விஷயத்தை கடைபிடிக்கவேண்டிய அவசியம் தற்போதைய கால கட்டத்தில் தேவை இல்லை.

இனிமேல் பூனை குறுக்கே போனால் என்ன அர்த்தம்???

பூனையும் வெளியே போகுதுன்னு அர்த்தம்!!!!!!

கால் வலியை விரட்டும் நெல்லி ரசம்..!

குதிகால், பாதம், கெண்டைக்கால், மூட்டு, தொடை ஆகிய இடங்களில் ஏற்படும் வலியைப் போக்கும் திறமை பெற்றது வெற்றிலை நெல்லி ரசம்.

தேவையான பொருட்கள்:

முழு நெல்லிக்காய் 10, வெற்றிலை 20, கொத்தமல்லி இலை, கறிவேப்பிலை தலா ஒரு கைப்பிடி, காய்ந்த மிளகாய் 4,  பூண்டு 6 பல், வால் மிளகு, சீரகம் தலா ஒரு டீஸ்பூன், மஞ்சள் தூள் அரை டீஸ்பூன், நல்லெண்ணெய் 2 டீஸ்பூன், உப்பு தேவைக்கேற்ப.

செய்முறை: 

நெல்லிக்காயை விதை நீக்கி சாறு எடுக்கவும். கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை, வெற்றிலை மூன்றையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். வெறும் சட்டியில் காய்ந்த மிளகாயை கிள்ளி போட்டு,  பொடியாக நறுக்கிய பூண்டு, ஒன்றிரண்டாகத் தட்டிய வால்மிளகு, சீரகம் ஆகியவற்றை போட்டு இளம் சிவப்பாக வறுக்கவும். பின்னர், பொடியாக  நறுக்கிய கறிவேப்பிலை, வெற்றிலை, கொத்தமல்லி இலையை அதில் போட்டு, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.

நன்றாக வதங்கியதும் விழுதாக அரைத்துக்கொள்ளவும். ஒரு சட்டியில் சிறிது எண்ணெய் ஊற்றி, அரைத்து வைத்துள்ள விழுதைப் போட்டு வதக்கவும்.  அதில் நெல்லிக்காய் சாறு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும். அடுப்பை மிதமாக எரியவிடவும். கொதிக்கும் பக்குவம்  வந்ததும், தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்கவிடாமல் கீழே இறக்கவும்.

இந்த நெல்லி ரசத்தை குடிப்பதன் மூலம் குதிகால் வலியை எளிதில் குறைப்பதோடு, உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கும் இதயநோயாளிகளுக்கும்  ஏற்ற உணவாக அமைகிறது. எலும்பு புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கும் ஆற்றல் இதற்கு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

எல்ஜி ஜி ஃப்ளெக்ஸ் வளைந்த ஸ்மார்ட்போன் ரூ.69,999...!

பிப்ரவரி மாதம் இந்தியாவில் எல்ஜி ஜி ஃப்ளெக்ஸ் வளைந்த ஸ்மார்ட்போன் ரூ.69,999 விலையில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எல்ஜி ஜி ஃப்ளெக்ஸ் வளைந்த ஸ்மார்ட்போன் டிசம்பர் மாதம் இந்தியாவில் வெளியிடப்பட்டது. எல்ஜி ஜி ஃப்ளெக்ஸ் நிறுவனத்தின் முதல் வளைந்த டிஸ்ப்ளே ஸ்மார்ட்போன் ஆகும்.

ஆண்ட்ராய்டு 4.2.2 ஜெல்லி பீன் அடிப்படையில் எல்ஜி ஜி ஃப்ளெக்ஸ் குவாட் கோர் 2.26GHz ஸ்னாப்ட்ராகன் 800 (MSM8974) பிராசசர் மூலம் இயக்கப்படுகிறது. Adreno 330 ஜி.பீ.யூ., மற்றும் ரேம் 2GB கொண்டுள்ளது. இது 13 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் ஒரு 2.1 மெகாபிக்சல் பின்புற கேமரா கொண்டுள்ளது.

இதில் 3,500 mAh பேட்டரி ஆதரிக்கப்படுகிறது, 177 கிராம் எடையும், மற்றும் அதன் அடர்த்தி 8.7mm, மெல்லிய 7.9mm கொண்டுள்ளது. 6 இன்ச் (1280 x 720 பிக்சல்கள்) HD வளைந்த பிளாஸ்டிக் ஓல்இடி டிஸ்ப்ளே, அல்ட்ரா ஒளி, அல்ட்ரா மெல்லிய மற்றும் நெகிழ்வு கொண்ட பிளாஸ்டிக் ஓல்இடி டிஸ்ப்ளே (POLED), வருகிறது.

எல்ஜி ஜி ஃப்ளெக்ஸ் ஸ்மார்ட்போன் குறிப்புகள்:

    6 இன்ச் (1280 x 720 பிக்சல்கள்) HD வளைந்த பிளாஸ்டிக் ஓல்இடி டிஸ்ப்ளே,
    Adreno 330 ஜி.பீ.யூ கொண்ட 2.26GHz குவாட் கோர் ஸ்னாப்ட்ராகன் 800 (MSM8974) பிராசசர்,
    LED ஃப்ளாஷ், 30 FPS 1080p வீடியோ பதிவு கொண்ட 13MP மெகாபிக்சல் பின்புற கேமரா,
    2.1MP முன் எதிர்கொள்ளும் கேமரா,
    2GB DDR3 ரேம், 32 ஜிபி உள் நினைவகம்,
    3500 mAh திறன் கொண்ட பேட்டரி,
    177 கிராம் எடை,
    ஆண்ட்ராய்டு 4.2.2 ஜெல்லி பீன்.

எஸ் பென் கொண்ட சாம்சங் கேலக்ஸி நோட் 3 நியோ டேப்லட்..!

சாம்சங் இறுதியாக விலை விவரங்கள் வெளிப்படுத்தாமல், அதன் கேலக்ஸி நோட் 3 நியோ பேப்லட் வெளியிடப்பட உள்ளது. கேலக்ஸி நோட் 3 நியோ பேப்லட், 3 ஜி மற்றும் கேலக்ஸி நோட் 3 நியோ LTE+ டப், LTE மாடல் ஆகிய இரு வகைகளில் கிடைக்கும் என்று சாம்சங் போலந்து, வழியாக உறுதி செய்யப்பட்டது. மேலும், சாம்சங் போலந்தில் சாம்சங் கேலக்ஸி நோட் 3 நியோ பிப்ரவரி மாதம் உலக சந்தையில் கிடைக்கும் என்று தகவல் அளித்துள்ளது மற்றும் கருப்பு, பச்சை மற்றும் வெள்ளை ஆகிய மூன்று வண்ண வகைகளில் கிடைக்கும்.

சாம்சங் கேலக்ஸி நோட் பேப்லட் தொடர் போல மிகவும் சாம்சங் கேலக்ஸி நோட் 3 நியோ எஸ் பென் கொண்டுள்ளது. LTE variant ஒரு Hexa கோர் பிராசசர் (இரண்டு 1.7GHz கார்டெக்ஸ் A15 + நான்கு 1.3GHz குவாட் கோர் கார்டெக்ஸ் A7) மூலம் இயங்குகின்றது, 3G மாடல் 1.6GHz குவாட் கோர் (குறிப்பிடப்படாத சிப்செட்) மூலம் இயங்குகின்றது என்பதை தவிர சாம்சங் கேலக்ஸி நோட் 3 நியோ இரண்டுமே ஒரே மாதிரியான innards  உடன் வருகிறது. சாம்சங் கேலக்ஸி நோட் 3 நியோ பேப்லட் ஆண்ட்ராய்டு 4.3 ஜெல்லி பீன் இயங்குகின்றது.

சாம்சங் கேலக்ஸி நோட் 3 நியோ பேப்லட் மற்ற குறிப்புகள்:

5.5 இன்ச் HD (720x1280 பிக்சல்கள்) சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, ரேம் 2GB, microSD அட்டை வழியாக 64GB வரை மேலும் விரிவாக்கக்கூடிய 16GB உள்ளடிக்கிய சேமிப்பு, மற்றும் 3100mAh பேட்டரி. சாம்சங்  கேலக்ஸி நோட் 3 நியோ பேப்லட்டில் எல்இடி ஃப்ளாஷ் மற்றும் BSI சென்சார் கொண்ட 8 மெகாபிக்சல் பின்புற கேமரா, மேலும் BSI சென்சார் கொண்ட 2 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா உள்ளது. சாதனத்தில் இணைப்பு விருப்பங்கள், Wi-Fi, ஜிபிஎஸ், GLONASS, NFC, ப்ளூடூத், இன்ஃப்ராரெட் மற்றும் 3 ஜி ஆகியவை அடங்கும்.

சாம்சங் கேலக்ஸி நோட் 3 நியோ சாம்சங் ஆப்ஸ், சாம்சங் ChatON, சாம்சங் WatchON, சாம்சங் Link, ஸ்கிரீன் மிரர்ரிங், எஸ் வாய்ஸ், S ஹெல்த், க்ரூப் ப்ளே, ஸ்மார்ட் Scroll, ஸ்மார்ட் பாஸ், ஏர் வியூ, ஸ்டோரி ஆல்பம் மற்றும் S மொழிபெயர்ப்பாளர் ஆகிய அப்ளிக்கேஷன் ஏற்றப்பட்டு வருகிறது. எஸ் பென், ஏர் கமென்ட் மற்றும் எளிதாக கிளிப் அம்சம் கொண்டு வருகிறது, மேலும் மல்டி விண்டோஸ் மற்றும் S நோட் ஆதரிக்கிறது.

மேலும், கேலக்ஸி நோட் 3 நியோ கூகுள் சேர்ச், ஜிமெயில், Google+, கூகுள் மேப்ஸ், ப்ளே புக்ஸ், ப்ளே மூவிஸ், ப்ளே ஸ்டோர், ப்ளே கேம்ஸ், ப்ளே ஹேங்கவுட்ஸ், வாய்ஸ் சேர்ச் மற்றும் YouTube போன்ற கூகுள் அப்ளிக்கேஷன்கள் கொண்டுள்ளது. பேப்லட்டில், பரிமாணங்கள் 148.4x77.4x8.6mm மற்றும் 162.5 கிராம் எடையுடையது.

சாம்சங் கேலக்ஸி நோட் 3 நியோ பேப்லட் குறிப்புகள்:

    5.5 இன்ச் HD (720x1280 பிக்சல்கள்) சூப்பர் AMOLED டிஸ்ப்ளே,
    ரேம் 2GB,
    microSD அட்டை வழியாக 64GB வரை மேலும் விரிவாக்கக்கூடிய 16GB உள்ளடிக்கிய சேமிப்பு,
    எல்இடி ஃப்ளாஷ் மற்றும் BSI சென்சார் கொண்ட 8 மெகாபிக்சல் பின்புற கேமரா,
    BSI சென்சார் கொண்ட 2 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா,
    எஸ் பென்,
    Wi-Fi,
    ஜிபிஎஸ்,
    GLONASS,
    NFC,
    ப்ளூடூத்,
    இன்ஃப்ராரெட்,
    3 ஜி,
    ஆண்ட்ராய்டு 4.3 ஜெல்லி பீன்,
    162.5 கிராம் எடை,
    3100mAh பேட்டரி.

பிரபலங்களின் க்ளைமாக்ஸ் வசனங்கள்

பிரபலங்களின் க்ளைமாக்ஸ் வசனங்கள்

* காந்தி இறக்கும்போது ' ஹே ராம் ! ' என்றார் .

* ஜூலியஸ் சீஸர் ' யூ டூ புரூட்டஸ் ? ' என்றார் .

* கலிகுலா ( ரோம் ராஜ்ஜியத்தின் கொடுங்கோலன் ) : தன்னைக் கத்தியால் குத்திய பாதுகாவலர்களிடம் சொன்னான் , " நான் இன்னும் இறக்கவில்லை ! "

* தாமஸ் ஆல்வா எடிசன் : " விளக்கை எரியவிடுங்கள் . என் ஆவி பிரியும்போது வெளிச்சம் இருக்கட்டும் ! "

* பெஞ்சமின் ஃப்ராங்க்ளின் : " இறக்கும் மனிதனால் எதையும் எளிதாகச் செய்ய முடியாது ! "

* பாபர் ( மொகலாயப் பேரரசர் ) : தன் மகன் ஹுமாயூனிடம் .... " இந்தியாவில் உள்ள இந்துக்களைத் துன்புறுத்தாதே ! "

* ஜுல்ஃபிகர் அலி புட்டோ ( பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் ) : " இறைவா .....நான் ஒரு குற்றமும் செய்யாதவன் ! "

* டயானா : " கடவுளே ! என்ன நடந்தது எனக்கு ? "

* ஜொன் ஆஃப் ஆர்க் ( பிரெஞ்சுப் புரட்சியாளர் ) : தீயில் எரிந்துகொண்டு இருந்த சமயத்தில் சொன்னது . " ஜீஸஸ் ! "

* வால்டேர் : தூக்கு தண்டனைக்கு முன் ' சாத்தானை உன்னிடம் இருந்து துரத்திவிடு ' என்று சொன்ன பாதிரியாரிடம் , " எதிரிகளை உருவாக்கிக்கொள்வதர்கான நேரம் இது அல்ல ! "

* கிளியோபாட்ரா : பூ நாகத்தைக் கையில் பிடித்துக் கொண்டு , " ஆஹா... இதோ ... என் முடிவு இங்கே இருக்கிறது ! "

* பீத்தோவன் : " நண்பர்களே கை தட்டுங்கள்... இந்த நகைச்சுவை நாடகம் இன்றோடு முடியப்போகிறது ! "

* ஆன் ( இங்கிலாந்து ராணி ) ; தன் உதவியாளரிடம் , " மக்களின் நன்மைக்காக கருவூலப் பணத்தை பயன்படுத்துங்கள் ! "

* நெப்போலியன் : " ஃபிரான்ஸ் ... ஆர்மி...ஜோஸஃபின் ! "

* மேரி க்யூரி : " என்னைத் தனிமையில் இருக்க விடுங்கள் ! "

* எழுத்தாளர் ஜேன் ஆஸ்டஸ் : ' வேறு எதுவும் வேண்டுமா ' என்று கேட்ட தங்கையிடம் , " இறப்பைத் தவிர எதுவும்

* வின்ஸ்டன் சர்ச்சில் : " எனக்கு எல்லாமே போர் அடிக்குது ! " இந்த வார்த்தைகளுக்குப் பின் கோமாவுக்குச் சென்று , ஒன்பது நாட்களுக்குப் பின் மரணத்தைத் தழுவினார் .

* பெருந்தலைவர் காமராஜர் : தன் உதவியாளரிடம் , " வைரவா ! விளக்கை அணைத்துவிடு ! "

தேசியக்கொடி ஏற்றும் போது, அதில் பூக்கள் வைப்பது ஏன்...

தேசியக்கொடி ஏற்றும் போது, அதில் பூக்கள் வைப்பது ஏன்...


நம் தேசிய கொடி மேலே ஏறி பட்டொளி வீசி பறப்பதற்கு முன், அதில் வைக்கப்பட்டுள்ள மலர்கள் கீழே வந்து விழுவதை பார்த்து நாம் கை தட்டுகிறோம்.

ஆனால் அதற்குள் மிக பெரிய ஒரு சோக சம்பவம் அடங்கி கிடக்கிறது... அது என்ன தெரியுமா....?

நமது தேசியக்கொடி மேலே ஏற, அதாவது நாம் சுதந்திரம் பெற, எண்ணற்ற தாய்மார்களின் கூந்தலில் இருந்த மலர்கள் கீழே விழுந்து இருக்கிறது என்பதைத்தான் இந்த கொடி மேலே ஏறும் போது, மலர்கள் கீழே விழுந்து, அதனை ஞாபகப்படுத்துகிறது.

இனி ஒவ்வொரு முறையும் நமது தேசியக்கொடி ஏற்றத்தைக் காணும் போதும், இதை உங்களது மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.

அன்று அந்த நல்ல உள்ளங்கள், தங்கள் கணவர்களை சுதந்திர போராட்டத்திற்குஅனுப்பாமல் இருந்திருந்தால், நாம் இன்று எங்கேயாவது செக்கு இழுத்துக் கொண்டு தான் இருந்திருப்போம்...!

ஒற்றுமையுடன் பெற்ற சுதந்திரத்தை
ஒற்றுமையுடன் பாதுகாப்போம்...

இரத்தம் சிந்தி பெற்ற சுதந்திரத்தை
இரத்தம் சிந்தாமல் பாதுகாப்போம்...

நமது சுதந்திற்க்காக உயிர் தியாகம் செய்த
நமது முன்னோர்களை நினைவு கூறுவோம்..

"இந்தியனாய் பிறந்தமைக்கு பெருமை படுவோம்"

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு, இல்லையெனில் ஓங்கிடும் தாழ்வு.

நமது முன்னோர்கள் செய்த தியாகத்தை நினைவு கூறுவோம்.

தேசப்பற்றை வளர்ப்போம்! வாழ்க இந்தியா!!! வளர்க பாரதம்!!!

வெள்ளித் தட்டுக்களை சுத்தம் செய்ய சில டிப்ஸ்...

வெள்ளித் தட்டுக்களை சுத்தம் செய்ய சில டிப்ஸ்...

வெள்ளி என்பது பிரகாசமாக இருப்பதை விட பளபளப்பாக இருந்தால் தான் அழகே. வெள்ளி என்பது இருக்கும் வரை, அது பாத்திர வடிவில் இருந்தாலும் சரி, அசல் வெள்ளியாக இருந்தாலும் சரி, அது மின்னிக் கொண்டே தான் இருக்கும். ஆனால் அதற்கு, அதனை சீரான முறையில் துடைத்து பராமரிக்க வேண்டும்.

பாத்திர வடிவில் இருந்தும் சரி அல்லது அசல் வெள்ளியாக இருந்தாலும் சரி, அதனை சுத்தப்படுத்தும் வழிமுறை ஒரே மாதிரியானவை தான். அதனால் இந்த இரண்டு வகையிலும் உங்களிடம் வெள்ளி இருந்தால் அவைகளை சுத்தப்படுத்த சில அடிப்படையான பொருட்களில் நீங்கள் முதலீடு செய்ய வேண்டியிருக்கும்.

ஆனால் வெள்ளியை துடைப்பது ஒருஎன்பது சோர்வடையச் செய்யும் ஒரு வேலையாகும். அதற்கு அதிகளவில் பொறுமை தேவைப்படும். அதற்கு சில வழிமுறைகளை பின்பற்றியாக வேண்டும்.

வெள்ளி பொருட்களை சுத்தப்படுத்த மென்மையான பொருட்கள் தேவை என்பதையும் மறந்து விடக்கூடாது. கடுமையான மற்றும் திடமான பொருட்களை கொண்டு வெள்ளியை சுத்தப்படுத்த கூடாது. அது உங்கள் வெள்ளிப் பொருட்களை பாழாக்கி விடும். வெள்ளிப் பொருட்களை சுத்தப்படுத்த உங்களுக்காக சில டிப்ஸ்:

சீரான முறையில் சுத்தப்படுத்துதல்

சீரான முறையில் சுத்தப்படுத்துவது என்றால் வெள்ளி பாலிஷ் போடுவது என்று அர்த்தமில்லை. அது உங்கள் வெள்ளிப் பொருட்களை பாழாக்கி விடும். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், ஒரு மென்மையான துணி அல்லது மென்மையான முட்களை கொண்ட பிரஷ்ஷை கொண்டு வெள்ளிப் பொருட்களை துடைக்க வேண்டும். அப்பப்போ, வெதுவெதுப்பான சோப்பு நீரிலும் அவைகளை துடைக்கலாம். இதனால் அவைகளில் காணப்படும் கறைகள் நீங்கும். கழுவிய பின்பு மென்மையான துணியை கொண்டு ஈரத்தை துடைத்திடுங்கள்.

பேக்கிங் சோடாவின் பயன்பாடு

வெள்ளியை துடைக்க பேக்கிங் சோடாவையும் கூட பயன்படுத்தலாம். பேக்கிங் சோடாவை ஒரு கை எடுத்து வெதுவெதுப்பான நீரில் போடுங்கள். அது நீரில் கரையும் வரை காத்திருக்கவும். கரைந்த பின்பு, உங்கள் வெள்ளி தட்டுக்களை உலோகத்தகடு மூலம் மூடுங்கள். பின் அதனை அந்த பேக்கிங் சோடாவின் கலவையில் போட்டு ஒரு 10 நிமிடத்திற்கு அப்படியே விட்டு விடுங்கள். அதன் பின், உலோகத்தகடை எடுத்து, வெள்ளி தட்டை மென்மையான துணியை கொண்டு துடைத்திடுங்கள்.

ஸ்பாஞ்சை வைத்து சுத்தப்படுத்துதல்

கடுமையானதாக இல்லாத குறைந்த அளவிலான பொருட்களை கொண்டு வெள்ளிப் தட்டுக்களை சுத்தப்படுத்தலாம். மென்மையான ஈர ஸ்பாஞ்சை மென்மையான சோப்பில் முக்கி வெள்ளி தட்டின் மீது தேய்க்கவும். செராமிக் அல்லது கண்ணாடியை கொண்டு செய்யப்பட்ட வெள்ளிப் பாத்திரம் என்றால் ஸ்பாஞ்சை மிதமான சோப்பு கலந்த சுடுநீரில் நனைக்கலாம்.

மிதமான சோப்பை கொண்டு சுத்தப்படுத்திய பிறகு, வெதுவெதுப்பான நீரில் அதனை கழுவுங்கள். பின் ஒரு மென்மையான துணியை கொண்டு தட்டை துடைத்திடுங்கள். நீங்கள் பயன்படுத்தும் மென்மையான துணி பருத்தியால் செய்யப்பட்டதாக இருக்க வேண்டும். கம்பளி கலந்த துணியை பயன்படுத்தாதீர்கள். கழுவும் போது கையுறை அணிய விரும்பினால் அவை பிளாஸ்டிக் அல்லது பருத்தியால் செய்யப்பட்டதாக இருக்க வேண்டும். ரப்பர் கையுறையை பயன்படுத்தினால் அது தட்டை பாழாக்கி விடும்.

நன்றாக பாலிஷ் செய்யுங்கள்

வெள்ளி தட்டை சுத்தப்படுத்த மற்றொரு வழியாக விளங்குகிறது வெள்ளி பாலிஷ். நல்ல பாலிஷ் மூலம் தட்டை பளபளக்க செய்யலாம். ஈர ஸ்பாஞ்சை கொண்டு துடைத்த பின்னர், தட்டின் மீது வெள்ளி பாலிஷ் க்ரீமை தடவுங்கள். இந்த க்ரீமை மென்மையான துணியை கொண்டு தடவுங்கள். தட்டை ரொம்பவும் அழுத்தி துடைக்காதீர்கள். பாலிஷை தட்டை சுற்றி மெதுவாக தடவுங்கள். பருத்தி அல்லது முட்களை கொண்ட பிரஷ்ஷை வைத்து பாலிஷை தடவலாம். பாலிஷ் செய்த பின்பு உங்கள் வெள்ளித் தட்டு பளபளப்பாக இருப்பதை நீங்கள் காணலாம்.

வெள்ளித் தட்டை கழுவ போடுவதற்கு முன் அதில் படிந்திருக்கும் உணவு கறைகளை முதலில் நீக்க வேண்டும். தட்டின் தேய்மானத்தை இது தடுக்கும். சீரான முறையில் இப்படி செய்து வந்தால் வெள்ளிப் பொருட்களை அடிக்கடி கழுவ வேண்டியதை தவிர்க்கலாம்.

வெள்ளிப் பாத்திரங்கள் பாதுகாக்க ஐடியா!

இன்றைக்கு தங்கத்தைப் போல வெள்ளியின் விலையும் உயர்ந்து வருகிறது. அந்த அளவிற்கு மதிப்பு மிக்க வெள்ளிப் பொருட்களை பத்திரமாக பாதுகாக்க வேண்டியது அனைவரின் கடமை. வெ‌ள்‌ளி‌ப் பா‌த்‌திர‌ங்க‌ள் ம‌ற்று‌ம் நகைகளை எ‌வ்வளவுதா‌ன் பாதுகா‌ப்பாக வை‌த்‌திரு‌ந்தாலு‌ம் ‌சில நேர‌ங்க‌ளி‌ல் அவை கறு‌ப்பாக மா‌றி ‌விடு‌கி‌ன்றன. இதற்கு காரணம் அவற்றின் தர‌த்‌தி‌ல் குறை இல்லை. காற்று பட்டாலே வெள்ளியானது கருத்துவிடுவது இயல்புதான். எனவே வெ‌ள்‌ளி‌ப் பொரு‌ட்களை‌ப் எ‌வ்வாறு பாதுகா‌ப்பது எ‌‌ன்பதை அ‌றி‌‌ந்து கொ‌ள்ளு‌ங்க‌ள்.

பாலீதின் கவர்

மரப்பெட்டிக‌ளி‌ல் வெ‌ள்‌ளி‌ப் பொரு‌ட்களை வைக்கவேண்டாம். ஏனெனில் மரத்தில் இருக்கும் அமிலம் வெள்ளியின் மேல்பகுதியை பாதிக்கும். அ‌ப்படி மர‌ப்பெ‌ட்டி‌யி‌ல்தா‌ன் வை‌க்க வே‌ண்டிய ‌நிலை ஏ‌ற்ப‌ட்டா‌ல் வெ‌ள்‌ளி‌ப் பொருளை பா‌லி‌த்‌தீ‌ன் கவ‌ரி‌ல் போ‌ட்டு ந‌ன்கு மூடி வை‌க்கவு‌ம்.

நகைப்பெட்டிகளில் ஒவ்வொரு நகைகளையும் தனித்தனியாக வையுங்கள். வெள்ளியின் மீது செ‌ய்‌தி‌த்தாளோ, ரப்பர் பேண்டோ அல்லது பிளாஸ்டிக் பொரு‌ட்களோ படும்படி வைக்க வேண்டாம்.

காற்றுப் படக்கூடாது

ஒ‌வ்வொரு முறையு‌ம் வெ‌‌ள்‌ளி நகையை பய‌ன்படு‌த்‌து‌ம் போது நம் உடலில் சுரக்கும் எண்ணெய் பசையால் வெள்ளியின் ஒளி மங்க வாய்ப்பிருக்கிறது. எனவே பய‌ன்படு‌த்‌திய ‌பிறகு அதனை ந‌ன்றாக துடை‌த்து ‌பி‌ன்ன‌ர் பாதுகா‌‌ப்பாக எடு‌த்து வை‌க்க வே‌ண்டு‌ம்.

பயன்படுத்திய வெள்ளி பொருட்களை மென்மையாக சு‌த்தமான ‌நீ‌ரி‌ல் கழு‌வி உடனேயே காயவைத்தால் கூட போதுமானது. நீண்ட நேரங்களுக்கு அதை வெளியில் வைக்க வேண்டாம். வெள்ளியை குளிர்ச்சியான, வறண்ட இடங்களில், காற்றுபுகாத பெட்டிகளில் வைக்கவேண்டும்.

மங்கிப்போகும்

ஒரு சிலர் வீடுகளில் வெள்ளித் தட்டு, வெள்ளி டம்ளர் போன்றவைகளை உபயோகிப்பார்கள். வெள்ளித்தட்டுகளில் உணவுகளை போட்டு வைத்து நீண்ட நேரம் வைக்க வேண்டாம். ஏனெனில் சில உணவுப் பொருட்களில் உள்ள அமிலங்கள் வெள்ளித்தட்டை மங்கச் செய்யும். அதேபோல் பாத்திரம் கழுவும் மெஷின்களில் வெள்ளிப் பாத்திரங்களைப் போட வேண்டாம் அவை நசுங்கிவிடும்.

பூஜை சாமான்கள்

 குத்துவிளக்கு, ஆரத்தி தட்டு போன்றவைகளை வெள்ளியில் வைத்திருப்பது வாடிக்கை. அவற்றை வாரம் ஒருமுறையாவது எடுத்து வெள்ளியை சுத்தம் செய்யும் பொருளைப் போட்டு துடைத்து சுத்தம் செய்து வைக்கவும். இல்லையெனில் அவை கருத்துவிடும்.

தோல்வி என்பது அபிப்ராயம்தான் ...!

தோல்வி என்பது ஓர் அபிப்பிராயம் என்றார் ஓர் அறிஞர். தோல்வி, ஒரு வெற்றியின் தொடக்கம்தான் என்பது ஒரு வகை அபிப்பிராயம். இது ஒரு முடிவின் அடையாளம் என்பது இன்னொரு வகை அபிப்பிராயம். ஏற்பட்ட தோல்வியை, பாடமாக எடுத்துக்கொண்டு புதிதாகத் தொடங்குவதா, அவமானமாக எடுத்துக்கொண்டு ஒதுங்குவதா என்பதில்தான் வளர்ச்சிக்கான வாய்ப்பும் வாய்ப்பின்மையும் இருக்கிறது.

வெற்றி பெறவேண்டும் என்ற விருப்பம் இருக்கும் வரை எந்தத் தோல்வியும் பொருட்படுத்தத் தக்கதல்ல. சிலர் சின்ன தோல்விகளுக்கே எல்லாவற்றையும் இழந்துவிட்டதாய் எண்ணிக் கலங்குவார்கள். மனிதன் உயிருடன் இருக்கும்வரை, எல்லாவற்றையும் இழந்ததாய் சொல்லும் பேச்சுக்கே இடமில்லை. ஏனெனில் எதிர்காலம் என்ற ஒன்று இருக்கும்வரை, இழப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை.

ஒருவர் வெற்றி நோக்கி முழு மூச்சோடு முயன்றார் என்பதற்கான ஆதாரம்தான் தோல்வி. ஒரு மனிதனை உலுக்கும் விதமாகத் தோல்வி வரும்போது எப்படித் தாங்குவது என்ற கேள்வி எழலாம். உலுக்கப்படும்போது, மரத்தில் ஒட்டிக் கொண்டிருக்கும் காய்ந்த இலைகள் விழுகின்றன. கனிந்த பழங்கள் விழுகின்றன. இலைகள், மனிதனின் பலவீனங்களுக்கு அடையாளம்.

தோல்வியில் நமது பலவீனங்களை உதிர்ப்பதும், சோதனைக் காலங்களிலும் பிறருக்குப் பயன்படுவதும் வெற்றியாளர்களின் அம்சங்கள்.

தோல்வியின் காரணத்தை உண்மையாக ஆராயும்போதே வெற்றிக்கு அடித்தளம் அமைக்கத் தொடங்கிவிட்டதாக அர்த்தம். ஒரு விஷயத்தில் தோல்வி ஏன் வருகிறது?

சிந்திக்காமல் ஒன்றைச் செய்வதாலும் தோல்வி வருகிறது. நன்கு சிந்தித்த ஒன்றைச் செய்யாமல் கைவிடுகிறபோது, ஒன்றை நன்கு சிந்திக்கவும் சிந்தித்ததை செயல்படுத்தவும் தேவையான தெளிவு வருகிறது.

ஒரு செயலின் விளைவு எதிர்மறையாக ஆகுமென்றால் அப்போதைக்கு அது தோல்வியின் கணக்கில் இருந்தாலும் அசைக்க முடியாத வெற்றிக்கு அடித்தளமாகவும் அதுவே அமைகிறது.

நெருக்கியடிக்கிற தோல்விகளின் நிர்ப்பந்தங்களால் தங்களையும் அறியாமல் தங்கள் பாதையை சீர்ப்படுத்திக்கொண்டு நிகரற்ற வெற்றியைக் குவித்த பலரையும் வரலாறு பெருமையுடன் பாராட்டி வருகிறது. எதிலாவது தோல்வி ஏற்பட்டாலோ, அல்லது தோல்வி வருமோ என்ற பயம் ஏற்பட்டாலோ பதட்டமில்லாமல் உங்கள் திட்டங்களை மறுபடி கவனமாகக் கண்காணியுங்கள். அதனை ஓர் எச்சரிக்கையாக மட்டும் எடுத்துக்கொண்டு இன்னும் தெளிவாய் இன்னும் துல்லியமாய் உங்கள் இலக்கை நெருங்குங்கள். ஏனெனில் தோல்வி என்பது அறிவிக்கப்பட்ட தீர்ப்பல்ல. ஓர் அபிப்ராயம்தான்.

‘i-Safe’ அப்ளிக்கேஷன் – சென்னை மாணவனின் கண்டுபிடிப்பு! பெண்களுக்கு உதவும்

ஆபத்தில் இருக்கும் பெண்களுக்கு உதவும் வகையில் ‘i-Safe’ என்று அழைக்கப்படும் ஒரு மொபைல் அப்ளிக்கேஷனை உருவாக்கி அசத்தியுள்ளார் சென்னையைச் சேர்ந்த 14 வயதான சிறுவன்.இந்த அப்ளிக்கேஷனில் எஸ்ஒஎஸ் மோட் செயல்படுத்தும் போது பலமுறை நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் உட்பட மொபைலில் ஏற்கனவே பதிவு செய்திருக்கும் அனைத்து எண்களுக்கும் இடத்தின் விவரங்களை கொடுத்து எஸ்எம்எஸ் விழிப்பூட்டல்களை அனுப்புகிறது.

மேலும் உள்ளூர் சமூகத்தில் ஆபத்தில் இருக்கும் நபர் போலீசுக்காக காத்திருக்காமல் அருகில் இருக்கும் மக்களுக்கு தானாகவே எச்சரிக்கை செய்யும், ஒரு புதிய செயல்பாட்டை சேர்க்கும் பணிகளை அவர் இப்போது செய்து வருகின்றார்.

இளம் வயதான எஸ் அர்ஜுன், 8ம் வகுப்பு படிக்கும் மாணவன் ஆவர். கடந்த ஆண்டு மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப கல்வி நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த அப்ளிக்கேஷன் போட்டியில் இவர் உருவாக்கிய Ez ஸ்கூல் பஸ் லொக்கேட்டர் என்ற அப்ளிக்கேஷன் முதல் இடத்தில் வெற்றி பெற்றது. ஆண்ட்ராய்டு போன்களில் இந்த அப்ளிக்கேஷனை பயன்படுத்தி பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் பள்ளி பேருந்தின் இடத்தை கண்காணிக்கவும் மற்றும் வாகனம் இலக்கை அடைவதற்கு எவ்வளவு நேரம் ஆகும் என்பதை பற்றி கணக்கிட உதவுகிறது.

அதேபோல், அடிப்படை போன்களிலும் இந்த அப்ளிக்கேஷனை எஸ்எம்எஸ் மூலமாகவும் பயன்படுத்த முடியும். முன்னதாக, எம்ஐடியில் ஏற்பாடு செய்திருந்த அப்ளிக்கேஷன் இன்வென்டர் பக் ஃப்பைன்டிங் போட்டியில் அர்ஜுன் வெற்றி பெற்றுள்ளார்.
அவருடைய பெரிய கனவு ‘Lateralogics என்று அழைக்கப்படும் சொந்த நிறுவனத்தை உருவாக்க வேண்டும், இதில் கூகிள் மற்றும் மைக்ரோசாப்ட் போன்ற ஏதாவது செய்ய வேண்டும்’ என்று, அர்ஜுன் தெரிவித்துள்ளார்.

புரோகிராமிங் லேங்குவேஜ்-ஐ கற்றுக்கொள்ள ஒவ்வொரு நாளும் ஆன்லைனில் மூன்று முதல் நான்கு மணி நேரம் செலவிடுகிறார் என்று அர்ஜுன் தந்தை, சந்தோஷ் குமார் கூறியுள்ளனர். மேலும், அவருடைய பள்ளியில் மிகவும் பிரபலமாக உள்ளார் என்றும், அவரது ஆர்வம் மற்றும் பொழுதுபோக்குகள் ரோபாட்டிக்ஸ், செஸ் மற்றும் பேட்மின்டன் உள்ளிட்டவை என்றும் அர்ஜுன் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்

ராமனின் விளைவு கைகொடுத்தது! மருத்துவத்தில் அரிய சாதனை!

மனிதன் மூளையில் ஏற்படும் பாதிப்பை சரிபடுத்துவது என்பது விஞ்ஞானிகளுக்கும் மருத்துவர்களுக்கும் ஒரு பெரிய சவாலாக இருந்து வருகின்றது.தற்போது கண்டறியப்பட்ட ஓர் புதிய கண்டுபிடிப்பு இதற்கு சிறந்த தீர்வாக அமையும் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.மூளையில் உள்ள செல்கள் பாதிக்கப்படும் போது அதற்கு பதிலாக புதிய செல்களை உருவாக்கி அதில் பொருத்தினால் பாதிப்பை சரி செய்து விடலாம்.

ஆனால் இதுவரை மூளை செல்களை எப்படி உருவாக்க முடியும் என்பதை கண்டு பிடிக்க இயலாத நிலையில் விஞ்ஞானிகள் இருந்தனர்.இதற்கிடையில் இந்தியாவை சேர்ந்த தமிழக இயற்பியல் விஞ்ஞானி சர் சி.வி. ராமன். இவர் 80 ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடித்த ராமன் விளைவு மிக பிரபலமானது. இதற்காக இவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. மனிதனின் மூளையில் ஏற்படும் புற்றுநோய் கட்டிகளுக்கு மேற்கொள்ளும் சிகிச்சை முறையில் ராமனின் விளைவை பயன்படுத்தும் முடிவில் ஆராய்ச்சியாளர்கள் உள்ளனர்.

ஹென்றி போர்டு மருத்துவமனையில் இன்னோவேஷன் அமைப்பின் ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வின் முடிவில் இது 99.5 சதவீதம் துல்லியம் வாய்ந்தது என்பது தெரிய வந்துள்ளது. மனித மூளையில் நரம்பு செல்களை சுற்றி திசுக்கள் உள்ளன. இதனை சுற்றி கிளையோபிளாஸ்டோமா மல்டிபோர்ம் (ஜி.பி.எம்.) எனப்படும் புற்று கட்டிகள் அதன் மீது படர்கிறது. இக்கட்டிகளை நீக்கி சிகிச்சை மேற்கொள்வது மருத்துவர்களுக்கு கடினமான பணியாக உள்ளது.

 இந்த கட்டிகள், சீரான முனைகள் கொண்டு இருக்கும். மூளை திசுவிற்கும் இக்கட்டிகளுக்கும் வேறுபாடு இருக்கும். இது ஆரோக்கியமான திசு மீது பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதனை கண்டுபிடிப்பது மருத்துவர்களுக்கு கடினம் என்பதால் அவற்றை நீக்குவதில் அவர்களுக்கு வெற்றி கிடைப்பது அரிதாக உள்ளது. அத்தகைய நோயாளிகளுக்கு கதிரியக்கம் மற்றும் கீமோதெரபி முறையில் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

எனினும், இது சரியான பலனளிக்கவில்லை. எனவே, மிக துல்லியமாக, திறமையாக மற்றும் குறைந்த செலவில் மூளை திசுவில் இருந்து புற்று கட்டிகளை உருவாக்கும் திசுக்களை விரைவாக வேறுபடுத்தி அறுவை சிகிச்சை அறையில் அதனை கண்டறிவதற்காக ஹென்றி போர்டு குழு ஒன்று உருவாக்கப்பட்டது. அவர்கள் இந்தியாவின் நோபல் பரிசு பெற்ற ராமன் ஒளி விளைவு சோதனையை அடிப்படையாக கொண்டு சிகிச்சை மேற்கொள்ளும் முடிவில் உள்ளனர்.

குறிப்பிட்ட பரப்பில் ஒளிகளை சிதற செய்து அவற்றில் தேவையற்ற திசுக்களை கண்டறியும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டு உள்ளனர். மேம்பட்ட முறையில் இந்த ஆய்வு முடிவு உலக அளவில் மூளையில் உருவாகும் கட்டிகளை குணப்படுத்த முதல் முயற்சியாக இது அமையும். மேலும், தொடர்ந்து ராமன் விளைவு குறித்து ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன என்று ஆய்வின் தலைவரான ஸ்டீவன் என். கல்கானிஸ் தெரிவித்துள்ளார்.

சும்மா டிப்ஸ்....?


மக்களே.... நிலாவை தொட்டது யாருன்னு கேட்டா டக்குன்னு பதில் சொல்லுவது போல, கிருமிகள் எங்க அதிகமாக இருக்கும்? அப்படின்னு கேட்டா சும்மா யோசிக்காம டக்குன்னு பதில் சொல்லிடுவிங்க...டாய்லெட்டில் தான் இருக்குமுன்னு.  ஒரு விளம்பரத்தில் நம்ம விஜய் ஆதிராஜ் ஒரு பிகர் கூட வந்து ஒரு அக்கா வீட்டுல உள்ள பாத்ருமை கிளின் பண்ணிட்டு போவாங்க...ஆனால் அந்த டாய்லெட்டை விட மோசமான அதிக கிருமிகள் இருக்கும், நாம அதிகமா பயன்படுத்தும் இடங்கள் எது எதுன்னு பாக்கலாமா?.

1. ஹோட்டல்களின் மெத்தை விரிப்புகள்: சில ஹோட்டல்களில் மெத்தை விரிப்புகளை தினமும் மாத்த மாட்டாங்க. இதுக்கு பெரிய 5 ஸ்டார் ஹோட்டல்கள் கூட விதிவிலக்கு இல்லை. லேட்டஸ்டா இது போல ஒரு 5 ஸ்டார் ஹோட்டலில் தான் ரொம்ப நாளைக்கு பின்ன பாக்ஸர் மைக் டைசனின் டி என் ஏ வை ஒரு மெத்தை விரிப்புலருந்து எடுத்தாங்க. அந்தளவுக்கு துவைக்காத மெத்தை விரிப்புகளில் மோசமான கிருமிகள் இருக்க வாய்ப்பு இருக்குன்னு சொல்லத்தான் இந்த உதாரணம். அதனால ஹோட்டலுக்கு போனா துவைக்காத மெத்தை விரிப்புகள் இருந்தா உடனே மாத்த சொல்லுங்க.

 2. டாய்லெட் இருக்கும் அறையின் தரை: நாம வெளி இடங்களுக்கு போகும் போது..நம்ம பையை பக்கத்துலையே வச்சுப்போம்..சில சமயம் டாய்லெட் போனா கூட அங்கயும் எடுத்துட்டு போயி டாய்லெட் பக்கத்துல தரையில் வச்சுப்போம். அதுமாதிரி செய்யாதிங்க...ஏன்னா? டாய்லெட்டை விட டாய்லெட் தரையில்தான் அதிக கிருமிகள் இருக்காம்.

3. ஏ டி எம் மெசின்: கிருமிகள் அதிகமா இருக்கதுல மூனாவது இடம் ஏ டி எம் மெசினின் தொடு திரையும் key போர்டுதான். இந்த  key போர்டுல பூசப் பட்டிருக்கும் வேதிப் பொருள் ஒரு ஸ்லொவ் பாய்சனாம். மெசினை பயன்படுத்திய உடன் விரலை கண்ணு காது வாயில வச்சுடாம உடனே கழுவும் வேலைய பாருங்க.

4. ஆபீஸ் டெலிபோன்: பல பேர் பயன்படுத்தும் ஆபீஸ் டெலிபோனில் 25000 வரையான எண்ணிக்கையில் கிருமிகள் இருக்கிறதா அமெரிக்கா பல்கலை கழகம் நடத்திய ஆய்வு சொல்லுது.

5. ஹோட்டல் மெனு கார்ட்ஸ்: இந்த மெனு கார்ட்சை அப்போபோ ஆன்டி பாக்டீரியா திரவம் வச்சு தொடைக்கணும்...ஆனால் யாரும் செய்யவதில்லை. அதை தொட்டுட்டு சாப்பாடு ஆர்டர் பண்ணி சாப்பிட்டா கிருமிகள் நேரா வயித்துக்குத்தான்.

6. ஹோட்டல் டேபிள் வேர்ஸ்: சாப்பாட்டு மேசையில்  உப்பு, சக்கரை,ஊறுகா வைத்திருக்கும் பாட்டில்கள் அல்லது டப்பாக்களில் ஏகப்பட்ட கிருமிகள் இருக்காம்.

7. ட்ராலிகள்: பெரிய பெரிய சூப்பர் மார்கெட்டில் அல்லது ஏர்போர்டில் ட்ராலிகள் வச்சுருப்பாங்க...அந்த ட்ராளிகலிலும் கிருமிகள் அதிகம்.சில பேர் குழந்தைகளை அதுல உக்கார வச்சு தள்ளிகிட்டு போவாங்க அதுமாதிரி செய்யாதிங்க.

8. கார்: காரில் உள்ள ஸ்டியரிங் வீலில் கிருமிகள் அதிகம். சில பேர் சாப்பிட்டுக்கிட்டே வண்டி ஓட்டுவாங்க. பின்ன ஸ்டியரிங் வீலில் இருக்கும் கிருமிகள் அப்படியே வயித்துக்குத்தான் ஸ்ட்ரெயிட்டா...

9. சமையல் அறை: சமைக்கற இடம், பாத்திரம் கழுவும் பேசணில் அதிகமா கிருமிகள் இருக்குமுன்னு எல்லாருக்கும் தெரியும். சுத்தமா வச்சுக்கணும் என்பதும் தெரியும்தானே..

10.ஜிம்: பல பேர் பயன்படுத்தும் உடற்பயிற்சி உபகரணங்களில் கிருமிகள் இருப்பது இயற்கைதானே.

11. பூங்கா: பறவைகள் எச்சம் இருக்கும்... பூங்காக்களில் குழந்தைகள் விளையாடும்...ஊஞ்சல், சறுக்கு மரம், சாய்ந்தாடும் பலகைகளில் கிருமிகள் எப்போதும் இருக்கும்.

இதுல சொன்ன நிறைய இடங்களுக்கு நாம போயித்தான் ஆகணும். நாம போகும் அந்த இடங்களையும் அந்த இடத்தில் உள்ள பொருள்களையும் நாம கழுவிக்கிட்டே இருக்க முடியாது. ஆனால் பயன்படுத்துவதற்கு முன்னரும் பயன் படுத்திய பின்னரும் நம்ம கைய கழுவிக்கலாம்தானே....        

Thursday, 30 January 2014

மந்திரமொழி

வார்த்தைகள் இல்லாத புத்தகம் மௌனம். ஆனால், வாசிக்க, வாசிக்க இதற்குள் வாக்கியங்கள். மௌனம் என்பது வெளிச்சம். நம்மை நாமே இதற்குள் தரிசிக்கலாம். மௌனம் என்பது இருட்டு. எல்லாத்துன்பங்களையும் இதற்குள் புதைக்கலாம். மௌனம் என்பது மூடி! இதை தயாரித்து விட்டால் எல்லா உணர்ச்சிகளையும் இதற்குள் பூட்டி வைக்கலாம். மௌனம் என்பது போதி மரம். இதுவரை உலகம் சொல்லாத உண்மைகளை இது போதிக்கும். மனம் என்பது தவம். இதில் ஆழ்ந்தால் அமைதி நிச்சயம்.

“மௌனம் என்பது வரம்” நம்மிடம் நாமே பெறுவது. இன்பம், துன்பம் இரண்டையும் மௌனம் கொண்டு சந்தித்தால் எப்போதும் இதயம் இயல்பாக இருக்கும். இதழ்களை இறுக மூடி நாம் நமக்குள் இறங்குவோம்!”

எங்கோ, எப்பொழுதோ படித்திதயத்தை வருடிய வரிகள், உலகத்திலேயே நமக்குப் பிடித்த குரல் நமது குரல்தான். நமக்குப் பிடித்த பேச்சு நமது பேச்சுதான். அதனால் நாம் பேச ஆரம்பித்தால் மணிக்கக்காகப் பேசிக்கொண்டே இருக்கிறோம். ஒரு வரியில் பேச வேண்டியதை ஒன்பது வரிகளில் பேசுகிறோம். நாம் பல சமயம் யாரிடம் பேசுகிறோம், எதற்காகப் பேசுகிறோம எந்த இடத்தில் பேசுகிறோம் எனபதைப் பற்றியே சிந்திப்பதில்லை. நமக்குத் தெரிந்ததை பேச வேண்டும் என்பது, மட்டுமே நமது இலக்கு. புத்திசாலி மற்றவர்களைப் பேசவிட்டு,, மௌனம் சாதித்து, தேவையான பொழுது மட்டும் பேசி பேசுபவர்களின் நட்பைப் பெறுகிறான். பேசுவதால் நம் இருப்பை பிறர்க்கு உணர்த்துகிறோம். நாம் ஒரு நாளில் பேசுகிற பேச்சை ஒலிநாடாவில் பதிவு செய்து அதையே நாம் கேட்டால் சில நேரங்களில் வருத்தப்படுவோம். நமது நாக்கு ஈரமுடையது.

நாவின் அமைப்பைப்போல் நம் சொல்லும் இரக்கத்தில் மலர்ந்த இன்சொல்லாக இருக்க வேண்டும். நிலைபெறும் நீங்கில் என் உயிரும் நீங்கும் – வள்ளலார். எல்லா உறுப்புகளையும் இரண்டாகப் படைத்த இறைவன், நாக்கை மட்டும் ஒன்றாகப் படைத்ததில் காரணம் “வரப்புயர” என்று சுருங்கப் பேசி வாழ்வதற்காகத்தான். இரட்டை நாக்கு உடையவர்களை உலகம் நம்புவதில்லை. பொய் சொல்ல முயன்றால் சுற்றியுள்ள பற்கள் நாக்கைக் கடிக்கும். பொய் பேசியபின் பிறர் அறியாமல் நாக்கைக் கடித்துக்கொள்கிறோமல்லவா? அதிகம் பேசாதவனை உலகம் விரும்புகிறது. அளந்து பேசுபவனை உலகம் மதிக்கிறது. பேசாத ஞானியை உலகம் தொழுகிறது.

மௌனத்தின் வெளிப்பாடுகள் பல. கல்யாணப் பெண்ணின் மௌனம் சம்மதமாகிறது. கரை கடந்த இன்பத்தில் மனிதன் மௌனிக்கிறான். துன்பத்தின் உச்சியில் மௌனமே பேசுகிறது. மௌனம் இறைவன் மொழி, அது தட்சினாமூர்த்தி த்துவம். “பிள்ளை மதி செஞ்சடையான், பேசாப்பெருமையினான்” என்று, தாயுமானவர் தன் மௌன குருவைப் பாடுவார். “நீதி நடஞ்செய், ஏரின்ப நிதி, அதை ஓதி முடியாது என்று வள்ளலார் பாடுவார்.

“சும்மா இரு சொல்லற என்றதுமே அம்மா பொருள் என அறிந்திலமே” என்று, முருகன் அருணகிரிநாதருக்கு உபதேசித்த ம்திரமொழி மௌனம் தான். கல் ஆலின் கடை அமர்ந்து மௌனித்து உடல்மொழியால் (Body Language) சின் முத்திரை த்த்துவத்தை போதித்த தட்சினாமூர்த்தியை “வாக்கு இறந்த பூரணம் சொல்லாமல் சொன்னவன்” என்று திருவிளையாடற் புராணம் வர்ணிக்கும். அமைதி வேறு. மௌனம் வேறு. போருக்கு பின் அமைதி வரும். அமைதி மேலோட்டமானது. மோனம் உள்ளிருந்து வருவது. மௌனம் என்பது வார்த்தைகளற்ற நிலையல்ல. எண்ணங்கள் அற்ற நிலை. மௌனத்தை நம் முன்னோர்கள் “ஓம்” என்ற பிரணவ மந்திரத்தால் உணர்த்தினார்கள்.

ஓம் என்ற பிரணவத்தை = அ+உ+ம் என பிரிக்கலாம். (அ) அறிவாக, உள்ள இறைவனை, (உ) உயிராக உணர்கிற மனிதன், (ம்) பேரின்ப நிலையாகிய மௌனத்தில் ஆழ்கிறான் என்பது பிரணவப் பொருள். “நற்பூதி அணிந்த திருவடிவம் முற்றும் தோழி, நான் கண்டேன்! நான் புணர்ந்தேன்! நான் அது ஆனேன்!” வள்ளலார்.

இளநரைக்கு எண்ணெய் குளியல்


சிலர் கொஞ்சம் வெள்ளை முடி தோன் றினாலே பத்து முறை கண்ணடியை பார்ப்பார்கள். அய்யோ நமக்கு வயதாகி விட்டது என்று தோன்றும்.  சிலருக்கு இளநரையும் வருவதுண்டு. அதற்கு மருதாணி தலைக்கு போட்டு கொள்வது நல்லது. இளநரைக்கு எளிய முறையில் வீட்டில் இருந்தபடியே  தீர்வு காணலாம். இளநரை உள்ளவர்கள் மருதாணி பொடி, தயிர், திக்கான டீ டிகாஷன், நன்றாக கலந்து கொள்ளுங்கள்.

(கருவேப்பிலை, வேப்பிலை சிறிது கரிசலாங்கண்ணி கீரை,பாசி பயிறு) இதெல்லாம் காயவைத்து திரித்து வைத்து கொள்ளுங்கள். இதை மேலே  குறிப்பிட்டுள்ள மெகந்தி கலவையில் கொஞ்சம் சேர்த்து கொள்ளுங்கள். இப்போது அனைத்தையும் நல்ல இட்லி மாவு பதத்திற்கு கரைத்து ஒரு  இரும்பு வானலியில் வைத்து இரவு முழுவதும் ஊறவிட்டு, காலையில் தலையில் தேய்த்து 1 மணிநேரம் ஊறவைத்து குளிக்கவும்.

இந்த கலவையை தொடர்ந்து வாரம் ஒருமுறை போட்டு வந்தால் நல்ல பலன் கிடைப்பதை காணலாம். வாரம் இருமுறை நல்லெண்ணை தேய்த்து  எண்ணெய் குளியல் போட்டாலும் நரை முடி வருவதை தவிர்க்கலாம். இது உடல் சூட்டையும் தணிக்கும். ஒரு நாள் விட்டு ஒரு நாள் நல்லெண்ணை  தேய்த்து மசாஜ் செய்து குளித்தால் கூட இளநரை வராமல் இருக்கும்.

செடிக்கு எப்படி தண்ணீர் ஊற்றி வளர்க்கிறோமோ அப்படி தான் முடிக்கும். நிறைய எண்ணெய் தலையில் தேய்த்து மசாஜ் செய்து வாரம் இருமுறை  குளித்தால் முடியும் வளரும். நல்ல ஷைனிங்கும் கிடைக்கும். முடி செம்பட்டையாகாமல் இருக்கும் கருவேப்பிலை பொடி, கறிவேப்பிலையை உணவு  அதிக அளவில் சேர்த்து கொண்டால் தலை முடி கருகருவென வளரும். நரைமுடி வருவதையும் தவிர்க்கலாம்.

பூமியைப் போன்ற புதிய கிரகம் கண்டுப்பிடிப்பு!

சூரிய மண்டலத்தில், பூமியைப் போன்ற, புதிய கிரகத்தை, அமெரிக்க வானியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஹார்வர்டு -ஸ்மித்சோனியன் வான் இயற்பியல் மையத்தைச் சேர்ந்த, டேவிட் கிபிங் கூறியதாவது:

மற்றொரு சூரிய மண்டலத்தில், 200 ஒளி ஆண்டு, தூரத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள, இந்த புதிய கிரகம், பூமியை விட, 60 மடங்கு பெரிதானது. இதில் அடர்ந்த வாயுக்கள் அதிகளவில் காணப்படுகின்றன.

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான, 'நாசா'வின், கெப்ளர் விண்கலம் அனுப்பிய தகவல்களின் அடிப்படையில், இந்த கிரகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 'கே.ஓ.ஐ.-314' என, பெயரிடப்பட்ட இந்த கிரகத்தின் வெப்பநிலை, 104 டிகிரி செல்சியசாக பதிவாகியுள்ளது.

சருமத்திற்கு தேவையான பேஷியலின் வகைகள்!

பெண்கள் மணமாகி பிள்ளை பெற்றதும் உடலில் காட்டும் கவனத்தை குறைத்து விடுகின்றனர். இதனால் அழகும், பொலிவும் தொய்ந்து போகும் முகத்திற்கு பயிற்சி வேண்டாமா? இவ்வாறு முகத்திற்கு அளிக்கப்படும் பயிற்சியே பேஷியல் என்றழைக்கப்படுகிறது. இல்லத்தரசிகளும், வேலைக்கு செல்லும் பெண்களும் 25 வயது முதல் பேஷியல் செய்து கொள்ள வேண்டும். சூரிய வெப்பத்தினாலும், தூசியினாலும் பாதிக்கப்படும் முகத்தின் சருமத்தை மாதமொருமுறை பேஷியல் செய்ய வேண்டியது அவசியம். முதலில் பேஷியல் செய்வதற்கு முன்பு என்னென்ன பேஷியலில் பல வகைகள் உள்ளன எந்த எந்த சருமத்தற்கு எந்த வகையான பேஷியல் செய்வது என தெரிந்து கொள்ள வேண்டும். அதற்கு பின்னர் மட்டுமே பேஷியல் செய்ய வேண்டும்.

இதில் பல வகை உண்டு. இவை ஒவ்வொன்றிற்கும் விதவிதமான பலன்கள் உள்ளன. பழங்களை கொண்டு செய்யும் பேஷியல், உலர்ந்த பழங்களை கொண்டு செய்யும் பேஷியல், ஹெர்பல் பேஷியல், கால்வானிக் பேஷியல், பேர்ல் பேஷியல், கோல்டு பேஷியல், அரோமா பேஷியல் என பல வகை உண்டு.

கோல்டன் பேஷியல்

இம்முறை பேஷியல் செய்வதால் சூரிய வெப்பத்தினால் சருமம் நிறும் மாறுவது, முகத்தில் ஏற்படும் கறுப்பு திட்டுகள், சுருக்கங்கள் நீக்கப்படும். இதில் முதலில் ஷாதானியம், முட்டை, பன்னீர், முதலிய கலவையை முகத்தில் 10 நிமிடம் தடவ வேண்டும். பிறது அதன் மேல் பால் தெளித்து மெதுவாக தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும். பிறகு கோல்ட்ஜெல் (அழகு சாதனங்கள் விற்கும் கடைகளில் கிடைக்கும்) தடவி மசாஜ் செய்ய வேண்டும். பிறகு முகத்தினை துடைத்து கோல்ட் பாக் தடவி கண்களை சுற்றி ஷாவீட் என்ற லோஷனை தடவ வேண்டும். கண்களின் மேல் குளிர்ச்சியான பன்னீரை காட்டனில் நனைத்து வைக்க வேண்டும். பின்னர் 15 நிமிடம் கழித்து துடைத்துவிட்டு ஷா பேஸ் என்ற க்ரீம் தடவ வேண்டும். இதுவே கோல்டன் பேஷியல். இது நன்றாக மாநிலம் உள்ளவர்கள் செய்ய வேண்டும்.

பேர்ல் பேஷியல்

மிகவும் கறுப்பான நிறம் உள்ளவர்களுக்கு இம்முறை நல்ல பலன் தரும். இதற்கு கோல்டன் பேஷியல் அளவிற்குச் செலவு செய்ய வேண்டிய அவசியமில்லை. பேர்ல் பேஷியல் கிட் என்று கேட்டால் கடைகளில் கிடைக்கும். அதில் நான்கு வகையாக கிரீம்கள் உள்ளன. அம்முறைபடி செய்தால் முக பொலிவாக மாறும்.

கால்வானிக் பேஷியல்
உலர்ந்த சருமம் மற்றும் பருக்கள் அதிகம் உள்ளவர்களுக்கு இம்முறையில் பேஷியல் செய்வது நல்லது. மிஷினின் உதவியுடன் மசாஜ் செய்யப்படும் இம்முறையில் கறுப்புத்திட்டுகள் டபுள்ஸ்கின், தொங்கு கழுத்துச்சதை முதலியவை நீங்கும்.

Tuesday, 28 January 2014

மந்திரமொழி

வார்த்தைகள் இல்லாத புத்தகம் மௌனம். ஆனால், வாசிக்க, வாசிக்க இதற்குள் வாக்கியங்கள். மௌனம் என்பது வெளிச்சம். நம்மை நாமே இதற்குள் தரிசிக்கலாம். மௌனம் என்பது இருட்டு. எல்லாத்துன்பங்களையும் இதற்குள் புதைக்கலாம். மௌனம் என்பது மூடி! இதை தயாரித்து விட்டால் எல்லா உணர்ச்சிகளையும் இதற்குள் பூட்டி வைக்கலாம். மௌனம் என்பது போதி மரம். இதுவரை உலகம் சொல்லாத உண்மைகளை இது போதிக்கும். மனம் என்பது தவம். இதில் ஆழ்ந்தால் அமைதி நிச்சயம்.

“மௌனம் என்பது வரம்” நம்மிடம் நாமே பெறுவது. இன்பம், துன்பம் இரண்டையும் மௌனம் கொண்டு சந்தித்தால் எப்போதும் இதயம் இயல்பாக இருக்கும். இதழ்களை இறுக மூடி நாம் நமக்குள் இறங்குவோம்!”

எங்கோ, எப்பொழுதோ படித்திதயத்தை வருடிய வரிகள், உலகத்திலேயே நமக்குப் பிடித்த குரல் நமது குரல்தான். நமக்குப் பிடித்த பேச்சு நமது பேச்சுதான். அதனால் நாம் பேச ஆரம்பித்தால் மணிக்கக்காகப் பேசிக்கொண்டே இருக்கிறோம். ஒரு வரியில் பேச வேண்டியதை ஒன்பது வரிகளில் பேசுகிறோம். நாம் பல சமயம் யாரிடம் பேசுகிறோம், எதற்காகப் பேசுகிறோம எந்த இடத்தில் பேசுகிறோம் எனபதைப் பற்றியே சிந்திப்பதில்லை. நமக்குத் தெரிந்ததை பேச வேண்டும் என்பது, மட்டுமே நமது இலக்கு. புத்திசாலி மற்றவர்களைப் பேசவிட்டு,, மௌனம் சாதித்து, தேவையான பொழுது மட்டும் பேசி பேசுபவர்களின் நட்பைப் பெறுகிறான். பேசுவதால் நம் இருப்பை பிறர்க்கு உணர்த்துகிறோம். நாம் ஒரு நாளில் பேசுகிற பேச்சை ஒலிநாடாவில் பதிவு செய்து அதையே நாம் கேட்டால் சில நேரங்களில் வருத்தப்படுவோம். நமது நாக்கு ஈரமுடையது.

நாவின் அமைப்பைப்போல் நம் சொல்லும் இரக்கத்தில் மலர்ந்த இன்சொல்லாக இருக்க வேண்டும். நிலைபெறும் நீங்கில் என் உயிரும் நீங்கும் – வள்ளலார். எல்லா உறுப்புகளையும் இரண்டாகப் படைத்த இறைவன், நாக்கை மட்டும் ஒன்றாகப் படைத்ததில் காரணம் “வரப்புயர” என்று சுருங்கப் பேசி வாழ்வதற்காகத்தான். இரட்டை நாக்கு உடையவர்களை உலகம் நம்புவதில்லை. பொய் சொல்ல முயன்றால் சுற்றியுள்ள பற்கள் நாக்கைக் கடிக்கும். பொய் பேசியபின் பிறர் அறியாமல் நாக்கைக் கடித்துக்கொள்கிறோமல்லவா? அதிகம் பேசாதவனை உலகம் விரும்புகிறது. அளந்து பேசுபவனை உலகம் மதிக்கிறது. பேசாத ஞானியை உலகம் தொழுகிறது.

மௌனத்தின் வெளிப்பாடுகள் பல. கல்யாணப் பெண்ணின் மௌனம் சம்மதமாகிறது. கரை கடந்த இன்பத்தில் மனிதன் மௌனிக்கிறான். துன்பத்தின் உச்சியில் மௌனமே பேசுகிறது. மௌனம் இறைவன் மொழி, அது தட்சினாமூர்த்தி த்துவம். “பிள்ளை மதி செஞ்சடையான், பேசாப்பெருமையினான்” என்று, தாயுமானவர் தன் மௌன குருவைப் பாடுவார். “நீதி நடஞ்செய், ஏரின்ப நிதி, அதை ஓதி முடியாது என்று வள்ளலார் பாடுவார்.

“சும்மா இரு சொல்லற என்றதுமே அம்மா பொருள் என அறிந்திலமே” என்று, முருகன் அருணகிரிநாதருக்கு உபதேசித்த ம்திரமொழி மௌனம் தான். கல் ஆலின் கடை அமர்ந்து மௌனித்து உடல்மொழியால் (Body Language) சின் முத்திரை த்த்துவத்தை போதித்த தட்சினாமூர்த்தியை “வாக்கு இறந்த பூரணம் சொல்லாமல் சொன்னவன்” என்று திருவிளையாடற் புராணம் வர்ணிக்கும். அமைதி வேறு. மௌனம் வேறு. போருக்கு பின் அமைதி வரும். அமைதி மேலோட்டமானது. மோனம் உள்ளிருந்து வருவது. மௌனம் என்பது வார்த்தைகளற்ற நிலையல்ல. எண்ணங்கள் அற்ற நிலை. மௌனத்தை நம் முன்னோர்கள் “ஓம்” என்ற பிரணவ மந்திரத்தால் உணர்த்தினார்கள்.

ஓம் என்ற பிரணவத்தை = அ+உ+ம் என பிரிக்கலாம். (அ) அறிவாக, உள்ள இறைவனை, (உ) உயிராக உணர்கிற மனிதன், (ம்) பேரின்ப நிலையாகிய மௌனத்தில் ஆழ்கிறான் என்பது பிரணவப் பொருள். “நற்பூதி அணிந்த திருவடிவம் முற்றும் தோழி, நான் கண்டேன்! நான் புணர்ந்தேன்! நான் அது ஆனேன்!” வள்ளலார்.

இது அவசர உலகம். இயந்திர கதியில் மனிதர்கள். வாய்க்கும் வயிறுக்கும் போராட்டம். நின்று, நிலைக்க நேரமில்லை, வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது. வாரம் ஒரு முறை தினசரிக் காலண்டரில் ஞாயிறன்று ஆறு நாட்களைச் சேர்த்து கிழிக்கிறோம். தேவை நிம்மதி. தேவை மன அமைதி. தேவை மகிழ்ச்சி. இது மௌன தவத்தால் கிட்டும்.

உடம்பு அசையாமல் யோகநிலையில் கட்டைபோல் தன்னை வைத்திருப்பது காஷ்ட மௌனம். அதாவது இம்மௌனத்தில் உடல் பேசாது (No body language). இரண்டாவது வாக் மௌனம். வாய்மூடி மௌனமாக இருத்தல். இதைத்தான் பொதுவாக மௌன விரதம் உள்நோக்குகிறான். கடவுளோடு பேசுகிறான் என்கிறோம். இந்த மௌனத்தை மேற்கொள்ளும் சிலர் கையில் நோட்புக் வைத்துக்கொண்டு பக்கம் பக்கமாக எழுதி அறுப்பார்கள். மௌனத்திலிருந்து பெறும் அகத்தாய்வையும் அனுமதியையும் இவர்கள் இழக்கிறார்கள். அடுத்து மனோ மௌனம். இதுவே தலைசிறந்த மௌனம். இதில் மனம் அலைபாயாத விச்ராந்தியாக இருக்கும். சலனமற மனமே மோனத்தன் நிறைநிலை. இந்த மௌனத்தில் மனிதன் தன்னை உள்நோக்குகிறான். கடவுளோடு பேசுகிறான்.

மௌன தவம் செய்பவன் தன்னைத்தானே சுய பரிசோதனை செய்து கொள்கிறான். அவனது புறக்கதவுகள் மூடி அக்கதவுகள் திறக்கின்றன. அவன் பேசாதபொழுது அவனுள்ளிருக்கும் இறைவன் பேசுகிறான். தனது நிறை, குறைகளை அவன் ஆராய்கிறான். அவனது பேராசை நிறை மனமாகிறது. சினம் பொறைமாயக மாறுகிறது. கடும்பற்று ஈகையாகிறது. முறையற்ற பால்கவர்ச்சி கற்பாக மாறுகிறது. வஞ்சம் மன்னிப்பாகிறது. அவன் அனைத்தையும் சமன் செய்து சீர்தூக்குகிறான். அவனது தன் முனைப்பு, அகந்தை அகன்று தான் பரம்பொருளின் அம்சம் என உணர்கிறான். முடிவு வாழ்க்கை கல்வியில் தேர்ச்சி.

“தன்னை அறிந்து இன்பமுற வெண்ணிலாவே! ஒரு தந்திரம் நீ சொல்ல வேண்டும் வெண்ணிலாவே” வள்ளலாரின் பாடல் அவன் காதில் ஒலிக்கிறது. தான் இறைவனின் அம்சம் என்று உணர்ந்த மறுகணமே (யத்பாவம் த்த் பவதி) அவன் இறைவனது பேராற்றலையும், பேரறிவையும் பெறுகிறான். சாதனைகள் கைகூடுகிறது. அவன் மனம் நிறைகிறது.

மௌன நோன்பு இருவகைப்படும். ஒரு செயலைச் செய்து முடிக்க வேண்டும் என்று மன உறுதியோடு சங்கற்பம் செய்து கொண்டு அவ்வேலை முடியும் வரை பேசாமல் இருப்பது. இது மனதையும், உள்ளாற்றலையும் சிதறாமல் பாதுகாக்கும். காரியம் வெற்றியுறும். இரண்டாவது ஆன்ம தூய்மைக்காக குடும்பம், பொருளாதாரம், வாணிபம் இவற்றில் விலகி நின்று நோன்பு எடுப்பது. இந்நோன்புதான் அகத்தாய்வுக்கு உதவும். அறிவின் இயக்கத்தில் சீரமைக்க உதவும் குண்டலினி யோகம், துரியாதீத தவம் போன்றவை மௌன தவமாகாது. அவை குறுகிய கால உளப்பயிற்சியாகும்.

ஜான்கேஜ் என்பவர் “மௌனம்” என்ற புத்தகத்தில் எழுதுகிறார், எந்த சப்தமும் வராத ஒரு அறையை ஆக்ஸஃபோர்டு பல்கலைக்கழகத்தில் உருவாக்கினார்கள். கேஜ் அதில் நுழைந்ததும் இரண்டு சப்தங்களைக் கேட்டார். ஒன்று இருதயம் இயங்குகிற சப்தம். அதாவது இரத்த ஓட்டத்தின் சப்தம். (Cardiac Echo) மற்றொன்று மனம் வேலை செய்கிற சப்தம். கேஜ் ஆச்சரியமாகச் சொன்னார். “இதுவரை நான் இந்த சப்தங்களைக் கேட்டதேயில்லை.”

மௌனம் அனுசரிப்பது எவ்வளவு கடினம் என்பதைப் பற்றி ஒரு கதையுண்டு. மூன்று துறவிகள் மௌனம் இருந்தனர். ஐந்து நிமிடங்கள் ஆயிற்று. முதல் துறவி மற்றொரு துறவியின் முகத்தில் கரித்தூளைக் கண்டார். “உன் முகத்தில் கரி” என்றார். இரண்டாம் துறவி “நீ பேசிவிட்டாய்” என்றார். மூன்றாம் துறவி “நான் மட்டும்தான் பேசவில்லை” என்றார். தமிழன்பனின் உள்ளொலியை மௌனமாக்க்கேளுங்கள். உன் வார்த்தைகளிலேயே மிக அழகானது எது? உதடு திறகாமல் பதில் சொன்னது மொழி. ஓசை இல்லாமல் பதில் சொன்னது மொழி, வார்த்தை இல்லாமல் பதில் சொன்னது மொழி.

“மௌனம்”

Thursday, 23 January 2014

ஆத்துக்கரை அம்மன்!


கட்டிலில் மல்லாந்து படுத்துக்கிடந்தார் கலியமூர்த்தி. ஒரு வாரம் ஓயாமல் அடித்த டைபாய்டு காய்ச்சல் அவர் உடம்பை உருக்குலைந்துப் போட்டிருந்தது. தலை விண்ணென்று தெறித்தது. காலைக் குளிருக்கு மதிக்கடைக்கு போய் ஒரு டீ குடித்தால் தேவலாம் போல இருந்தது. எல்லாவற்றையும்விட அடுத்தவாரம் ஆத்தங்கரை நாச்சிக்கு எப்படி நீர் மோர் வார்த்து ஊற்றப்போகிறோம் என்று நினைத்த போது, கவலைகள் ஓட்டமாய் ஓடிவந்து ஒட்டிக்கொண்டன. கலியமூர்த்தியின் சொந்த கிராமத்தில் இருக்கும் ஆத்தங்கரை நாச்சியம்மன் மிகவும் சக்தி வாய்ந்த தெய்வம். வருடந்தோறும் ஆடித்திருவிழா ஏக விசேஷமாக இருக்கும். ஏழு ஊர் கூடுகிற விழா அது.

விழாவிற்கு முந்தின நாள் இரவே பக்கத்து ஊர்களில் இருந்து மக்கள் வர ஆரம்பித்து விடுவார்கள். நாற்பது வருடமாக அந்தக் கோயிலின் ஆடித்திருவிழாவிற்கு சென்று நீர்மோர் வார்த்து பக்தர்களுக்கு கொடுத்து வருகிறார் கலியமூர்த்தி. இருபது வயதிருக்கும் போது ஆரம்பித்தது. போனவருடம் வரை எந்தத் தடங்களும் இல்லாமல் நடந்து கொண்டிருந்தது. இந்த வருடம் அது முடியாமல் போய்விடுமோ என்று பயந்து கிடந்தார். கையில் காசும் இல்லை. உடம்புக்கும் முடியவில்லை என்பதை நினைத்தபோது கண்கள் கலங்கி கசிந்தது. ஆடித்திருவிழா காட்சிகள் அவருக்குள் திரையிட்டன. நீர்மோர் என்றால் சாதாரணமாக இருக்காது. அதற்காக மூன்று நாள் முழுமையாக மெனக்கெடுவார்.

திருவிழாவிற்கு முதல் நாளே பக்கத்திலிருக்கிற அத்திப்புலியூர் கிராமத்திற்கு அதிகாலையிலேயே சென்று விடுவார். அங்கிருக்கின்ற பண்ணையில் கறக்கின்ற பாலை தண்ணீர் கலக்காமல் வாங்கி விடுவார். ஐம்பது லிட்டர் பாலை பெரிய கேனில் அடைத்து தளும்ப தளும்ப கொண்டு வருவார். பிறகு மதியம் அந்தப் பாலைக் காய்ச்சி கொஞ்சம் தயிர் கலந்து பிறை ஊத்தி மூடி வைத்து விடுவார்.  மறுநாள் இரண்டு பெரிய சில்வர் கேன்களில் தயிர் ரெடியாகிவிடும். அன்று மாலையே பஸ் பிடித்து கோயிலுக்கு கிளம்பி விடுவார். ஐம்பது கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிற ஆத்தங்கரை நாச்சியம்மன் கோயிலில் அதிகாலை மூன்று மணிக்கெல்லாம் விழா ஏற்பாடுகள் தொடங்கிவிடும்.

பொங்கல் வைப்பவர்கள், முடியெடுத்து நேர்த்திக்கடன் செய்பவர்கள், கிடா வெட்டுபவர்கள், சேவல் அறுப்பவர்கள், அலகு குத்தி ஆடுபவர்கள், தேர் இழுப்பவர்கள், தீச்சட்டி தூக்குபவர்கள், காவடி ஆடுபவர்கள், மண்சோறு திண்பவர்கள், மாவிளக்குப் போடுபவர்கள், காது குத்துபவர்கள், கடலை இறைப்பவர்கள் என்று கோயில் களைகட்டும். சின்னக் கோயில் தான் தீர்த்தா நதியின் தென்கரையில் கிழக்கு நோக்கி அமர்ந்து இருக்கும் மாரியம்மன் தான் ஆத்தங்கரை நாச்சியார். ஒரு பெரிய மொட்டைத் திடலில் தான் விழா நடக்கும். பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றி விட்டு அம்மனுக்கு அர்ச்சனை செய்துவிட்டு அவரவர் ஊருக்குப் புறப்பட்டு விடுவார்கள்.

ஒரு புதிய பாத்திரத்தில் கொஞ்சம் கொஞ்சமாக கெட்டித் தயிரை முகந்து ஊற்றி கொஞ்சமாக தண்ணீர் விட்டு கலப்பார் கலியமூர்த்தி. கொண்டு வந்திருக்கும் எலுமிச்சை பழங்களை தேவையான அளவுக்கு பிழிந்து ஊற்றுவார். ஒரு ஸ்பூன் எடுத்துக் குடித்து டேஸ்ட் பார்ப்பார். டேஸ்ட் பார்க்கும்போதே புளிப்புக்காக கண்களை இடுக்கிக்கொண்டு நல்ல புளிப்பு... சூப்பரா இருக்கு... இந்தாங்க... முதல் டம்ளர்... குடிங்க... என்று பக்கத்தில் இருப்பவர்களிடம் கொடுப்பார்.
பச்சை மிளகாய் காரத்திற்கும், கறிவேப்பிலை - கொத்துமல்லி வாசத்திற்கும், நீர் மோர் வாசம் கோயில் முழுக்க மணக்கும். ஒருவருக்கே எத்தனை டம்ளர் வேண்டுமானாலும் கொடுப்பார். சிலபேர் தண்ணீர் பாட்டில்களில் கூட வாங்கி வீட்டிற்கு எடுத்துச் செல்வார்கள்.

கொளுத்துகிற வெயிலுக்கு இதமாய் நீர்மோர் குடித்துவிட்டு ''ரொம்ப... நல்லாருக்குய்யா'' வருசா வருசம் இந்த ஆத்தங்கரை ஆத்தா புண்ணியத்துல நீர் மோர் வார்த்துக் கொடுத்து நீண்ட நாள் வாழணும்யா... என்று சிலர் வாழ்த்திவிட்டு போகும்போது நீர் மோர் குடிக்காமலேயே வயிறு குளிர்ந்து விடும் கலியமூர்த்திக்கு. தன்னுடைய இரண்டு மகன்களும் கூட இருந்த போது நீர்மோர் கொடுக்க 'கூட மாட' வருவார்கள். அது பெரிய ஒத்தாசையாக இருக்கும். இப்போது இரண்டு பேருக்கும் திருமணம் ஆகி வேலை ஜோலி என்று வெளியூர் போய்விட்ட பிறகு மனைவியோடு சில வருடங்கள் திருவிழாவிற்கு சென்று நீர் மோர் கொடுத்து வந்தார்.

''சின்ன மகனுக்கு குழந்தை பிறந்திருப்பதால், குழந்தையை கவனித்துக் கொள்ள மனைவியும் நெய்வேலி போய்விட்டாள். மனைவி கூட இல்லாததுதான் கை முறிந்தது போல இருந்தது கலியமூர்த்திக்கு. ''மனைவி இருந்திருந்தால் காய்ச்சலுக்கு இந்நேரம் கசாயம் வச்சி கொடுத்திருப்பா... வெளிய போய் காசுக்கு ஏதாவது ஏற்பாடு பண்ணிருக்கலாம்... இந்தக் காய்ச்சல் காணாம போற மாதிரி ஏதாவது ஒரு மாயம் பண்ணு... மாரியாத்தா... நீர் மோர் ஊத்தறது நின்று போயிடக்கூடாது... ஆத்தா'' என்று நினைத்தபோதே வாசலில் யாரோ நாலைந்து பேர் வந்து நின்றார்கள்.

இங்க யாருய்யா... கலியமூர்த்தி... நான்தான் கலியமூர்த்தி... நீங்கள்லாம் யாரு....? - காய்ச்சலில் நடுங்கிக் கொண்டே கேட்டார். ஐயா காலைலேந்து இந்த ஊர்ல இலவச மருத்துவ முகாம் நடக்குது. கண் பார்வைக் கோளாறு... கைவலி... கால்வலின்னு... ஊரே நம்ம ஆலமரத்து திடல்ல... கூடியிருக்கு... உங்களுக்கு ரொம்ப முடியலன்னு உங்க பக்கத்து வீட்ல இருக்கிற சரவணன் சொன்னார். அதான் உங்களை விட்லயே பார்த்து சிகிச்சை கொடுத்துடலாம்னு வந்திருக்கோம்.
நூறு டிகிரி ஜுரம் இருக்குய்யா... உங்களுக்கு. சூடுதண்ணில இந்த மாத்திரையை போட்டுக்கோங்க... மூணு வேளைக்குத் தர்றோம். ஒரு வாரத்துக்கு பச்சைத்தண்ணி குடிக்காதீங்க...

மாத்திரை விழுங்கிய கொஞ்சம் நேரத்தில் உடம்பு முழுக்க வியர்த்துக் கொட்டியது. விருட்டென்று எழுந்து வாசல் திண்ணையில் வந்து உட்கார்ந்து கொண்டார். தலைவலி உடம்பு பாரம் எல்லாம் இறங்கி கொஞ்சம் புதிய காற்றை சுவாசிப்பதுபோல் இருந்தது. காய்ச்சல் போய்டுச்சி ஆத்தா.... காசு மட்டும் தான் வேணும் ஆத்தா, பசங்களும் இன்னும் காசு அனுப்பல... ''நூறு நாள் வேலை'' பார்த்த காசும் இன்னும் அக்கவுண்ட்ல ஏறல... கடைசி வீட்டுக்காரரிடம் போய் கைமாத்து கேட்டுப்பாக்கலாம்... கண்களைத் திறக்க முடியாமல் சுவரில் சாய்ந்தபடியே கவலையோடு யோசித்துக் கொண்டிருந்தார் கலியமூர்த்தி.

யாரோ வீட்டு வாசலில் பைக்கை நிறுத்திவிட்டு வருவதுபோல் தெரிந்தது. கலியமூர்த்தி தாத்தா என்னை ஞாபகம் இருக்கா...? நான்தான்யா... ஒத்த வீட்டு முருகேசன். ''முருகேசா... எப்படிப்பா... இருக்க...? நீ இப்படி ஒரு காரியம் செஞ்சிட்டு ஊரவிட்டு ஓடிப்போய்டுவன்னு நினைக்கலப்பா...'' முருகேசன் இந்த ஊரில் சீட்டுக் கம்பெனி நடத்திக் கொண்டிருந்தான். நிறைய பேர் அவனிடம் மாதச்சீட்டு சேர்ந்திருந்தார்கள். கலியமூர்த்தியும் அவர் சக்திக்கு ஏற்ற மாதிரி நூறு ரூபாய் சீட்டு சேர்ந்திருந்தார். எல்லா பணத்தையும் எடுத்துக்கொண்டு ஓடிப்போவான் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. பத்தாயிரம், இருபதாயிரம் என்று பலபேர் இவனிடம் பணம் கட்டி ஏமாந்து போயிருந்தார்கள்.

கலியமூர்த்தியும் மூவாயிரம் ரூபாய் கட்டியிருந்தார். பல வருசங்களுக்கு முன் ஓடிப்போனவன் இப்போது ஏதோ பதவிக்காக வந்து நிற்கிறான். ''தாத்தா கோச்சுக்காதீங்க தாத்தா... அப்ப இருந்த சூழ்நிலை... பிரச்னை... ஊரைவிட்டு போறதை தவிர வேற வழியில்லாம போய்டுச்சி... தாத்தா... ஆனா... நிச்சயமா உங்களையெல்லாம் ஏமாத்தனும்னு நினைக்கல தாத்தா... ''இன்னைக்கு எல்லாரோட காசையும் கொண்டு வந்திருக்கேன் தாத்தா. முதல்ல உங்களைப் பார்த்துதான் திருப்பிக் கொடுக்கணும்னு வந்திருக்கேன் தாத்தா. உடம்பு சரியில்லாம இருக்கீங்கன்னு கேள்விப்பட்டேன். இந்தக் காசை வெச்சுக்கங்க தாத்தா. உடம்பை பாத்துக்கங்க...''

ஆடித்திருவிழாவிற்கு அம்மன் கோயிலுக்கு போறீங்களா... தாத்தா...? நல்லபடியா போய் மோர் ஊத்திட்டு வாங்க... நான் இன்னைக்கு ராத்திரியே மெட்ராஸ் கிளம்பணும் தாத்தா. நிறைய பேரை பார்த்து பணத்தை திருப்பிக் கொடுக்கணும். இன்னொரு நாள் வர்றப்ப... சாவகாசமா உட்கார்ந்து பேசறேன் தாத்தா...
கலியமூர்த்தி கையில் பணத்தை திணித்து விட்டு வேகமாக போய்விட்டார் முருகேசன். எல்லாம் நல்லபடியாக நடந்தாலும், இந்த முறை சோதனைமேல் சோதனையாக ஏதோ ஒரு தடை வந்துகொண்டுதான் இருந்தது. இரண்டு கேன்கள் நிறைய தயிரைத் தூக்கிக்கொண்டு பஸ் ஸ்டாண்ட் வந்தபோது... பஸ் ஸ்டாண்டில் ஒரு பஸ்கூட இல்லாமல் வெறிச்சோடிக் கிடந்தது. பஸ் கிடைக்காமல் பயணிகள் அங்கும் இங்கும் அல்லாடிக் கொண்டிருந்தார்கள்.

உங்களுக்கும் வெவரம் தெரியாதா...? இன்னைக்கு காலைலேந்து அரசாங்க பஸ் டிரைவர் எல்லாம் ஸ்ட்ரைக் பண்றாங்களாம். ரோட்ல ஒரு வண்டியும் ஓடாதாம். ஏதோ அப்பப்ப... ஒரு தனியார் பஸ் தலை காட்டுது... அதுலயும் தாங்க முடியாத கூட்டம். இதுல எப்படி நீங்க இந்த தயிர் கேனை தூக்கிட்டு... அம்பது கிலோ மீட்டர் போய்ச்சேர்றது...? பஸ்சுக்காக காத்திருந்த இன்னொரு பெரியவர் கலியமூர்த்தியிடம் சலிப்புடன் சொல்லிக்கொண்டிருந்தார். ''நைட்டுக்குள்ளே போய் சேர்ந்தாதான் காலைல மோர் ஊத்த முடியும்யா... இப்படி பஸ் காரங்க காலை வாரிவிட்டாங்களே... நான் என்னய்யா... பண்றது, கண்ணீர் முட்டிக்கொண்டே வந்துவிட்டது கலியமூர்த்திக்கு.

நான் ஒண்டியாள்ன்னா... உருண்டு கூட போய்டுவேன்யா... தயிர்க்கேனையும், எடுத்துக்கிட்டு போகணும்யா... ஏழு ஊரு சனங்க தாகம் தணிக்கனும்யா... ஆத்தாளுக்கு இந்தத் தயிர் போய் சேரவில்லைனா என் உயிரே போய்டும்யா... இவ்வளவு தூரம் வந்துட்டேன். இப்படி சோதனை நடக்குதேய்யா... புலம்பித் தள்ளினார் கலியமூர்த்தி. ''ஐயா... அங்க பாருங்க... நீங்க போக வேண்டிய தனியார் பஸ்காரன் வர்றான். போங்க போங்க ஏற்கனவே கூட்டம் ரொம்பி வழியுது... பரவால்ல முட்டி மோதி ஏறுங்க... இதை விட்டீங்கன்னா அந்த ஊருக்கு போக வேற பஸ் இல்லை... ''ஏய் பெரிசு இவ்ளோ பெரிய கேன் வச்சுகிட்டு ஏற முடியாது... தள்ளு... தள்ளு...'' கண்டக்டர் அதட்டினார்.

''தம்பி... சாமி காரியம் தம்பி... ஊரு போய் சேரணும்யா... கொஞ்சம் பெரிய மனசு வை தம்பி.''
''அப்புறம் உன் சாமர்த்தியம் பெருசு...
முடிஞ்சா ஏறிக்கோ...'' பேசிக் கொண்டிருப்பதற்குள் பஸ் புறப்பட்டு விட்டது.
- ஏமாந்து போய் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்தார் கலியமூர்த்தி.
- ''ஐயா... நீங்க... ஈ கரைக்கா... போறீங்க...?''
- பக்கத்தில் வந்து ஒரு கார் நிற்க... காரில் இருந்தபடியே கேட்டார் டிரைவர்.
- ஆமா... ஆமா... தம்பி...

''நாங்க இங்க... சவாரி வந்தோம்யா... சவாரி இறக்கி விட்டாச்சு... சும்மாதான் திரும்பிப்போறோம்... வாங்கய்யா... நம்ம கார்ல போலாம்...'' ''கார்ல போற அளவுக்கு காசு இல்ல தம்பி...'' நீங்க ஒண்ணும் கார் வாடகை தர வேணாம்ங்கய்யா. பஸ்சுக்கு கொடுக்கற காசு குடுங்க போதும். ''ஏதோ... டீ.... டிபன்... செலவுக்கு தேறினா போதும்.'' இந்த லக்கேஜை வேற ஏத்திக்கணும் தம்பி... ஏத்திக்கலாம்யா... பின்னாடி டிக்கியில் தூக்கிப் போடுங்க... காரில் ஏறி உட்கார்ந்து கொண்டு கழுத்து வியர்வையை துண்டால் துடைத்தபடி முன்னால் பார்த்தார். கார் கண்ணாடியில் அழகாக எழுதப்பட்டிருந்தது. ''ஆத்தங்கரை நாச்சியம்மன் துணை.''

2005ம் ஆண்டுக்கு முன் வெளியிடப்பட்ட ரூபாய் நோட்டு செல்லாது

கடந்த 2005ம் ஆண்டுக்கு முன் வெளியிடப்பட்ட ரூபாய் நோட்டுகள் எதுவும் செல்லாது என ரிசர்வ் வங்கி அதிரடியாக நேற்று அறிவித்துள்ளது. மார்ச் 31 ம் தேதி வரை இந்த நோட்டுக்களை பயன்படுத்த  முடியும். அதன் பின் இவை செல்லாது. இந்த நோட்டுக்களை மாற்றிக்கொள்ள ஏப்ரல் 1ம் தேதியில் இருந்து 3 மாதம் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:கடந்த 2005ம் ஆண்டுக்கு முந்தைய ரூபாய் நோட்டுக்களை திரும்பப்பெற இந்திய ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. தற்போது புழக்கத்தில் உள்ள இந்த நோட்டுக்கள் வரும் மார்ச் 31ம் தேதிக்கு பிறகு திரும்ப பெறப்படும்.

2005ம் ஆண்டுக்கு முன்பு வெளியிடப்பட்ட ரூபாய் நோட்டுக்களின் பின்புறம், அந்த நோட்டு எந்த ஆண்டு அச்சிடப்பட்டது என்ற விவரம் இருக்காது. இதை வைத்து பொதுமக்கள் எளிதாக அதை அடையாளம் கண்டு கொள்ளலாம். இவ்வாறு ஆண்டு குறிப்பிடப்படாத ரூபாய் நோட்டுக்கள் வைத்திருக்கும் பொதுமக்கள், ஏப்ரல் 1ம் தேதி முதல் ஜூன் இறுதி வரை வங்கிகளுக்கு சென்று மாற்றிக்கொள்ளலாம். இந்த காலகட்டத்தில் நோட்டுக்களை மாற்ற எந்த ஆவணமும் தேவையில்லை.

வங்கி வாடிக்கையாளர்களும், வாடிக்கையாளர் அல்லாதவர்களும் இவ்வாறு ரூபாய் நோட்டுக்களை மாற்றிக்கொள்ளலாம். வரும் ஜூலை 1ம் தேதிக்கு பிறகு 10க்கும் அதிகமான ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்களை மாற்றுபவர்கள், தங்களது அடை யாள சான்று, இருப்பிடச்சான்றுடன், உரிய ஆவணங்கள் சமர்ப்பித்து மாற்றிக்கொள்ளலாம். இந்த அறிவிப்பு குறித்து மக்கள் பீதியடைய வேண்டாம். ரூபாய் நோட்டுக்களை மாற்றுவதற்கு அவர்கள் ஒத்துழைப்பு தரவேண்டும்.இவ்வாறு ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ரிசர்வ் வங்கி இவ்வாறு புழக்கத்தில் உள்ள பணத்தை மாற்றுவதும், வடிவத்தை மாற்றி அமைப்பதும் புதிதல்ல. 2011ம் ஆண்டு 25 பைசா நாணயங்கள் செல்லாது என ரிசர்வ் அறிவித்தது. பண வீக்கம், விலைவாசி உயர்வு காரணமாக சில்லரை நாணயங்களின் புழக்கம் வெகுவாக குறைந்து விட்டது. அதிலும் குறைப்பாக 25 பைசா நாணயங்களுக்கு கடந்த சில ஆண்டுகளாக மதிப்பின்றி போய்விட்டது.சில கடைக்காரர்களும் அதை வாங்க மறுத்துவிட்டனர்.

அதுமட்டுமின்றி, 25 பைசா மதிப்புக்கு எந்த பொருளுமே கிடைக்காது என்ற நிலை உருவானது. இதனால் இந்த நாணயங்களின் தயாரிப்பையே ரிசர்வ் வங்கி நிறுத்திவிட்டது.இந்த அறிவிப்பை தொடர்ந்து மக்கள் மூட்டை மூட்டையாக நாணயங்களை கொண்டு வந்து மாற்றிக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

*  2005க்கு முன்பு வெளியிட்ட எல்லா ரூபாய் நோட்டுகளும் 2014 மார்ச் 31க்கு பிறகு வாபஸ்.
*  கருப்பு பணம், கள்ளநோட்டுகள் புழக்கத்தைக் கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி நடவடிக்கை.
*  ஏப்ரல் 1ம் தேதி முதல் வங்கிகளில் இந்த ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம்.
*  பொதுமக்கள் பீதி அடைய வேண்டாம். மாற்றத்துக்கு ஒத்துழைப்பு தர வேண்டும்.
*  ஜூலை 1ம் தேதி முதல் ரூ.500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றும்போது, 10 நோட்டுகளுக்கு மேல் இருந்தால் அடையாளம், முகவரி ஆதாரம் தர        வேண்டும்.
*  புதிய ரூபாய் நோட்டுகளில் கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள் உள்ளதால், போலி நோட்டுகளை புழக்கத்தில் விடமுடியாது.
*  இப்போது, 5, 10, 20, 50, 100, 500, 1000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் உள்ளன.

சருமத்திற்கு தேவையான பேஷியலின் வகைகள்!

பெண்கள் மணமாகி பிள்ளை பெற்றதும் உடலில் காட்டும் கவனத்தை குறைத்து விடுகின்றனர். இதனால் அழகும், பொலிவும் தொய்ந்து போகும் முகத்திற்கு பயிற்சி வேண்டாமா? இவ்வாறு முகத்திற்கு அளிக்கப்படும் பயிற்சியே பேஷியல் என்றழைக்கப்படுகிறது. இல்லத்தரசிகளும், வேலைக்கு செல்லும் பெண்களும் 25 வயது முதல் பேஷியல் செய்து கொள்ள வேண்டும். சூரிய வெப்பத்தினாலும், தூசியினாலும் பாதிக்கப்படும் முகத்தின் சருமத்தை மாதமொருமுறை பேஷியல் செய்ய வேண்டியது அவசியம். முதலில் பேஷியல் செய்வதற்கு முன்பு என்னென்ன பேஷியலில் பல வகைகள் உள்ளன எந்த எந்த சருமத்தற்கு எந்த வகையான பேஷியல் செய்வது என தெரிந்து கொள்ள வேண்டும். அதற்கு பின்னர் மட்டுமே பேஷியல் செய்ய வேண்டும்.

இதில் பல வகை உண்டு. இவை ஒவ்வொன்றிற்கும் விதவிதமான பலன்கள் உள்ளன. பழங்களை கொண்டு செய்யும் பேஷியல், உலர்ந்த பழங்களை கொண்டு செய்யும் பேஷியல், ஹெர்பல் பேஷியல், கால்வானிக் பேஷியல், பேர்ல் பேஷியல், கோல்டு பேஷியல், அரோமா பேஷியல் என பல வகை உண்டு.

கோல்டன் பேஷியல்

இம்முறை பேஷியல் செய்வதால் சூரிய வெப்பத்தினால் சருமம் நிறும் மாறுவது, முகத்தில் ஏற்படும் கறுப்பு திட்டுகள், சுருக்கங்கள் நீக்கப்படும். இதில் முதலில் ஷாதானியம், முட்டை, பன்னீர், முதலிய கலவையை முகத்தில் 10 நிமிடம் தடவ வேண்டும். பிறது அதன் மேல் பால் தெளித்து மெதுவாக தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும். பிறகு கோல்ட்ஜெல் (அழகு சாதனங்கள் விற்கும் கடைகளில் கிடைக்கும்) தடவி மசாஜ் செய்ய வேண்டும். பிறகு முகத்தினை துடைத்து கோல்ட் பாக் தடவி கண்களை சுற்றி ஷாவீட் என்ற லோஷனை தடவ வேண்டும். கண்களின் மேல் குளிர்ச்சியான பன்னீரை காட்டனில் நனைத்து வைக்க வேண்டும். பின்னர் 15 நிமிடம் கழித்து துடைத்துவிட்டு ஷா பேஸ் என்ற க்ரீம் தடவ வேண்டும். இதுவே கோல்டன் பேஷியல். இது நன்றாக மாநிலம் உள்ளவர்கள் செய்ய வேண்டும்.

பேர்ல் பேஷியல்

மிகவும் கறுப்பான நிறம் உள்ளவர்களுக்கு இம்முறை நல்ல பலன் தரும். இதற்கு கோல்டன் பேஷியல் அளவிற்குச் செலவு செய்ய வேண்டிய அவசியமில்லை. பேர்ல் பேஷியல் கிட் என்று கேட்டால் கடைகளில் கிடைக்கும். அதில் நான்கு வகையாக கிரீம்கள் உள்ளன. அம்முறைபடி செய்தால் முக பொலிவாக மாறும்.

கால்வானிக் பேஷியல்
உலர்ந்த சருமம் மற்றும் பருக்கள் அதிகம் உள்ளவர்களுக்கு இம்முறையில் பேஷியல் செய்வது நல்லது. மிஷினின் உதவியுடன் மசாஜ் செய்யப்படும் இம்முறையில் கறுப்புத்திட்டுகள் டபுள்ஸ்கின், தொங்கு கழுத்துச்சதை முதலியவை நீங்கும்.

பூமியைப் போன்ற புதிய கிரகம் கண்டுப்பிடிப்பு!

சூரிய மண்டலத்தில், பூமியைப் போன்ற, புதிய கிரகத்தை, அமெரிக்க வானியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஹார்வர்டு -ஸ்மித்சோனியன் வான் இயற்பியல் மையத்தைச் சேர்ந்த, டேவிட் கிபிங் கூறியதாவது:

மற்றொரு சூரிய மண்டலத்தில், 200 ஒளி ஆண்டு, தூரத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள, இந்த புதிய கிரகம், பூமியை விட, 60 மடங்கு பெரிதானது. இதில் அடர்ந்த வாயுக்கள் அதிகளவில் காணப்படுகின்றன.

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான, 'நாசா'வின், கெப்ளர் விண்கலம் அனுப்பிய தகவல்களின் அடிப்படையில், இந்த கிரகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 'கே.ஓ.ஐ.-314' என, பெயரிடப்பட்ட இந்த கிரகத்தின் வெப்பநிலை, 104 டிகிரி செல்சியசாக பதிவாகியுள்ளது.

இளநரைக்கு எண்ணெய் குளியல்


சிலர் கொஞ்சம் வெள்ளை முடி தோன் றினாலே பத்து முறை கண்ணடியை பார்ப்பார்கள். அய்யோ நமக்கு வயதாகி விட்டது என்று தோன்றும்.  சிலருக்கு இளநரையும் வருவதுண்டு. அதற்கு மருதாணி தலைக்கு போட்டு கொள்வது நல்லது. இளநரைக்கு எளிய முறையில் வீட்டில் இருந்தபடியே  தீர்வு காணலாம். இளநரை உள்ளவர்கள் மருதாணி பொடி, தயிர், திக்கான டீ டிகாஷன், நன்றாக கலந்து கொள்ளுங்கள்.

(கருவேப்பிலை, வேப்பிலை சிறிது கரிசலாங்கண்ணி கீரை,பாசி பயிறு) இதெல்லாம் காயவைத்து திரித்து வைத்து கொள்ளுங்கள். இதை மேலே  குறிப்பிட்டுள்ள மெகந்தி கலவையில் கொஞ்சம் சேர்த்து கொள்ளுங்கள். இப்போது அனைத்தையும் நல்ல இட்லி மாவு பதத்திற்கு கரைத்து ஒரு  இரும்பு வானலியில் வைத்து இரவு முழுவதும் ஊறவிட்டு, காலையில் தலையில் தேய்த்து 1 மணிநேரம் ஊறவைத்து குளிக்கவும்.

இந்த கலவையை தொடர்ந்து வாரம் ஒருமுறை போட்டு வந்தால் நல்ல பலன் கிடைப்பதை காணலாம். வாரம் இருமுறை நல்லெண்ணை தேய்த்து  எண்ணெய் குளியல் போட்டாலும் நரை முடி வருவதை தவிர்க்கலாம். இது உடல் சூட்டையும் தணிக்கும். ஒரு நாள் விட்டு ஒரு நாள் நல்லெண்ணை  தேய்த்து மசாஜ் செய்து குளித்தால் கூட இளநரை வராமல் இருக்கும்.

செடிக்கு எப்படி தண்ணீர் ஊற்றி வளர்க்கிறோமோ அப்படி தான் முடிக்கும். நிறைய எண்ணெய் தலையில் தேய்த்து மசாஜ் செய்து வாரம் இருமுறை  குளித்தால் முடியும் வளரும். நல்ல ஷைனிங்கும் கிடைக்கும். முடி செம்பட்டையாகாமல் இருக்கும் கருவேப்பிலை பொடி, கறிவேப்பிலையை உணவு  அதிக அளவில் சேர்த்து கொண்டால் தலை முடி கருகருவென வளரும். நரைமுடி வருவதையும் தவிர்க்கலாம்.